May 4, 2011

குறை ஒன்று உண்டு -10


அதற்குள் லன்சுக்கு போன அனைவரும் வந்துவிட வீணா என்னை ஒரு மாதிரி பார்த்து முறைத்துவிட்டு அவள் டேபிளுக்கு சென்றாள். எனக்கும் ஒரு மாதிரிதான் இருந்தது. அவளிடம் நான் நடந்துகொண்ட முறை எனக்கே பிடிக்கவில்லை. இப்படியே ஒரு மாதம் போனது.

ஒரு நாள் காலை. நான் சீக்கிரமே ஆபிஸ் வந்துவிட்டேன். நான் வந்த கொஞ்ச நேரத்திற்கு எல்லாம் வீணாவும் வந்துவிட்டாள். வந்தவள் நேராக என் சீட்டிற்கு வந்து ஸ்வீட் பாக்ஸை நீட்டி ஸ்வீட் எடுத்துக்கச் சொன்னாள்.

"என்ன வீணா என்ன விசேசம்"

"இன்னைக்கு என்னோட பிறந்த நாள்"

"பிறந்த நாள் வாழ்த்துகள்"

"நன்றி சார்"

நேராக நிமிர்ந்து அவளைப் பார்த்தேன். புது புடவையில் இருந்தாள். தலை நிறைய மல்லிகைப்பூ. மஞ்சள் அதிகம் தேய்த்து குளித்த முகம். இன்று என்னவோ பெரிய குங்கும பொட்டு வைத்திருந்தாள். பார்க்க ஏதோ அம்மனை பார்ப்பது போல் இருந்தது. இந்த காரணத்தினால், அவளை கழுத்துக்கு கீழே பார்க்க மனம் இடம் கொடுக்கவில்லை.

"என்ன சார்? என்ன அப்படி பார்க்கறீங்க?''

அவள் குரல் என்னை இந்த உலகத்திற்கு கொண்டு வந்தது. எனக்கு ஒரு மாதிரி வெட்கமாக போய்விட்டது. அவள் என்னைப் பார்த்து கேட்குமளவிற்கு அல்லவா அவளை நான் பார்த்திருக்கிறேன்.

"ஒண்ணும் இல்லை. சும்மாத்தான் பார்த்தேன்"

"இல்லை உங்க பார்வை சரியில்லை"

"இல்லை வீணா, என்னை நம்பு"

"நான் நம்பனும்னா, என்னோட நீங்க சாயந்திரம் வெளிய சாப்பிட வரணும். ஓக்கேயா?"

"ம்ம்"

"ஏன் அதை கொஞ்சம் சிரிச்சுட்டே சொல்றது" என்று சொல்லிவிட்டு சென்றவளை ஆச்சர்யமாக பார்த்தேன்.

என்னையறியாமல் எப்போது ஆபிஸ் முடியும் என்று காத்திருந்தேன். 5.40க்கு ஆபிஸ் வெளியே காத்திருந்தாள்.

"போலாமா?" என்றாள்.

ஒரு ஆட்டோ பிடித்தோம். அருகில் உள்ள அந்த புகழ்பெற்ற ஹோட்டலில் நிறுத்தச்சொன்னாள். உள்ளே நுழைந்தோம். மிக பணக்காரர்கள் செல்லும் ஹோட்டல் அது. ரொம்ப சுத்தமாக இருந்தது. லை எல்லாம் டிம்மாக இருந்தது. உள்ளே பேமிலி ரூமுக்கு சென்றோம்.

"என்ன சாப்படறீங்க?"

"நீங்கதான் பர்த்டே பேபி. நீங்களே ஆர்டர் செய்ங்க" என்றேன்.

'முதல்ல நீங்க என்று சொல்வதை நிறுத்திவிட்டு , நீ ன்னே பேசுங்க" என்றவள் அவளே எனக்கும் சேர்த்து ஆர்டர் செய்தாள். சாப்பாடு வருவத்ற்கு சில நேரம் ஆகவே,

"சார், அன்னைக்கு நான் கேட்ட கேள்விக்கு நீங்க இன்னும் பதிலே சொல்லவில்லை"

"என்ன கேட்டீங்க?"

"ஏன் சார், எப்பவும் ஒருமாதிரி மூடியா இருக்கீங்க, அப்படின்னு கேட்டேனே?"

"ஓ அதுவா, நல்ல நாளும் அதுவுமா, என்னைப் பத்தி தெரிஞ்சு என்ன செய்யப்போறீங்க?"

"ப்ளீஸ் சொல்லுங்க"

சொல்ல ஆரம்பித்தேன். "சிறு வயதிலிருந்து எனக்கு ஏற்பட்ட அவமானங்கள், எனக்கு சரியாக படிப்பு வராதது, அதனால் வீட்டில் என்னை யாரும் மதிக்காதது, என்னை உதவாக்கரை என்று அனைவரும் திட்டுவது, என்னிடம் யாரும் சரியாக பேசாதது, உறவினர்கள் முன் அனைவரும் என்னை அவமானப்படுத்துவது"  என்று அனைத்தையும் சொன்னேன்.

சொல்லிமுடித்துவிட்டு அவளை நிமிர்ந்து பார்த்தேன். அவள் கண்களின் ஓரத்தில் கண்ணீர்த் துளிகள்.

"சாரி சார், நான் நினைச்சே பார்க்கலை. இவ்வளவு அவமானங்களை நீங்க தாங்கிட்டு வாழ்ந்துட்டு இருக்கீங்கன்னு"

"ம்ம்ம்"

"நான் பர்த் டே பரிசா ஒண்ணு உங்ககிட்டே கேட்கலாமா?"

"என்ன?"

- தொடரும்

No comments: