சிறு வயதில் இருந்தே எனக்கு அரசியலில் அதிக ஈடுபாடு உண்டு. நண்பர்களிடம் அதிகமாக அரசியல் பேசுவேன். இணையத்தில் அரசியல் பேசுவதில்லை. இந்த முறை நான் ஓட்டுப்போடவில்லை. இருந்தாலும் நேற்றிலிருந்து ஒருவித பரபரப்பு என்னை ஆட்கொண்டுள்ளது. (நேற்று பிளாக்கர் சொதப்பிவிட்டதால், இதற்கு பின் எழுதியவைகள் இப்போது தேவையில்லை. அதான் முடிவு தெரிந்துவிட்டதே)
*******************************************************
முன்னாள் கலிபோர்னியா கவர்னர் அர்நால்ட் Schwarzenegger (எப்படி தமிழில் எழுதுவதென்பது எனக்குத் தெரியவில்லை) தன்னுடைய மனைவியை (மரியா ஷ்ரிவர்) விட்டு பிரியப்போகிறாராம். அர்நால்ட் ஆஸ்திரேலியாவில் பிறந்தவர் என்பதும், அவர் ஒரு பாடிபில்டர் என்பதும் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த விசயம்தான். அர்நால்ட்க்கு தற்போது 63 வயது, அவர் மனைவிக்கு 55 வய்து. அவர்கள் திருமணம் நடந்த வருடம் 1986. கிட்டத்தட்ட 25 வருடம் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு மொத்தம் நான்கு குழந்தைகள். ஆனால், அவர்கள் விவாகரத்து பெறப்போவதாக சொல்லவில்லை. ஆனால் பிரிந்து வாழப்போகிறார்களாம். எங்கள் நான்கு குழந்தைகளுக்கும் நாங்கள் எப்போதும் பெற்றோர்கள்தான் என்கிறார்கள் இருவரும். அவர்கள் இருவரும் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?
"நாங்கள் இருவரும் நீண்ட சிந்தனைக்குப்பிறகு, நிறைய யோசித்து, நிறைய பேசி இந்த முடிவை எடுத்திருக்கிறோம்"
எனக்கு ஒரு விசயம் புரியவில்லை. 25 வருடம் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள். பிரச்சனைகள் ஏதேனும் வந்திருக்கலாம். அதை பேசி தீர்த்துக்கொள்ளாமல் ஏன் பிரிந்து வாழ முடிவெடுத்தார்கள் என்று தெரியவில்லை.
நான் இத்தனை நாட்களாக விவாகரத்து ஏதோ கல்யாணம் ஆகி ஒரு சில வருடங்களில் சில பல காரணங்களுக்காக நடப்பது என்று நினைத்துக்கொண்டிருந்தேன். போகிற போக்கைப் பார்த்தால் 70 வயதில் கூட விவாகரத்து கேட்பார்கள் போல. பயமாய் இருக்கிறது.
*******************************************************
சர்வாதிகாரத் தலைவர்கள் எல்லாம் எப்போதும் என்ன மாதிரி மனநிலையில் இருப்பார்கள் என்று தெரியவில்லை. லிபியா அதிபர் கடாபி அந்த நாட்டு ராணுவத்தை தவிர அவருக்கு என தனி ராணுவம் வைத்திருந்தது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவருடைய இராணுவம் லிபியாவின் சொந்த மக்களையே கொன்ற சம்பவும் நடந்தது. நேட்டோ படைகள் சென்ற வாரம் அவரின் மாளிகையை தகர்த்த போது, அவரின் இளைய மகனும், மூன்று பேரக்குழந்தைகளும் இறந்துவிட்டார்கள். இத்தனை நாட்களாக கடாபியும் இறந்து இருக்கலாம் என்று அனைவரும் நினைத்திருந்த வேளையில் நேற்று அவர் ஒரு பழங்குடியினத் தலைவருடன் பேசும் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
குடும்பம் சிதறிப்போனது. ஒரு இளைய மகன் இறந்து போய்விட்டான். ஒரு பாவமும் செய்யாத மூன்று பேரக்குழந்தைகளும் இறந்துவிட்டார்கள். நாட்டிலும் அவருக்கு நிறைய எதிர்ப்பு கிளம்பிவிட்டது. பின்பு எதற்காக இப்படி உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. இப்போது அவர் மன நிலை எப்படி இருக்கும்.
