Nov 16, 2011

கல்கி!


சிறு வயதிலிருந்தே நான் மிகவும் ரசித்து படித்த புத்தகங்கள் இரண்டு. ஒன்று ஆனந்த விகடன் இன்னொன்று கல்கி. 1985லிருந்து 1990 வரை என்னுடைய பெயர் வராத பத்திரிகைகளே இல்லை எனலாம். ஆனால் நீங்கள் நினைப்பது போல கதைகளோ அல்லது கட்டுரைகளோ எழுதி வந்ததில்லை. கேள்விகள், துணுக்குகள் மற்றும் விமர்சனங்களில் என் பெயர் பெரும்பாலும் இருக்கும். 

எங்கள் ஊரில் இருந்த ஆர். சிவராஜ் அவர்கள் நிறைய பத்திரிகைகளில் எழுதுவார். இருபது வருடங்களுக்கு முன் அவர் எழுதிய ஒரு கதை கல்கியில் வெளீயானது. எங்களுக்கு எல்லாம் ஒரே சந்தோசம். ஏனென்றால் அவரின் பெயரோடு எங்கள் ஊரின் பெயரும் சேர்ந்தே வந்தது. அவரால் நானும் உந்தப்பட்டு நிறைய கதைகள் எழுத ஆரம்பித்தேன். அப்போதே 50 கதைகள் கிட்ட எழுதியிருப்பேன். ஆனால், ஒன்று கூட வெளியாகவில்லை. பின் மேல்படிப்பினால் என் எழுத்து வாழ்க்கை அப்படியே நின்று போனது.

கல்கிக்கும் எனக்கும் ஆன தொடர்பு பற்றி ஏற்கனவே "கல்கியும், நானும் பாக்யராஜும்"  என்ற தலைப்பில் இப்படி எழுதியிருக்கிறேன்:

"ஒரு முறை கல்கியில் நான் கேட்ட ஒரு கேள்வி என் பத்திரிக்கை தொடர்பை துண்டித்துவிட்டது. நானாகத்தான் எழுதுவதை நிறுத்தினேன். அப்படி என்ன கேள்வி கேட்டேன்?

1985 ஆம் ஆண்டு என நினைக்கிறேன், அப்போது தமிழ்நாடு முழுவதும் ஒரே வெள்ளம். நான் கல்கியில் இப்படி ஒரு கேள்வி கேட்டிருந்தேன்:
"நாடே வெள்ளத்தில் மூழ்கியிருக்கும்போது, தமிழக முதல்வர் எம்.ஜி,ஆர், கே. பாக்யராஜின் "சின்னவீடு" ப்ரீவியூ பார்க்கசென்றது நியாயமா"?

நான் ஒரு தீவிர எம்ஜிஆர் வெறியன். சும்மா இப்படி ஒரு கேள்வி கேட்க போக, அந்தவார கல்கியின் கேள்வி பதில் பகுதியின் தலைப்பே என் கேள்விதான். அதுமட்டுமல்ல, எல்லா கல்கி விளம்பரத்திலும் இந்த கேள்விதான். அதற்கு ஒரு பக்கம் பதில் எழுதி பாக்யராஜையும், தலைவரையும் சாடியிருந்த்ததாக நினைவு.

அதற்கு அடுத்தவாரம் கே. பாக்யராஜிடமிருந்து மறுப்பு வந்திருந்தது. அதையும் கல்கியில் பிரசிருத்திருந்தார்கள். அவரின் மறுப்பின் கடைசியில் இப்படி எழுதியிருந்தார்:

" தலைவரின் பெயரை கெடுப்பதற்காக, நீங்களே இப்படி ஒரு கேள்வி கேட்டு, அதற்கு பதிலும் கொடுத்துருக்கின்றீகள். பெரியவங்க தப்பு செஞ்சா பெருமாள் செஞ்ச மாதிரி, சின்னவங்க தப்பு செஞ்சா செறுப்பால அடினு ஒரு பழமொழி இருக்கு. நீங்க செஞ்ச தப்ப பெரியவங்க செஞ்ச தப்பா நினைச்சு மன்னிக்கிறேன்"

