சச்சின் 100வது சதம் எடுப்பார் என மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த பல பேரில் நானும் ஒருவன். சச்சின் ஆடிக்கொண்டிருக்கும் போது ஒரு நண்பர் என்னைத் தொலைபேசியில் அழைத்தார். அவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போதுதான் சச்சின் அவுட் ஆனார். நான் என்னையறியாமல், “ஐய்யோ சச்சின் அவுட் ஆகிவிட்டாரே” என கத்திவிட்டேன். உடனே நண்பர் கடுப்பாகி என்னைத் திட்ட ஆரம்பித்துவிட்டார், “நான் எவ்வளவு முக்கியமான விசயம் உங்களுடன் பேசிக்கோண்டிருக்கிறேன். சச்சின் அவுட்டானது உங்களுக்கு முக்கியமாய் போய்விட்டதா?” என்றார். “என்னை பொருத்தவரை முக்கியம் தான்” என்றேன். உடனே அவர், “இதனால்தான் நம் நாடு உருப்பிடாமல் போகிறது. சச்சின் சொத்து எவ்வளவு தெரியுமா?” என்று பேச ஆரம்பித்துவிட்டார். ஒரு கிரிக்கெட் விளையாட்டு ரசிகன், ஒரு கிரிக்கெட் ப்ளேயர் அவனுக்குப் பிடித்த வீரனின் விளையாட்டை ரசிப்பது தவறா? அவரது சொத்து எவ்வளவாக இருந்தால் எனக்கு என்ன? அதற்கும் அவர் விளையாட்டை ரசிப்பதற்கும் என்ன சம்பந்தம்? எனக்கு ஒன்றும் புரியவில்லை.
*****************************************************************
அதே போல் தனுஷின் “கொலை வெறிடி” பாடலை, இதெல்லாம் ஒரு பாடலா? மொக்கைப் பாடல். இதற்கு எதற்கு இவ்வளவு அலப்பறை?. இதற்கு போய் மன்மோகன் சிங் தனுஷை விருந்துக்கு கூப்பிட்டுகிறார்? எல்லாம் லக்கு, என்று வாயில் வந்ததை சொல்கிறார்கள். லக்கோ இல்லை மொக்கையோ அந்த பாடலில் ஏதோ ஒன்று இருக்கிறது. அதனால்தானே அந்தப் பாடல் இவ்வளவு மக்களின் கவனத்தைப் பெற்றிருக்கிறது. நம்மால் ஏன் ஒருவரின் வெற்றியை ஒப்புக்கொள்ள முடியவில்லை. ஏன் நம் மனம் மறுக்கிறது? என்ன காரணம்? நம்மால் முடியாத ஒன்றை ஒரு செயலை மற்றொருவர் செய்து பெயர் வாங்கும் போது ஏன் நம்மால் மனம் வந்து அந்த செயலை பாராட்ட முடியவில்லை? தடுப்பது எது? புரியவில்லை.
*****************************************************************
“உ” பதிப்பகம் ஆரம்பித்தவுடன் சில நண்பர்கள் (பதிவுலக நண்பர்கள் அல்ல), “ஏன் உனக்கு இந்த வேலை? இதெல்லாம் உனக்குத் தேவையா? உன்னால் தொடர்ந்து நடத்த முடியுமா? நிச்சயம் நஷ்டத்தில் வெகு விரைவில் மூடிவிடப் போகிறாய்?” என்று சொல்கிறார்கள். யாருமே எந்த ஒரு தொழிலையும் நம்மால் நடத்த முடியாது, விரைவில் மூடிவிடுவோம் என்று நினைத்து ஆரம்பிப்பது இல்லை. அதே போல் நல்ல எண்ணத்துடன் லாப நோக்கின்றித்தான் ஆரம்பித்திருக்கிறோம். முடிந்தவரை வரை நன்றாக கொண்டு வர முயற்சி செய்வோம். பார்ப்போம்!
*****************************************************************
“சென்ற வருடத்தில் நான்” என்று ஒரு இடுகை எழுதலாமா? என யோசித்து எழுத ஆரம்பித்தேன். நிறைய நல்ல விசயங்கள் நடந்திருக்கின்றன. சில விசயங்களுக்காக பொருளாதார நஷ்டம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. எல்லாவற்றையும் விரிவாக எழுத நினைத்த நான், ஒரே ஒரு காரணத்தினால் எழுத வேண்டாம் என நிறுத்திக் கொண்டேன். என்ன காரணம் என்பதை கடைசியில் சொல்கிறேன்.
