ஏன் முன்பு மாதிரி 'மிக்ஸர்' எழுத மாட்டேங்கறீங்க? நல்லா இருக்குமே? தொடர்ந்து எழுதக்கூடாதா? என்று கேட்டு தினமும் நூறு மெயில்களும், போன்கால்களும் வராவிட்டாலும், அந்த ஒரு குறிப்பிட்ட பிரபலமான (?) எழுத்தாளர் கேட்டுக்கொண்டதால், அவர் விருப்பத்திற்கு இணங்க இனி வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் மிக்ஸர் வெளியாகும்.
யார் அந்த எழுத்தாளர் என்பதை அறிய நீங்கள் கடைசி வரி வரை காத்திருக்க வேண்டும்.
************************************************************
தமிழ் எழுத்துலக சக்கரவர்த்தி சுஜாதா அவர்களின் "கணையாழி கடைசிப் பக்கங்கள் 1965-1998" (உயிர்மை வெளியீடு) படித்துக்கொண்டிருக்கிறேன். நான் பிறப்பதற்கு முன்பிலிருந்து அவர் எழுதியவைகளை, இப்போது படிக்கும் போது சுவையாக இருக்கிறது. அந்தக் காலத்திலேயே எல்லா விசயங்களையும் எழுதியிருக்கிறார். ஆகஸ்ட்-செப்டம்பர், 1966ல் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி:
"தமிழ் பத்திரிகைகளில் 'தைரியம், தரம்' இரண்டும் கிடையாது.'க்ரிடிஸிஸம்' என்பது மருந்துக்கும் கிடையாது. ஒரு வருஷத்தில் நம் தமிழ்ப் பத்திரிகைகளில் சுமார் 1,500 கதைகள் வரலாம்.இதில் 3 அல்லது 4 கதைகள் சுமார் ரகத்தில் சேர்கின்றன. மற்றவை அனைத்தும் குப்பை. இவைகளைப் பதிப்பிப்பதற்குப் பதிலாக 16-ஆம் வாய்ப்பாட்டைப் பிரசுரிக்கலாம்"
நல்ல வேளை என் சிறுகதை தொகுப்பு வெளியான சமயத்தில் சுஜாதா உயிருடன் இல்லை.
*************************************************************
சென்ற வாரம் சனிக்கிழமை மிகுந்த யோசனைக்குப் பிறகு "கோ" படம் சென்றோம். தியேட்டரில் மொத்தம் 8 பேர்தான், எங்கள் நால்வரையும் சேர்த்து. படம் முதலில் நன்றாக ஆரம்பித்து, இழு இழு என்று இழுத்து முடிவு பரவாயில்லாமல் இருக்கிறது. பாட்டு, சாரி மிஸ்டர் ஹரிஸ் ஜெயராஜ். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!. எல்லாப் பாடல்களுமே கேட்ட பாடல் போலவே இருக்கிறது. பாடல்கள் சமயத்தில் எல்லோரும் எழுந்து வெளியே போய்விட்டார்கள். எல்லோரும் என்றால் எங்கள் நால்வரைத் தவிர. படத்தில் நகைச்சுவை நடிகர்கள் இல்லாதது பெரிய குறையாக இருக்கிறது. ஹீரோயின்....சாரி. இந்தப் படத்தை எப்படி ஹிட் படம் என்கிறார்கள் என்று தெரியவில்லை.
*************************************************************
நேற்று எதேச்சையாக மலேசிய சேனலான 'வானவில்' பார்த்தேன். பார்த்தால் லைவ் ரிலே, எல்லாம் நம்ம ஊர் சின்னத்திரை நட்சத்திரங்கள். ஏதோ இன்றும், நாளையும், நாளை மறுநாளும் கலை நிகழ்ச்சி செய்ய வந்திருக்கின்றார்களாம். அவர்கள் அனைவரும் எப்படி ரசிகர்களை நிகழ்ச்சி பார்க்க அழைத்தார்கள் தெரியுமா?
"நாங்களெல்லாம் இந்தியாவிலிருந்து கஷ்டப்பட்டு உங்களுக்காக நிகழ்ச்சி வழங்குவதற்காக வந்திருக்கிறோம். அதனால், தயவு செய்து நிகழ்ச்சியைப் பார்க்க வாங்க. உங்களை எண்டர்டெயிண்ட்மெண்ட் செய்ய நாங்கள் காத்திருக்கிறோம். டிக்கட் வாங்குவதற்கு இந்த எண்ணில்..... அழையுங்கள்"
ஒருவர் போன் செய்து இப்படி ஒரு கேள்வி கேட்டார்,
"ஏன் தமிழ் சீரியல்களில் எல்லாம் பெண்களையே வில்லியா காமிக்கறீங்க?"
பதில்: "தேவிப்பிரியாவை பாருங்க. வில்லியா நடிக்கும்போது தானே அவங்க நடிப்புத் திறமை வெளிப்படுது"
என்ன மாதிரி ஒரு பதில் பாருங்க?