அடுத்த வார கல்கியில அதற்கு திரும்பவும் பதில் எழுதியிருந்தார்கள்,

" எங்களுக்கு நாங்களே கேள்வி கேட்டு பதில் எழுதவேண்டிய அவசியமில்லை. தேவையென்றால் எங்கள் அலுவலகம் வாருங்கள், அந்த கேள்வி எழுதிய கடிதத்தையும் காண்பிக்கிறோம். நாங்களும் நீங்க செஞ்ச தப்பை பெருமாள் செஞ்சதாவே நினைச்சு மன்னிக்கிறோம்"

அதற்கு பிறகு ஏகப்பட்ட கடிதங்கள், அப்பாவிடம் ஏகப்பட்ட திட்டு. அதையெல்லாம்விட எனக்கு பிடித்த எனதருமை டைரக்டருக்கும், தலைவருக்கும் போய் மனக்கஷ்டத்தை கொடுத்துவிட்டோமே என மனம் நொந்து, வெம்பி, அழுத நாட்கள் இன்னும் என் மனதில் அப்படியே இருக்கிறது.

அப்பொழுது எழுத நிறுத்தியவன்தான், திரும்ப இப்போதுதான் எழுத வருகிறேன்"

பின் 2009 மார்ச்சில் வலைப்பூ ஆரம்பித்தவுடன் மீண்டும் கதைகள் எழுத ஆரம்பித்தேன். முதல் கதை ஆனந்தவிகடனில் 2009 ஜீன் மாதம் வெளியானது. மனம் துள்ளிக்குதிக்க ஆரம்பித்தது. இனி தொடர்ந்து நம் கதைகள் பத்திரிகைகளில் வரும் என எண்ணி நிறைய எழுத ஆரம்பித்தேன். ஆனால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அப்போது "ழ" பதிப்பகம் என்னை அணுகவே எழுதிய அனைத்து கதைகளையும் புத்தகமாக வெளியிட சம்மதித்தேன்.

ஆனால் பத்திரிகைகளில் என் கதைகள் வரவேண்டும் என்கிற கனவு மட்டும் இருந்து கொண்டே இருந்தது. அதற்காக நிறைய பார்மேட்டுகளில் கதைகளை முயற்சி செய்து பார்த்தேன். என்னுடைய தொடர் முயற்சிகள் வீணாகவில்லை.  


இதோ என்னுடைய சிறுகதைகளில் ஒன்றான "அமுதா" இந்த வார கல்கியில் வெளியாகி உள்ளது. விசயம் கேள்வி பட்டதும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. என் மெயில்பாக்ஸில் இருக்கும் அனைத்து நண்பர்களிடத்திலும் என் சந்தோசத்தை பகிர்ந்து கொண்டேன். நண்பர்கள் அனைவரும் என்னை வாழ்த்தியது என்னை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.

கல்கியை உடனே வாங்கி படிக்க ஆசை. ஆனால், நான் இருக்கும் இடத்தில் தமிழ் பத்திரிகைகள் கிடைக்காது. கோலாலம்பூரில்தான் கிடைக்கும். நல்லவேளையாக எனக்கு கோலாலம்பூரில் மீட்டிங் பிக்ஸானது. இந்தியாவில் ஞாயிறு காலையே வெளியாகும் என்பதால் இங்கும் வெளியாகும் என்று நினைத்து ஞாயிறு காலை காரில் கிளம்பி கோலாலம்பூர் சென்றேன். ஆனால் கல்கி வரவே இல்லை. அன்று மட்டும் மூன்று முறை சென்றேன். வரவில்லை. பின் திங்கள் ஒரு மூன்று முறை சென்றேன். கடைக்காரர் இரவு வரச்சொன்னார்.