*****************************************************************
“ “ழ” பதிப்பகம் வெளியிட்ட என் புத்தகங்களான “வீணையடி நீ எனக்கு” மற்றும் “சாமான்யனின் கதை” நிறைய விற்றிருக்கிறது. மக்களிடையே நன்றாக போய் சேர்ந்திருக்கிறது. அதனால் எனக்கு ரொம்ப நல்ல பெயர் கிடைத்திருக்கிறது. பார்க்கும் நண்பர்கள் எல்லாம் என் புத்தகங்கள் பற்றித்தான் பேசுகிறார்கள்” என்றெல்லாம் பொய் சொல்ல விரும்பவில்லை. பாதிப் புத்தகங்கள் அப்படியே விற்காமல் இருக்கின்றன என்ற உண்மையை ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அப்புறம் ஏன் புதுசா “நான் கெட்டவன்” புத்தகம்னு கேக்கறீங்களா? புலி வாலை புடிச்ச கதை உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன். ஒரு வேளை உங்களுக்கு என் புத்தகங்கள் வாங்க வேண்டும் என்று தோன்றினால், டிஸ்கவரி புக் பேலஸை தொடர்பு கொள்ளவும்.
*****************************************************************
“நான் கெட்டவன்” புத்தகம் இன்னும் வெளியீடு காணவில்லை. ஆனால் ஆன் லைனில் கிடைக்கிறது. எப்படி போன பாராவில் புத்தகம் அதிகம் விற்கவில்லை என்ற உண்மையை ஒப்புக்கொண்டேனோ, அதே போல் நீங்களும் ஒரு உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும். புத்தகம் வெளிவராத நிலையில் எப்போடியோ என் புத்தகத்தை படித்த ஒரு பெண் வாசகி, சென்னையிலிருந்து தொலை பேசியில் தொடர்பு கொண்டு, “புத்தகம் வாசிக்க அருமையாக இருக்கிறது. ரொம்ப நன்றாக வந்துள்ளது. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்று பாராட்டினார். இது பொய் இல்லை என்பதை நிரூபிக்க அந்தப் பெண் பேசிய போது ஒரு பிரபல பதிவர் உடன் இருந்தார் என்பதையும் இங்கே சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். புத்தகம் விற்கப்போகிறதோ இல்லையோ, அந்த குறிப்பிட்ட வாசகியின் பாராட்டையே நான் என் புத்தகத்தின் வெற்றியாக கருதுகிறேன். புத்தகத்தை வாங்க மேலே உள்ள படத்தை கிளிக் செய்யவும்.
*****************************************************************
முன்பு போல் என்னால் புதுப் பட பாடல்களை தரவிறக்கம் செய்ய முடியவில்லை. நான் எப்போதும் செல்லும் தளங்களுக்குச் சென்று டவுண்ட் லோட் என்று போட்டால், “ப்ளே” ஆகிறதே ஒழிய என்னால் தரவிறக்கம் செய்ய முடியவில்லை. எனக்கு “மூணு, நண்பன், கழுகு, வேட்டை” படப் பாடல்களும் மற்ரும் சில பழைய பாடல்களும் தரவிறக்கம் செய்ய வேண்டும். நண்பர்கள் யாராவது எந்த வலைத்தளத்தின் மூலம் இந்த பாடல்களை தரவிறக்கம் செய்யலாம் என்று சொல்ல முடியுமா?
*****************************************************************
நான்காவது பாராவிற்கான விடை. எழுதியதை நிறுத்தியதற்கு காரணம், சென்ற வருடத்தில் எனக்கு ஒரு வயது அதிகமாகி விட்டது என்ற உண்மை தோன்றியதால். மனதளவில் 16 ஆக நினைத்தாலும், வயது அதிகாமாகிக்கொண்டிருக்கிற கசப்பான உண்மையையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது.
*****************************************************************
9 comments:
www.tamilbeat.com
ithula new songs and old songs iruku. neenga download pannikalam.
You could attempt http://www.123musiq.com/TamilSongs.htm for downloading latest songs.
எல்லாம் அழகாக சொல்லியிருக்கிங்க..கொலவெறிடி பாடல் பற்றி சொன்னது முற்ற்லும் உண்மை.
சுட்டியை சொடுக்கி படியுங்கள்
******* மறக்கமுடியாத பதிவுகள்:ஈழத்தமிழர்= (இந்துக்கள்+கிறிஸ்தவர்கள்) - (முஸ்லிம்கள்). திருகோணமலை முழுவதும் நடந்தது இனவழிப்பே ஒழிய யுத்தமல்ல. சமுதாய துரோக வரலாறு. காத்தான்குடி படுகொலைகளும், படிப்பினைகளும் . புலி பயங்கரவாதம். ********
.
// dhivya said...
www.tamilbeat.com
ithula new songs and old songs iruku. neenga download pannikalam.// உதவிக்கு நன்றி திவ்யா.
// ரெண்டு said...
You could attempt http://www.123musiq.com/TamilSongs.htm for downloading latest songs.// நன்றி நண்பா!
//Rizi said...
எல்லாம் அழகாக சொல்லியிருக்கிங்க..கொலவெறிடி பாடல் பற்றி சொன்னது முற்ற்லும் உண்மை.// வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ரிஷி.
www.tamilwire.com to download songs
www.tamilwire.com
Post a Comment