Dec 5, 2011

ஹலோ...


"ஹலோ"

"ம் சொல்லுடா"

"டேய் இந்த வார கல்கி வந்துடுச்சா?"

"ம்ம் அதான் பார்த்துட்டு இருக்கேன்"

"என்னோட கதை ஒண்ணு வந்துருக்கா பாரு?"

"இரு பாக்குறேன்"

சில நிமிட நிசப்தம்.

"ஆமா வந்துருக்கு"

"படிச்சிட்டு சொல்றியா?"

"இப்போ வேலையா இருக்கேன். அப்புறம் பேசறேன்"

டக்.

************************************************

"உலக்ஸ் பேசறேன். இந்த வாரம் கல்கி படிச்சியா?"

"ம்ம் படிச்சேன்"

"அதுல என் கதை ஒண்ணு"

"ம் படிச்சேனே"

சில நிமிடங்கள் காத்திருந்தேன். ஏதாவது பேசுவான் என்று.

பதில் கடைசி வரை வரவே இல்லை.

************************************************

இன்னொருவர் நெருங்கிய உறவினர். 

நண்பர்களுக்கு மெயிலின் மூலம் சந்தோசத்தைப் பகிர்கையில் அவருக்கும் அனுப்பிவிட்டேன் போல. அவரின் பதில் இதோ.....

"Don't send me any more mails. I don't read your blog or your stories"

************************************************

"நண்பா, கல்கில..."

"இங்க கல்கி கிடைக்கறதே கஷ்டம். தேடிப் பார்க்கணும். முடிஞ்சா வாங்கி படிச்சிட்டு சொல்றேன்"

"நான் வேணும்னா கதையின் லிங்க் அனுப்பவா?"

"இல்லை. நான் வாங்கி படிச்சிட்டு உனக்கு சொல்றேன்"

அவர் இன்னும் எனக்கு போன் செய்து சொல்கிறார்.

******************************************************

இது போல பல உதாரணங்களை சொல்லலாம். 


என்னைப் பொருத்தவரை எழுதுவதிலேயே மிகவும் சிரமமான காரியம் சிறுகதை எழுதுவதுதான். சிறுகதைக்கான கரு எப்போது தோன்றும்? எப்படித் தோன்றும் என்று சொல்ல முடியாது. எந்த நேரத்திலும் சடாரென ஒர் மின்னல் போல் வந்து போகும். அந்தக் கருவை உள்வாங்கி ஒரு சிறுகதையாக எழுதி முடிப்பதற்குள் மனம் ஒரு நிம்மதி இல்லாமல்  தவித்துக்கொண்டிருக்கும். அந்த அனுபவமே ஒரு பிரசவ வேதனைதான். 


சில கதைகள் கரு தோன்றிய சில மணி நேரங்களில் கதையாக உருமாறிவிடும். சில கருக்கள் கதைகளாக மாற பல நாட்கள் ஆகும். அதுவரை மனதின் ஒரு ஓரத்தில் இருந்து கொண்டு, கதையாக மாறும் வரை ஒரு மாதிரி இம்சித்துக்கொண்டே இருக்கும்.

அப்படி கஷ்டப்பட்டு நாம் எழுதும் ஒரு சிறுகதை ஏதேனும் ஒரு பத்திரிகையில் வெளியாகும் போது இருக்கும் சந்தோசம் அலாதியானது. அப்போது நம் கதையை யாராவது படித்து பாராட்ட மாட்டார்களா? என்ற ஏக்கம் எல்லோருக்கும் இருக்கும். இது தவிர்க்க முடியாதது.

நான் எழுத வந்தவுடன் என் அனுபவத்தில் தெரிந்து கொண்டது என்னவென்றால், 'நம் கூட இருக்கும் நண்பர்களோ அல்லது உறவினர்களோ அல்லது உடன்பிறந்தவர்களோ நம்மைப் பாராட்டுவது என்பது மிகவும் அரிதான விசயம்'. என்பதுதான். ஏன் அவர்களால் தம் கூட இருக்கும் ஒரு நண்பனையோ அல்லது உறவினரையோ அவர்களின் திறமையான ஒரு செயலுக்கு பாராட்ட வேண்டும் என்று தோன்ற மாட்டேன் என்கிறது என்று தெரியவில்லை? எது அவர்களைத் தடுக்கிறது?

ஆனால் இதையெல்லாம் மீறி நிறைய முகம் தெரியாத நண்பர்கள் மெயிலின் மூலமும் தொலைப் பேசியின் மூலமும் கதையைப் பற்றி பேசி அவர்களின் பாராட்டைத் தெரிவிக்கும் போது மற்றவர்கள் மேல் இருக்கும் வெறுப்பு தானாக மறைந்து போய்விடுகிறது.

நான் எழுதிய அந்தக் கதையை இந்த தளத்தில் விவாதித்திருக்கிறார்கள் பாருங்கள்:

அமுதா10 comments:

Rathnavel Natarajan said...

வாழ்த்துகள்.

iniyavan said...

//Rathnavel said...
வாழ்த்துகள்.//

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ரத்னவேல் சார்.

Unknown said...

அருமையான கதை. முடிவு நெகிழவைத்துவிட்டது.

bandhu said...

நல்ல கதை. கத்தி மேல் நடக்கும் சப்ஜெக்ட். நன்றாக எழுதியிருக்கிறீர்கள்!

Suresh Subramanian said...

nice story.. please read my kavithaigal and story in www.rishvan.com

iniyavan said...

//வெண் புரவி said...
அருமையான கதை. முடிவு நெகிழவைத்துவிட்டது.//

வருகைக்கு நன்றி வெண் புரவி

iniyavan said...

//bandhu said...
நல்ல கதை. கத்தி மேல் நடக்கும் சப்ஜெக்ட். நன்றாக எழுதியிருக்கிறீர்கள்!//

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி பந்து.

kanna said...

Nice story. I am reading ur blogs for past 3 weeks. All articles of urs nice to read. It provide good feeling to me after read it.

World is always like this only except few people no one enjoy other ppl success.

phantom363 said...

very nice story. read it through your link to indusladies. best wishes for the future :)

Shakthiprabha said...

அருமையான இடுகை. யதார்த்தம் :)) ரசித்தேன்.
வலைச்சரத்தில் இப்பதிவை இணைத்திருக்கிறேன். நன்றி :)

கீழிருக்கும் சுட்டி வலைச்சரத்தில் இணைத்த பதிவுக்கானது

http://blogintamil.blogspot.com/2011/12/blog-post_22.html