டென்ஷனுடன் இரவு சென்றேன். எனக்காக எடுத்து வைத்திருந்தார். உடனே என்னைப்பார்த்து ஒரு கேள்வி கேட்டார்,

"ஏன் சார் நேற்றிலிருந்து இந்த அலை அலையறீங்க? அப்படி என்ன இந்த வார கல்கியில விசேஷம்?"

"என் கதை கல்கியில வந்திருக்குங்க"

"அந்த சிறுகதை நீங்க எழுதுனதா?"

"ஆமாம்"

"ரொம்ப நல்லா இருந்துங்க. நான் ஏற்கனவே படிச்சுட்டேன். கல்கியில கதை வர அளவுக்கு வளர்ந்துட்டீங்க. வாழுத்துக்கள். நிறைய எழுதுங்க" என்றார்.

அவரிடம் நன்றி சொல்லி கிளம்ப நினைக்கையில், என்னுடன் வந்திருந்த எங்கள் கம்பனியின் சேர்மன், கடைக்காரர் என்னை வாழ்த்தியதைப் பார்த்து சந்தோசப்பட்டு அங்கு இருந்த அனைத்து கல்கி புத்தகங்களையும் வாங்கி மும்பைக்கு எடுத்து சென்றுவிட்டார். பின் கதையினை படித்து விட்டு எங்கள் சேர்மனும் பாராட்டியது என் வாழ்நாளில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய சந்தோசமாக நினைக்கிறேன்.

என் கதையை வெளியிட்ட கல்கி நிறுவனத்திற்கும், , கல்கியின் உதவி ஆசிரியர் எழுத்தாளர் அமிர்தம் சூர்யா அவர்களுக்கும் என் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

இனி நிறைய நல்ல கதைகள் எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்ப வேண்டும் என முடிவெடுத்திருக்கிறேன். பார்ப்போம்!

இதில் என்ன பெரிய விசயமா? இவ்வளவு சந்தோசப்பட வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம்

என்னைப் பொருத்தவரை, என் பதவியினால், என் சம்பளத்தால் கிடைக்கும் சந்தோசங்களை விட, என் கதை கல்கியில் வந்த சந்தோசமே மிகப்பெரிய சந்தோசமாக எனக்குத் தோன்றுகிறது. 


15 comments:

sriram said...

அன்பின் உலக்ஸ்
வாழ்த்துக்கள். கல்கியின் தரத்துக்கு உங்க கதை இருப்பது குறித்து மகிழ்ச்சி. விகடன், குமுதம் போன்ற வெகுஜனப் பத்திரிக்கைகளில் கதை வருவதே பெரிய விஷயம், அதிலும் கல்கி போன்ற Quality Conscious பத்திரிக்கையில் கதை வந்திருப்பது வெகு சிறப்பு. வாழ்த்துக்கள் மேலும் சிறக்க

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Cable சங்கர் said...

vazthukkal.

Ravisankaranand said...

கதையும் சூப்பர்.. டிப்பிகள் உலக்ஸ் நடை ;)

மேலும் மேலும் பல படைப்புகளை உங்களிடமிருந்து வரவேண்டுமென்று ஆசை படுகிறோம்..

Amirtham surya said...

நண்பா..உங்கள் மகிழ்ச்சி எங்கள் நிறைவு.உங்களைப் போன்றே பலரின் திறனும் வெளிச்சத்திற்கு வர வேண்டும்.பலரும் மதிக்கும் இடத்தில் பணி புரிகிற பெருமையும் உங்கள் கதைகளை பரிசிலிக்கும் பாக்கியமும் என்க்கு கிடைத்த பேறு.மற்ற நண்பர்களும் கல்கிக்கு..என் பெயர் குறிப்பிட்டு..கதை அனுப்பலாம்.என் இமெயில்;suryakalki@gmail.com என் நண்பர் உலகநாதனின் நண்பர்கள் அனைவர்க்கும்..என் அன்பு..

பால கணேஷ் said...

தன் எழுத்தை அச்சில் பார்த்து, அதற்குப் பாராட்டுக்களம் பெறுவது பேரானந்தம். அந்தப் பேரானந்தம் உங்களுக்கு அடிக்கடி கிடைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் உலகநாதன் சார்...

iniyavan said...