இன்னொரு கோணத்தில் யோசித்தோமானால், எல்லாப் பிரச்சனைகளுக்கும் என்ன காரணம், யார் காரணம் என்று சிறுபிள்ளைகளுக்கு கூடத்தெரியும்.
நல்ல வேளை, நம் நாட்டில் மிடில் ஈஸ்ட் நாடுகளைப் போல அதிகம் ஆயில் இல்லை.
*******************************************************
'எங்கேயும் காதல்' நல்லப் படமா? ஹிட்டா என்று எனக்குத் தெரியவில்லை. நான் இன்னும் பார்க்கவில்லை. ஆனால், எப்போவாவது சன் மியூஸிக் சேனல் பார்க்கும் போது அவர்களின் விளம்பரத் தொல்லை தாங்க முடியவில்லை. அது எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், போன் செய்து பேசுபவர்களிடம், "எங்கேயும் காதல் படம் பார்த்துட்டீங்களா?" என்று தவறாமல் கேட்கிறார்கள். படத்தை எப்படி எல்லாம் மார்க்கெட்டிங் செய்கிறார்கள் பாருங்கள்.
*******************************************************
ஒரு நாளைக்கு 1152 பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். அதாவது ஒரு மணி நேரத்துக்கு 48 பெண்கள். பயப்படாதீர்கள், நம் நாட்டில் இல்லை. ஆப்பிரிக்க நாட்டில் உள்ள காங்கோ என்னும் ஒரு சிட்டியில் தான் இந்த நிலமை. பூமியிலேயே பெண்களுக்கான மோசமான இடம் என்று இந்த சிட்டியை சொல்லலாம். ஐநா புள்ளிவிவரப்படி இது போன வருட எண்ணிக்கையை விட 26 முறை அதிகமாம். Michelle Hindin (an associate professor at John Hopkins' Bloomberg School of Public Helath) சொல்கிறார், இந்த சதிவிகிதம் இன்னும் அதிகரிக்குமாம். ஒரு புள்ளிவிவரத்தின் படி 2006 முதல் 2007 வரை ஒரு வருடத்தில் 4 லட்சம் பெண்கள் கற்பழிக்கப்பட்டு இருக்கின்றார்களாம். அதாவது 1000 பெண்களில் 29 பெண்கள் கற்பழிக்கப்பட்டவர்களாம். படிக்கவே கொடுமையாக இருக்கிறது! என்ன மாதிரியான ஊர் அது. அங்கே இருக்கும் ஆண்கள் எல்லாம் மனிதர்களா இல்லை மிருகங்களா?
வசதி படைத்த நாடுகள் ஏன் இந்த மாதிரி ஏழை நாடுகளை கண்டு கொள்வதில்லை. அவர்களுக்கு உரிய அடிப்படை வசதிகளையும், படிப்பறிவையும், குறைந்த பட்ச தேவைகளையும் பூர்த்தி செய்தால், இப்படிப்பட்ட ஏழைநாடுகளும் மாறும் அல்லவா?
*******************************************************
'உழைப்புக்கு ஏற்ற ஊதியம்' என்பது எந்த அளவிற்கு உண்மையாக இருக்கிறது என்பதில் எனக்கு சந்தேகமாக இருக்கிறது. என் வீட்டில் உள்ள புல்களை மாத மாதம் வெட்டுவதற்கு அதற்குறிய மெஷினோடு ஒருவர் வருவார். கிட்டத்தட்ட 4 மணி நேரவேலை. வெட்டி முடித்தவுடன், அனைத்தையும் கூட்டி, பெருக்கி, எடுத்து தனித்தனியாக பெரிய பைகளில் கட்டி வெளியே உள்ள குப்பை வைக்கும் இடத்தில் வைப்பார். அளவுக்கு அதிகமாக வளர்ந்த பூச்செடிகளை எல்லாம் அழகாக வெட்டிவிடுவார். பத்து வருடமாக அவர் வாங்கியது 25 வெள்ளி. இப்போது 30 வெள்ளியாக உயர்த்தி இருக்கிறார்.