*************************************************************
நேற்று டிவியில் ஒரு பழைய படத்தோட விளம்பரம் போட்டாங்க. படத்தோட பெயர் "ஒற்றையடி பாதையிலே" ஹீரோ சங்கர் கணேஷ். விளம்பரத்தை பார்த்த பையன் கேட்டான்,
"ஏம்ப்பா யாரு ஹீரோ?"
"இவர்தான்" என்று சங்கர் கணேஷை காண்பித்தேன்.
''இவரா?" என்று சிரி சிரி என்று சிரித்தான்.
ஜென்ரேஷன் கேப்........
*************************************************************
என் பொண்ணு என் பையனைப் பார்த்து கேட்டா,
"உனக்கு அம்மா பிடிக்குமா? அப்பா பிடிக்குமா?"
"இரண்டு பேரையும்"
"உனக்கு என்னைப் பிடிக்குமா, அப்பாவைப் பிடிக்குமா?"
"இரண்டு பேரையும்தான்"
"நான் அழகா இல்லை அப்பா அழகா?"
"இரண்டு பேரும் அழகு"
"நடிகர் விஜய் ஹேண்ட்சம்மா இல்லை அப்பாவா?"
"அப்பாத்தான்"
பொய்யாக இருந்தாலும் அவனின் பதில்களிலானால் ஒரு வித சந்தோசத்துடன் மாடியை நோக்கிச் சென்றேன்.
இரண்டு பேரும் ஏதோ பேசிக்கொள்வது லேசாக காதில் விழுந்தது. அவர்களுக்குத் தெரியாமல் கூர்ந்து கவனித்தேன்.
"ஏண்டா பொய்தானே சொன்ன? அன்னைக்கு விஜய் ரொம்ப ஹேண்ட்சம்ன?"
பையன்: "நாளைக்கு விஜயா எனக்கு பிஸா வாங்கித்தருவாரு?"
*************************************************************
முதல் பாராவுக்கான விடை. வேற யாரு? அந்த எழுத்தாளர் நான் தான். (நம்மளை எந்த எழுத்தாளர் கூப்பிட்டு பேசப்போறாரு?)
*************************************************************
13 comments:
சுய எள்ளல் நல்லாருக்கு :)
//"ஏண்டா பொய்தானே சொன்ன? அன்னைக்கு விஜய் ரொம்ப ஹேண்ட்சம்ன?"
பையன்: "நாளைக்கு விஜயா எனக்கு பிஸா வாங்கித்தருவாரு?"//
Class =))
கோ ரொம்ப நல்லா இருக்கு என்று பையன்கள் (என் பையனில்லை. பிரன்ட்ஸ்) சொன்னார்கள். ஜெனரேசன் கப்போ ஹி ஹி.
// ஹீரோ சங்கர் கணேஷ் //
நானும் அந்தப் படத்தோட விளம்பரம் பார்த்துத்தான் சங்கர் கணேஷ் லாம் ஹீரோவா நடிச்சிருக்காருன்னு தெரிஞ்சுக்கிட்டேன் அண்ணா. :)
//"நாளைக்கு விஜயா எனக்கு பிஸா வாங்கித்தருவாரு?" //
ஹா ஹா.. செம ஸ்மார்ட்! :)
hmm continue..
கடைசியில் விடை நச்..
//நம்மளை எந்த எழுத்தாளர் கூப்பிட்டு பேசப்போறாரு?)//
நான் பேசினேனேண்ணே..
//விந்தைமனிதன் said...
சுய எள்ளல் நல்லாருக்கு :)//
வருகைக்கு நன்றி விந்தைமனிதன்
// அனாமிகா துவாரகன் said...
//"ஏண்டா பொய்தானே சொன்ன? அன்னைக்கு விஜய் ரொம்ப ஹேண்ட்சம்ன?"
பையன்: "நாளைக்கு விஜயா எனக்கு பிஸா வாங்கித்தருவாரு?"//
Class =))
கோ ரொம்ப நல்லா இருக்கு என்று பையன்கள் (என் பையனில்லை. பிரன்ட்ஸ்) சொன்னார்கள். ஜெனரேசன் கப்போ ஹி ஹி.//
தங்களின் முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி அனாமிகா
// Balaji saravana said...
// ஹீரோ சங்கர் கணேஷ் //
நானும் அந்தப் படத்தோட விளம்பரம் பார்த்துத்தான் சங்கர் கணேஷ் லாம் ஹீரோவா நடிச்சிருக்காருன்னு தெரிஞ்சுக்கிட்டேன் அண்ணா. :)
//"நாளைக்கு விஜயா எனக்கு பிஸா வாங்கித்தருவாரு?" //
ஹா ஹா.. செம ஸ்மார்ட்! :)//
வருகைக்கு நன்றி பாலாஜி சரவணா.
// சமுத்ரா said...
hmm continue..//
நிச்சயம். வருகைக்கு நன்றி.
// அமுதா கிருஷ்ணா said...
கடைசியில் விடை நச்..//
வருகைக்கிற்கு நன்றி மேடம்.
// பரிசல்காரன் said...
//நம்மளை எந்த எழுத்தாளர் கூப்பிட்டு பேசப்போறாரு?)//
நான் பேசினேனேண்ணே..//
அப்படியா!
நல்ல நகைச்சுவை நடை
Post a Comment