Jul 11, 2011

உண்மை....

கடந்த சில நாட்களாக எதையும் எழுதவில்லை. எழுதக் கூடிய மனநிலையில் நான் இல்லை. என்னதான் ஒரு குறிப்பிட்ட நிலையை அடைந்திருந்தாலும், வாழ்க்கையில் அவ்வப்போது சில மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. ஏகப்பட்ட கஷ்டங்கள், அவமானங்கள் எல்லாவற்றையும் கடந்துதான் இந்த நிலையில் இருக்கிறேன். இடைப்பட்ட வாழ்க்கையில் எனக்கு இழைக்கப்பட்ட துரோகங்கள், அதனால் ஏற்பட்ட வலிகள் அனைத்தையும் மறந்துவிட்டேன்.

நீங்கள் நினைக்கலாம், ஏன் உன் சொந்தப்பிரச்சனையை இங்கே எழுதுகிறாய்? என்று. எப்படி எனக்கு ஏற்படும் சந்தோசங்களை பதிவு செய்து வைத்துக்கொள்கிறேனோ அதே போல் பிரச்சனைகளையும், சோகங்களையும் பதிவு செய்து வைத்துக்கொள்ள விரும்புகிறேன்.

சந்தோசமான வாழ்க்கை என்பது அவ்வளவு சுலபத்தில் யாருக்கும் அமைந்துவிடாது. ஆனால், எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் நான் சந்தோசமாகவே வாழ்ந்து வந்திருக்கிறேன். வாழ்ந்து வருகிறேன். இத்தனை வருடங்கள் ஆனப் பிறகும் இன்னும் யாரை நம்புவது, யாரை நம்பக்கூடாது என்பதில் எனக்கு குழப்பம் இருந்து கொண்டே இருக்கிறது.

என் வாழ்க்கையில் மிக முக்கியமானவர், என் அன்புக்குறிய ஒருவர் என்னைப் பார்த்து கேட்ட கேள்விகள், சொன்ன சொற்கள், பேசிய பேச்சுக்கள் என்னால் ஜீரணிக்க முடியாதவை. என் மனதறிந்து நான் பொய்யே சொன்னதில்லை. அதற்குறிய தேவையோ அவசியமோ எனக்கு ஏற்பட்டதில்லை. ஆனால் ஒருவர் 'நான் ஒரு பொய்யன்' என்று சொல்லிவிட்டார். அவர் சொல்வது உண்மையில்லை என்று நிரூபிப்பதற்கு என்னிடம் ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால், அதை கேட்கும் நிலையில் அவர் இல்லை. எனக்கும் நிரூப்பிக்க பிடிக்கவில்லை.

திமுக தலைவர் கலைஞர் ஒரு முறை சொன்னது நினைவிற்கு வருகிறது. ஒரு முறை ஒரு அரசியல்வாதி அவரை கண்டபடி விமர்சித்துவிட்டார். அந்த நபர் திமுகவிலிருந்து வெளியேறி வேறு கட்சிக்கு சென்றவர். நிருபர்கள் கலைஞரிடம் அவர் விமர்சித்ததை பற்றி கேட்டார்கள், அதற்கு கலைஞர் அவர்கள் இப்படி பதில் சொன்னார்,

"இன்று அவர் என்னை விமர்சிப்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. அவர் என்னுடன் இருந்தபோது என்னைப் பற்றி பேசிய நல்ல விசயங்களை பற்றி மட்டுமே நான் நினைத்து சந்தோசப்படுகிறேன்"

நானும் அப்படித்தான். அவர் இதுவரை எனக்கு செய்த நல்லவைகளை மட்டுமே நினைத்துக்கொள்கிறேன். ஆனால் அவர் உதிர்த்த சில சொற்கள் என்னை சுற்றி சுற்றி வந்து கொல்கின்றன. நாம் உயிருக்கு உயிராக ஒருவரை காதலிக்கிறோம். ஆனால் கல்யாணம் செய்து கொள்ள நினைக்கையில் ஏதாவது ஒரு காரணத்தை, அதாவது நம்மை அவமானப் படுத்தும் ஒரு காரணத்தை சொல்லி வேறு ஒருவரை கல்யாணம் செய்து கொண்டால் எப்படிப்பட்ட மன நிலையில் நாம் இருப்போம். அதே போன்ற ஒரு மனநிலையில் நான் இருக்கிறேன்.

பல இரவுகள் சிந்தித்து இந்த நிலைக்கான காரணம் என்ன என்று அறிந்து கொள்ள முயன்றேன். முடிவில் விடையையும் தேடிக் கண்டுபிடித்து விட்டேன். நான் எல்லோரிடமும் மிக வெளிப்படையாக பேசுபவன். எதையும் மனதில் வைத்துக்கொள்ள மாட்டேன். பட் பட் என்று மனதில் பட்டதை சொல்லிவிடுவேன். அதுவே பல சமயங்களில் பிரச்சனையில் கொண்டு வந்து விட்டுவிடுகிறது.

நாம் எல்லோருமே நல்லவர்கள் என்று நினைத்து எல்லாவற்றையும் பேசுகிறோம். ஆனால் ஒரு சிலர் நம் மேல் பொறாமை கொண்டவர்கள் சமயம் பார்த்து ஏதாவது நம்மைப் பற்றி நமக்கு வேண்டியவர்களிடம் ஏதாவது சொல்லிவிடுகிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் அதை உடனே விசாரிப்பதில்லை. உடனே நம் மேல் கோபம் கொள்கிறார்கள், நீங்கள் கேட்கலாம், நீங்கள் ஏன் உங்களை மாற்றிக்கொள்ளக் கூடாது? சொல்வது சுலபம். நம் இயல்பை ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் மாற்றிக்கொள்வது மிகவும் கஷ்டம்.