ஆனால், தலை முடியை வெட்டுவதற்கு இங்கே உள்ள சலூன்களில் வசூலிக்கும் தொகை 10 முதல் 12 வெள்ளி. மொத்தம் 15 நிமிட வேலை. அதுவும் என் தலைக்கு 5 நிமிடம் போதும். கூட ஷேம்பு போட்டு தலையை கழுவி விட்டால் 27 வெள்ளிவரை வாங்குகின்றார்கள். அதற்கு மேலும் ஒரு 25 நிமிடம்.
4 மணி நேரம் கடும் உழைப்பிற்கு கிடைக்கும் கூலி 30 வெள்ளி. 40 நிமிடத்திற்கு கிடைக்கும் கூலி 27 வெள்ளி.
இதில் எங்கே இருக்கிறது உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் எனும் கோட்பாடு?
*******************************************************
5 comments:
//இப்படி உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. இப்போது அவர் மன நிலை எப்படி இருக்கும்.//
ஏன் சாக வேண்டும்?
//வசதி படைத்த நாடுகள் ஏன் இந்த மாதிரி ஏழை நாடுகளை கண்டு கொள்வதில்லை.//
அமெரிக்கா ஸ்சேஃபில் இருக்கும் பணத்தையோ தங்கத்தையோ வருடக்கணக்கில் தொட்டதே இல்லையாம். அப்படியும் காசு மழை அங்கே பொழிவதால் ஒவ்வொரு நாட்டுடனும் சண்டையை ஆரம்பித்து குண்டு போட்டு காசை கரியாக்குகிறார்கள். யாராவது ஒபாமாவின் கன்னத்தில் அறைந்து நீங்கள் சொன்னதை சொல்லவேண்டும். பூனைக்கு மணி கட்டுவது யாருங்க.
//4 மணி நேரம் கடும் உழைப்பிற்கு கிடைக்கும் கூலி 30 வெள்ளி. 40 நிமிடத்திற்கு கிடைக்கும் கூலி 27 வெள்ளி.//
என்ன கொடுமை சார் இது. சத்தம், தூசு, வெயில் எல்லாம் பார்த்தால் அதற்கு இன்னும் அதிகமாகவே கொடுக்கவேண்டும். தலை முடி வெட்டுவது தலை அலங்காரமாகப் போய்விட்டது. அது ஒரு லக்சரி என்பதால் இந்த விலை போல. அவ்வ்வ்வ்வ்வ்வ்
Hi Iniyavan2009,
Congrats!
Your story titled 'என். உலகநாதன்: மிக்ஸர் - 13.05.2011' made popular by Indli users at indli.com and the story promoted to the home page on 14th May 2011 07:14:01 AM GMT
Here is the link to the story: http://ta.indli.com/story/475022
Thanks for using Indli
Regards,
-Indli
இன்ட்லி வாசகர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.
அன்பின் உலக்ஸ்,
அர்னால்ட் பிறந்தது Austria, ஆஸ்திரேலியா அல்ல.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
//என்ன கொடுமை சார் இது. சத்தம், தூசு, வெயில் எல்லாம் பார்த்தால் அதற்கு இன்னும் அதிகமாகவே கொடுக்கவேண்டும். தலை முடி வெட்டுவது தலை அலங்காரமாகப் போய்விட்டது. அது ஒரு லக்சரி என்பதால் இந்த விலை போல. அவ்வ்வ்வ்வ்வ்வ்//
வருகைக்கு நன்றி அனாமிகா.
//அன்பின் உலக்ஸ்,
அர்னால்ட் பிறந்தது Austria, ஆஸ்திரேலியா அல்ல.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்// நன்றி ஸ்ரீராம்
Post a Comment