May 11, 2011

குறை ஒன்று உண்டு -13


"உண்மையா வீணா?"

"உண்மைதான், தொல்லை தாங்க முடியலை"

"நீ என்ன சொன்ன?"

"முடியவே முடியாதுன்னுட்டேன்"

அவள் சொன்ன விசயம் இதுதான். என் பாஸ் ராஜா, வீணாவைக் கூப்பிட்டு பேசியிருக்கிறான். ஆபிஸ் வேலை முடிந்தவுடன், அவன் அவளை மிகவும் காதலிப்பதாகவும், கல்யாணம் பண்ணிக்கொள்ள விரும்புவதாகவும் சொல்லி இருக்கிறான். இவள் அதைக்கேட்ட அதிர்ச்சியில் என்னிடம் ஓடி வந்துவிட்டாள்.

"நீ உண்மையை சொல்ல வேண்டியதுதானே வீணா?"

"என்னன்னு சொல்ல சொல்றீங்க?"

"நம்ம கல்யாணம் பண்ணிக்கப்போறதை பத்தி"

"இப்போ சொன்னா அநாவசிய பிரச்சனை வராதா?"

"என்னை பிரச்சனை வரும்னு எதிர்பார்க்கற?"

"நாம கல்யாணம் பண்ணப்போற விசயம் வேற யாருக்கும் தெரியாது"

"இல்லை முருகனுக்கு மட்டும் தெரியும்"

"சொல்லியாச்சா?"

"நான் சொல்லலை, அவனா தெரிஞ்சுகிட்டான், மேல சொல்லு"

"மேலும் ராஜா நாம இரண்டு பேருக்கும் பாஸ். அவருக்கு நான் உங்களை காதலிக்கிறேன்னு தெரிஞ்சா, உங்க மேல அநாவசிய கோபம் வரும். அது அவ்வளவு நல்லா இருக்காது"

"என்ன வீணா பேசற நீ. எப்படி இருந்தாலும் ஒரு நாளைக்கு தெரியத்தானே போகிறது?"

"நான் இல்லைன்னு சொல்லலை"

"அது இன்னைக்கே தெரிஞ்சா என்ன தப்பு"

"எனக்கு ஒரே குழப்பமா இருக்குங்க"

"இதுல குழம்பறதுக்கு ஒன்னும் இல்லை. நான் வேணா அவர்கிட்ட சொல்லவா?"

"என்னன்னு சொல்வீங்க?"

"நான் வீணாவை காதலிக்கிறேன் சார். அவளைதான் கல்யாணம் செய்யப்போறேன்னு"

"லூஸாப்பா நீங்க. சம்பந்தமே இல்லாம நீங்க போய் சொன்னா இன்னும் கோபம் வராது. உன் கிட்ட நான் எதுவுமே சொல்லலை நீ ஏன் என்கிட்ட பேசறேனு கேட்க மாட்டார்"

"அப்ப என்னை என்னதான் பண்ண சொல்ற? நீயும் சொல்ல மாட்ட, என்னையும் சொல்ல விடமாட்ட"

"நானே சமயம் பார்த்து சொல்றேன்"

"என்னவோ போ"

அதற்குள் என்னை ராஜா கூப்பிடவே நான் அவரின் ரூமை நோக்கி சென்றேன்.

அதன்பிறகு சில நாட்கள் அப்படியே கழிந்தன. ராஜாவின் டார்ச்சர் அதிகமாக இருப்பதாக வீணா சொல்லிக்கொண்டிருந்தாள். எனக்கு கோபம் அதிகமாகிக்கொண்டே இருந்தது.

ஒரு நாள் மாலை என்னை கோவிலுக்கு வருமாறு கூப்பிட்டாள். கடுப்புடன் சென்றேன். சாமி கும்பிட மனமே இல்லை. அவளுக்காத்தான் சென்றேன். அர்ச்சனை முடிந்து வந்து பிரகாரத்தில் சிறிது அமர்ந்தோம். அவள்தான் பேச்சை ஆரம்பித்தாள்,

"ஏங்க ராஜா என்னை ரொம்ப நேசிக்கறதா சொல்லிச் சொல்லி டார்ச்சர் பண்றாருங்க"

நான் பதில் ஏதும் சொல்லவில்லை. என்னை கோபமாக பார்த்தவள்,

"என்னங்க நான் பாட்டுக்கு பேசிட்டே இருக்கேன், நீங்க பதிலே சொல்ல மாட்டேங்கறீங்க?"

"என்ன சொல்லச் சொல்ற?"

"என்னவோ யாரோட பிரச்சனையோ மாதிரி பேசறீங்க"

"இந்த பிரச்சனைத் தீர ஒரே வழிதான் இருக்கு"

"என்ன வழி?" என்று என்னைக் குழப்பமாக பார்த்தாள்.

"பேசாமல் நீ ராஜாவையே கல்யாணம் செய்துக்கொள்"

-தொடரும்5 comments:

குடந்தை அன்புமணி said...

http://thagavalmalar. blogspot.com/2011/05/blog-post.html வாருங்கள். ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.

dondu(#11168674346665545885) said...

எனக்கென்னவோ அந்த வீணா என்கிற பெண் மேலத்தான் சந்தேகமே. வேண்டுமென்றே இருவரையும் உசுப்பி வந்திருக்கிறாள். அவளே கூட ரகசியத்தை வெளியிட்டிருக்கலாம்.

இந்த 2 ஆம்பிள்ளைகளும் அது தெரியாம ஒத்தன் இன்னொருத்தனை வில்லனா நினைத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

iniyavan said...

//குடந்தை அன்புமணி said...
http://thagavalmalar. blogspot.com/2011/05/blog-post.html வாருங்கள். ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.//

போய் பார்த்தேன். ஒரு இன்ப அதிர்ச்சியும் இல்லையே?

iniyavan said...

//எனக்கென்னவோ அந்த வீணா என்கிற பெண் மேலத்தான் சந்தேகமே. வேண்டுமென்றே இருவரையும் உசுப்பி வந்திருக்கிறாள். அவளே கூட ரகசியத்தை வெளியிட்டிருக்கலாம்.

இந்த 2 ஆம்பிள்ளைகளும் அது தெரியாம ஒத்தன் இன்னொருத்தனை வில்லனா நினைத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்// ஆமாம் சார். நீங்கள் சொல்வது போல் கூட இருக்கலாம். வருகைக்கு நன்றி டோண்டு சார்.

iniyavan said...

Sumathi Karthikeyan to me
show details 7:25 PM (37 minutes ago)
மதிப்பிற்குரிய திரு. உலகநாதன் அவர்களுக்கு,

உங்கள் ப்ளோக்கை படித்தேன். நன்றாக உள்ளது.

உங்கள் தொடர்கதை "குறை ஒன்று உண்டு" படித்தேன். சுவாரசியமாக உள்ளது.

அடுத்தது என்னவென்று... தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கு.

கதை நன்றாக வளர என் வாழ்த்துகள்.

நன்றி
சுமதி கார்த்திகேயன்