எனக்கு இன்னொரு பிரச்சனையும் சிறு வயதிலிருந்தே இருக்கிறது. என்னிடம் பழகும் அனைவரும் நன்றாக பழகிவிடுவார்கள். நண்பர்களில் இரண்டு பிரிவு இருந்தால், அவரிடம் நெருக்கமாக இருந்தால் இவருக்கு பிடிக்காது. இவரிடம் நெருக்கமாக இருந்தால் அவருக்கு பிடிக்காது. எனக்கோ இருவரையும் பிடிக்கும். நான் என்ன செய்ய?

ஒவ்வொரு முறை அவமானங்களை சந்திக்கும் போதுதான் நான் முன்னேறுகிறேன். அந்த வகையில் இந்த முறையும் இன்னும் நான் முன்னேறுவேன்.

"உன்னால் முடியாது. நீ இவ்வளவுதான்" என்று யாராவது சொன்னால் அதை முறியடித்து சாதித்துக்காட்டுவதுதான் என் வழக்கம். இப்போதும் அதே போல் ஒரு சந்தர்ப்பம் வந்திருக்கிறது. சாதித்துக் காட்டுவேன்.

ஆனால் வாழ்க்கையில் ஒரு விசயத்தை நன்றாக புரிந்து கொண்டேன். நாம் அதீதமாக அன்பு வைத்திருக்கும் ஒருவர், அதே போல் நம்மீதும் அன்பு வைத்திருக்கிறார் என்று நினைப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதை புரிந்து கொண்டேன்.

"வாழ்க்கையில் யார் மேலும் அளவுக்கு அதிகமாக அன்பு வைக்கக்கூடாது. எதன் மேலும் ரொம்ப ஈடுப்பாட்டோடு இருக்கக்கூடாது. வாழ்க்கையை அதன் போக்கில் விட்டு நியாயமாக வாழ வேண்டும்" என்பதையும் புரிந்து கொண்டேன். 

இதுவரை பொய் பேசியதில்லை. இனியும் பேசக்கூடாது என்றும் முடிவு எடுத்துவிட்டேன். 

இனி என் குடும்பத்தின் மீதும், என் மீதும் மட்டுமே அதிக அன்பு காட்ட வேண்டும் என்றும், என் குடும்பத்தின் மீதும் என் மீதும் மட்டுமே அதிக ஈடுபாடு காட்ட வேண்டும் என்றும் முடிவு செய்துவிட்டேன்.

(என் மனதில் இருந்த 15 நாள் பிரச்சனையை உங்களிடம் இறக்கிவிட்ட பிறகு நிம்மதியாக உணர்கிறேன். இனி தொடர்ந்து எழுதுவேன்)4 comments:

sowri said...

Yes sometimes it hurt and i can understand the pain you have experienced. Its only time that will heal. Never change your personality because its you and from there everything else will begin.

Its a good lesson and learning as part of the growth.

Regards
Sowri

ஷர்புதீன் said...

என்னனே , அப்படியே நம்ம கதையா இருக்கு! கடந்த பதினைந்து நாளா என் வாழ்வில் மிக அதிக பட்ச மன உளைச்சலை பெற்றேன், அதை நீங்கள் எப்படி எடுத்துகொண்டீர்களோ அதே போலத்தான் நானும் எடுத்துக்கொண்டேன். உங்களது இடுக்கையும் சரி, எனது பிரச்சனையும் சரி 99 % அப்படியே எனதை பிரதிபலிக்கிறது.!!!

உங்களுக்கு குடுபத்துக்கு வெளியே அதனால் இனி கவனம் உள்ளே, எனது பிரச்சனை குடும்பத்துக்கு உள்ளே, அதனால் வெளியே கவனத்தை செலுத்தவில்லை, என்னை , என் தவறுகளை, எப்படி இருக்கணும் என்பது போன்ற சிந்தனைகளில் இறங்கிவிட்டேன்.

காலத்தின் மீது மிகுந்த நம்பிக்கை உண்டு...தீர்வுகளுக்கு!

அமுதா கிருஷ்ணா said...

அடக்கடவுளே.என் பிரச்சனையினை அப்படியே நிறைய பேருக்கு கொடுத்து இருப்பார் போல இருக்கே..

//வாழ்க்கையில் ஒரு விசயத்தை நன்றாக புரிந்து கொண்டேன். நாம் அதீதமாக அன்பு வைத்திருக்கும் ஒருவர், அதே போல் நம்மீதும் அன்பு வைத்திருக்கிறார் என்று நினைப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதை புரிந்து கொண்டேன்.//

100% உண்மை சார். எவ்ளோ வயதானலும் ஏமாறுபவர்கள் ஏமாந்துக் கொண்டே தான் இருப்போம் போல.கடைசியில் எடுத்த இந்த முடிவினை நீங்களாவது அப்படியே பின்பற்றுங்கள்.எத்தனை தடவை சூடு பட்டாலும் நானெல்லாம் திருந்துவது கடினம்.
all the best!!!

BalHanuman said...

Dear Ulaganathan,

Dont' worry. Time is the healing factor for everything. This too shall pass.

I'd like to quote something from 'Life Beautiful' by Sri. M.P.Pandit of Sri Aurobindo Ashram, Pondicherry.

Lessons in my Life
===================
Relationships in this world are hardly constant. They go on changing, though at the outset of many friendships we take it for granted that they will be eternal. Similarly inimical relationships do not always stay that way. Often lasting friendships have their origin in initial clashes. The best counsel on the matter is the Chinese saying. Treat the enemy as though he will turn your friend one day, and a friend as a possible enemy in the future.

Best wishes,
Srinivasan