//sriram said...
அன்பின் உலக்ஸ்
வாழ்த்துக்கள். கல்கியின் தரத்துக்கு உங்க கதை இருப்பது குறித்து மகிழ்ச்சி. விகடன், குமுதம் போன்ற வெகுஜனப் பத்திரிக்கைகளில் கதை வருவதே பெரிய விஷயம், அதிலும் கல்கி போன்ற Quality Conscious பத்திரிக்கையில் கதை வந்திருப்பது வெகு சிறப்பு. வாழ்த்துக்கள் மேலும் சிறக்க//

நன்றி ஸ்ரீராம்

iniyavan said...

//சங்கர் நாராயண் @ Cable Sankar said...
vazthukkal.//

நன்றி தலைவரே!

iniyavan said...

//Ravisankaranand said...
கதையும் சூப்பர்.. டிப்பிகள் உலக்ஸ் நடை ;)

மேலும் மேலும் பல படைப்புகளை உங்களிடமிருந்து வரவேண்டுமென்று ஆசை படுகிறோம்..//

உங்களின் தொடர் ஆதரவிற்கு நன்றி ரவிஷங்கர்

iniyavan said...

//அமிர்தம் சூர்யா said...
நண்பா..உங்கள் மகிழ்ச்சி எங்கள் நிறைவு.உங்களைப் போன்றே பலரின் திறனும் வெளிச்சத்திற்கு வர வேண்டும்.பலரும் மதிக்கும் இடத்தில் பணி புரிகிற பெருமையும் உங்கள் கதைகளை பரிசிலிக்கும் பாக்கியமும் என்க்கு கிடைத்த பேறு.மற்ற நண்பர்களும் கல்கிக்கு..என் பெயர் குறிப்பிட்டு..கதை அனுப்பலாம்.என் இமெயில்;suryakalki@gmail.com என் நண்பர் உலகநாதனின் நண்பர்கள் அனைவர்க்கும்..என் அன்பு..//

என் இனிய நண்பனுக்கு நன்றி.

iniyavan said...

//கணேஷ் said...
தன் எழுத்தை அச்சில் பார்த்து, அதற்குப் பாராட்டுக்களம் பெறுவது பேரானந்தம். அந்தப் பேரானந்தம் உங்களுக்கு அடிக்கடி கிடைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் உலகநாதன் சார்...//

தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி கணேஷ் சார்.

கிரி said...

உலகநாதன் வாழ்த்துகள்.

உங்கள் கேள்வி தலைப்பாக வெளிவந்த போது உங்களுக்கு ஏற்பட்டு இருக்கும் மன உளைச்சலை உணர முடிகிறது. இன்னும் பல பத்திரிக்கைகளில் எழுத என்னுடைய வாழ்த்துகள்.

iniyavan said...

//கிரி said...
உலகநாதன் வாழ்த்துகள்.

உங்கள் கேள்வி தலைப்பாக வெளிவந்த போது உங்களுக்கு ஏற்பட்டு இருக்கும் மன உளைச்சலை உணர முடிகிறது. இன்னும் பல பத்திரிக்கைகளில் எழுத என்னுடைய வாழ்த்துகள்.//

தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி கிரி

BalHanuman said...

வாழ்த்துக்கள் உலகநாதன் சார்...

நண்பர் பாஸ்டன் ஸ்ரீராம் சொன்னதை வழி மொழிகிறேன்...

iniyavan said...

DEV RAJ rdev97@gmail.com
10:38 PM (10 hours ago)

to me
சுவையான பதிவு.
நிறைய எழுதுங்க ஐயா;
தரமான வாசகர்கள் எப்போதும் உங்களுக்கு உண்டு.
வாழ்த்துகள்


அன்புடன்
தேவ்
சென்னை

Ravichandran Somu said...

வாழ்த்துகள் உலகநாதன் !!!

அன்புடன்,
-ரவிச்சந்திரன்