நேற்றைய இடுகையைப் படித்த நண்பர் ஒருவர் இப்படி பின்னூட்டமிட்டிருந்தார்:
"இது ஏற்கனவே நீங்க போட்ட மொக்க தானே? மீள்பதிவா?
அன்புடன்
மயில் ராஜபாண்டியன்"
எனக்கு அவரின் பின்னூட்டத்தைப் பார்த்தவுடன் பயங்கர சந்தோசம். உண்மையாகவே நான் ஏற்கனவே எழுதிய சப்ஜக்டா என்று எனக்குத் தெரியவில்லை. இப்போது வரை தேடிக்கொண்டிருக்கிறேன், என்னால் எந்த இடுகையில் எழுதியிருக்கிறேன் என்று கண்டுபிடிக்கவில்லை. சில சமயம் இப்படி ஆகிவிடுகின்றது. நம்மை அறியாமலேயே இந்த தவறு நேர்ந்துவிடுகிறது என்று நினைக்கிறேன்.
அவர் ''மீள்பதிவா?" என்று கேட்டிருந்தார். இது என்னுடைய 275வது இடுகை. கூட்டிப்பார்த்துவிட்டு என்ன கம்மியாக இருக்கிறதே? 275 வரவில்லையே என கேட்க வேண்டாம். என்னுடைய இரண்டு புத்தகங்களில் இடம் பெற்றிருக்கும் கதைகள், கட்டுரைகள் என் வலைத்தளத்தில் இப்போது இல்லை.
இந்த 275 இடுகைகளில் ஒரு மீள்பதிவு கூட கிடையாது. ஏன் என்றால் மீள்பதிவு போடுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. விசயம் இருந்தால் எழுதுவேன். இல்லை என்றால் எழுதமாட்டேன். தினமும் ஏதாவது பதிவிடவேண்டும் என்ற எண்ணத்தில் மீள்பதிவிட மாட்டேன்.
நான் ஏன் நண்பரின் பின்னூட்டத்தைப் பார்த்து சந்தோசப்பட்டேன் என்றால், எழுதிய நான் மறந்துபோன விசயத்தை அவர் நினைவு வைத்திருந்து சொல்கிறார் என்றால், நண்பர் என்னை எப்படி ஆழ்ந்து படிக்கிறார் பாருங்கள். அதனால்தான் அதிகம் சந்தோசப்பட்டேன்.
நண்பர் நேற்று நான் எழுதியது ஏற்கனவே எழுதிய மொக்கை என்று கூறிவிட்டதால், அந்த இடுகையை தொடர்வதில் எனக்கு உடன்பாடில்லை. அதே நேரத்தில் நான் சொல்ல வந்த விசயத்தை சொல்ல ஆசைப்படுகிறேன்.
பொதுவாக எந்த ஒரு கருத்தையோ அல்லது சமபவத்தைப் பற்றியோ விவரிக்கும்போது, என் வாழ்க்கையில் நடந்த ஏதாவது ஒரு அனுபவம் மூலம் விளக்கவே ஆசைப்படுவேன். அதனால்தான் நேற்று அப்படி ஆரம்பித்தேன்.
ஒரு பிரச்சனையை எப்படி அணுக வேண்டும்? எப்படி சமாளிக்க வேண்டும்? எப்படி பதட்டப்படாமல் முடிவு எடுக்க வேண்டும்?
இந்த அத்தனை கேள்விகளுக்கும் பதில் காண்பது அவ்வளவு சுலபம் அல்ல. அன்று நடந்த உலக கோப்பை கிரிக்கெட்டில் கேப்டன் தோனி நடந்து கொண்ட விதத்தைப் பாருங்கள். இலங்கை முதலில் பேட் செய்யும்போது ரன் ரேட் விகிதம் 2. ஆனால் கடைசி 5 ஓவர்களில் அவர்கள் நம் பவுலர்களை விளாசித்தள்ளிதனால் ரன் ரேட் உயர்ந்தது. இந்த இரண்டு சமயங்களிலும் தோனியின் முகத்தில் என்னால் எந்தவித உணர்ச்சியும் பார்க்க முடியவில்லை. மிகச் சாதாரணமாக வைத்து இருந்தார்.
இந்தியாவே ஆவலாக பார்த்துக்கொண்டிருக்கும் போது சேவாக் அவுட் பின் டெண்டுல்கர் அவுட். பார்த்தவர்கள் அனைவருக்கும் ஒரே ஷாக். கம்பீர் வந்து ஓரளவு ஆடிக்கொண்டிருக்கையில், அடுத்தவரும் அவுட். அப்போது யுவராஜ்சிங் விளையாட வேண்டும். ஆனால் ஆர்டரை மாற்றி தோனி இறங்குகிறார். அதற்கு எவ்வளவு தைரியம் வேண்டும். அதுமட்டும்மல்ல. கேப்டன் என்ற பொறுப்பை உணர்ந்து மிக மிக சரியான பந்துகளை மட்டும் தேர்ந்து எடுத்து, ஆரம்பத்தில் ஒன்று, இரண்டு என்று அடிக்க ஆரம்பித்தவர் பின் நான்கும் ஆறும் அடித்தார்.
30,000 ஆயிரம் பார்வையாளர்கள் அரங்கத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். உலகம் முழுவதும் டிவியில் பார்க்கிறது. ஏதேனும் தவறு நடந்து தோற்றிருந்தால் அது தோனியால்தான் என்று சொல்லி அவரை உண்டு இல்லை என்று செய்திருப்பார்கள். ஆனால் அவர் அதைப் பற்றி எல்லாம் நினைக்காமல், நிதானமாக மிக மிக நிதானமாக, வெற்றி ஒன்றை மட்டுமே குறிக்கொளாய் கொண்டு, எவ்வளவு பொறுமையாக விளையாண்டார் பாருங்கள்.
அந்த நிதானம்தான் நாம் அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டியது. ஒவ்வொருவரும் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டியது. வெற்றி பெற்று பந்து சிக்ஸர் போகும் போது கூட, யுவராஜ் சிங் வெளிப்படுத்திய அளவு தோனி தன் மகிழ்ச்சியை வெளியே காண்பிக்கவில்லை. என்ன ஒரு நிதானம் பாருங்கள். மற்றவர்கள் போல் அவர் கத்தவோ, குதிக்கவோ இல்லை.
டென்ஷனின் போதும், வெற்றியின்போதும் அவருக்கு இருந்த அந்த நிதானம் மட்டும் ஒவ்வொரிடமும் இருந்தால், எந்த பிரச்சனையும் யாரையும் அண்டாது. இது நான் அவரிடம் கற்றுக்கொண்ட மிகப்பெரிய மேனேஜ்மெண்ட் பாடம்.
எனக்கு தோன்றியதை இங்கே எழுதிவிட்டேன். இதை ஒத்துக்கொண்டு படிப்பதும், மொக்கை என்று ஒதுக்கித் தள்ளுவதும் உங்கள் விருப்பம்.
12 comments:
நன்றாகத்தானே இருக்கிறது.
சான்ஸே இல்லை கேப்டனின் நிதானம்.வயதிற்கு மீறிய குணம்.அதான் கேப்டனாக இருக்கிறார்.
தோனியிடம் நீங்கள் இன்னும் கற்க வேண்டும் என்பதை உங்கள் உதாரணத்தாலேயே நிருபித்து விட்டீர்களே? எவனோ ஒரு அனானி பொழுது போகாமல் உளறியதற்காக செய்ய நினைத்ததை விட்டு விடலாமா?
தோனியைப் பார்த்து கற்றுக் கொள்ளவும்
அன்புடன்,
டோண்டு ராகவன்
Hi உலக்ஸ்,
இன்று பாகம் 1 படிக்கும்போது, ஏன் இவர் repeat செய்திருக்கிறார் என்றுதான் நானும் நினைத்தேன்.
Here is the link
கோபம் எங்கே ஆரம்பிக்கிறது???
http://www.iniyavan.com/2009/12/blog-post.html
அன்புடன்,
பாஸ்கர்
I also remembered that post.
But I was able to get it .
Here you go ...
http://www.iniyavan.com/2009/12/blog-post.html
I also remembered that post.
After a little search, here
it is ...
http://www.iniyavan.com/2009/12/blog-post.html
//நன்றாகத்தானே இருக்கிறது.//
வருகைக்கு நன்றி விஜேஆர்
//அமுதா கிருஷ்ணா said...
சான்ஸே இல்லை கேப்டனின் நிதானம்.வயதிற்கு மீறிய குணம்.அதான் கேப்டனாக இருக்கிறார்.//
வருகைக்கு நன்றி அமுதா.
dondu(#11168674346665545885) said...
தோனியிடம் நீங்கள் இன்னும் கற்க வேண்டும் என்பதை உங்கள் உதாரணத்தாலேயே நிருபித்து விட்டீர்களே? எவனோ ஒரு அனானி பொழுது போகாமல் உளறியதற்காக செய்ய நினைத்ததை விட்டு விடலாமா?
தோனியைப் பார்த்து கற்றுக் கொள்ளவும்
அன்புடன்,
டோண்டு ராகவன்
வருகைக்கு நன்றி டோண்டு சார்.
//Hi உலக்ஸ்,
இன்று பாகம் 1 படிக்கும்போது, ஏன் இவர் repeat செய்திருக்கிறார் என்றுதான் நானும் நினைத்தேன்.
Here is the link
கோபம் எங்கே ஆரம்பிக்கிறது???
http://www.iniyavan.com/2009/12/blog-post.html
அன்புடன்,
பாஸ்கர்//
சுட்டி காட்டியமைக்கு நன்றி கதிர் பாஸ்கர்
//Ravi said...
I also remembered that post.
But I was able to get it .
Here you go ...
http://www.iniyavan.com/2009/12/blog-post.html//
சுட்டி காட்டியமைக்கு நன்றி ரவி.
//Ravi said...
I also remembered that post.
After a little search, here
it is ...
http://www.iniyavan.com/2009/12/blog-post.html//
வருகைக்கு நன்றி ரவி
Post a Comment