Dec 26, 2011

அழிக்கப் பிறந்தவன்!


என்னைப் போல ஆரம்ப நிலையில் இருக்கும் எழுத்தாளர்கள் புத்தகம் போட வேண்டும் என்று நினைக்கையில் ஏற்படும் சங்கடங்கள் ஏராளம். நாம்தான் பதிப்பகங்களை அணுக வேண்டும். அவ்வளவு சுலபமாக யாரும் புத்தகம் போட அனுமதிக்க மாட்டார்கள். அதற்கு நாம் நன்கு பிரபலமானவராக இருக்க வேண்டும், நண்பர் யுவகிருஷ்ணாவைப் போல அல்லது கேபிள் சங்கரை போல. ஓரளவு நன்றாக எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். 

"உ" பதிப்பகம் ஆரம்பித்தவுடன் நான் இரண்டு புத்தகங்களுக்கான கட்டுரைகளை/ கதைகளை கேபிள் சங்கரிடம் கொடுத்தேன். என்னதான் நான் பதிப்பாளராக அவதாரம் எடுத்திருந்தாலும் என்னுடைய ஒரு புத்தகத்தை சரியில்லை என்று கேபிள் நிராகரித்துவிட்டார். 

வருத்தம் இருந்தாலும், நல்ல படைப்புகள் மட்டும்தான் வெளிவர வேண்டும் என்ற அவரின் எண்ணம் எனக்குப் பிடித்திருந்தது. அந்த சூழ்நிலையில் இன்னொரு புத்தகம் யாருடையதைப் போடலாம் என்று நினைக்கையில் நண்பர் யுவ கிருஷ்ணா தொடராக எழுதிக் கொண்டிருந்த "அழிக்கப் பிறந்தவன்" கண்களில் பட்டது. நான் அவரிடம் கேட்கலாமா என நினைத்துக்கொண்டிருக்கையில், கேபிள் சங்கரே போன் செய்து, "யுவாவின் நாவலை நாம் புத்தகமாக கொண்டு வரலாமா?" என்றார்.
நான் உடனே யுவாவிடம் கேட்டுப்பார்க்கச் சொன்னேன். யுவாவும் உடனே ஒப்புதல் வழங்கிவிட்டார். பின் நாவலை படிப்பதற்காக அவரிடம் அனுமதி வாங்கி எனக்கு அனுப்பி வைக்கச் சொன்னேன். உடனே படித்து என் கருத்தினை சொல்லுமாறு கேட்டார். ஏனென்றால் அடுத்த நாள் அட்டைப்படம் டிஸைன் செய்து, உடனே லே அவுட்டுக்கு அனுப்ப வேண்டும். அதனால் சென்ற வாரத்தில் ஒரு நாள் இரவு 9 மணிக்கு படிக்க ஆரம்பித்தேன். அவ்வளவுதான் தெரியும் எனக்கு. பின் என்ன நடந்தது என்றே தெரியவில்லை.

கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க ஒரே படபடப்பு. ஹார்ட் பீட் பயங்கரமாக அடிக்க ஆரம்பித்துவிட்டது. உடனே கிளைமாக்ஸை படிக்காமல் ஒரு அரை மணி நேரம் தள்ளிப்போட்டேன். பின் ஒரு குறுஞ்செய்தி கேபிளுக்கும், யுவாவிற்கும் அனுப்பினேன்:

"I am in 16th Chapter. Reading with full tension. I just want to have a break and read after half an hour to enjoy the climax and the story. Congrats Yuva and thanks Cable"

பின் 30 நிமிடங்கள் கழித்து தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். அற்புதமான நடையில் விறுவிறுப்பாக எழுதப்பட்ட நாவல். இரவு 11.35க்கு நாவலை படித்து முடித்தேன். உடனே தொலை பேசியில் நண்பர் யுவகிருஷ்ணாவை தொடர்பு கொண்டு பாராட்டினேன். நண்பர் கேபிளுக்கும் நன்றி தெரிவித்தேன். அன்று இரவு முழுவதும் என்னால் சரியாக தூங்க முடியவில்லை. நாவலுக்குள் சென்றுவிட்டதால், மாரியும், நெடுஞ்செழியனும், வாப்பாவும், கொசுவும் என் தூக்கத்தை கெடுத்துவிட்டார்கள்.

சுஜாதா நாவலின் போதுதான் இந்த அவஸ்தைகளை அனுபவித்திருக்கிறேன். அதன் பிறகு யுவகிருஷ்ணாவின் நாவலைப் படித்த பிறகுதான் அந்த அவஸ்தையை மீண்டும் அனுபவித்தேன். இந்த நாவலை திரைக்கதையாக அமைத்தால், "மங்காத்தா" போல் நல்ல வெற்றி படமாக அமையும் வாய்ப்பு இருக்கிறது.

யுவகிருஷ்ணாவின் "அழிக்கப் பிறந்தவன்" மிகப் பெரிய வெற்றி அடைவது உறுதி. யுவாவின் எழுத்துக்களை எப்பொழுதுமே விரும்பி படிப்பவன் நான். நிச்சயம் அவருக்கு தமிழ் எழுத்துலகத்தில் நல்ல ஒரு இடம் காத்திருக்கிறது.

"உ" பதிப்பகம் மூலமாக யுவகிருஷ்ணாவின் நாவலை வெளியிடுவதை பெருமையாக கருதுகிறேன். விரைவில் நாவல் வெளியீடு தொடர்பாக உங்களைத் தொடர்பு கொள்கிறேன். பதிவுலக நண்பர்களின் மேலான ஆதரவினை எதிர்பார்க்கிறேன்.


11 comments:

Stumblednews said...

If you have an English blog, submit your post at Stumblednews.0fees.net to get more visitors to your blog.

காவேரிகணேஷ் said...

யுவாவின் எழுத்து சுனாமி பேரலை நம்மை உள்ளிழுத்து கொள்ளும்...

வாழ்த்துக்கள் யுவா..
வாழ்த்துக்கள் உ பதிப்பகத்தாருக்கு...

மணிஜி said...

அனுபவ வாசகனைக்கூட திணற வைக்கும் எழுத்தாற்றல் யுவாவுக்கு...வாழ்த்துக்கள்.. “உ” பதிப்பகத்துக்கும்....

Selmadmoi gir said...

வாழ்த்துக்கள்

பீர் | Peer said...

வாழ்த்துகள்

iniyavan said...

//காவேரிகணேஷ் said...
யுவாவின் எழுத்து சுனாமி பேரலை நம்மை உள்ளிழுத்து கொள்ளும்...

வாழ்த்துக்கள் யுவா..
வாழ்த்துக்கள் உ பதிப்பகத்தாருக்கு..// நன்றி காவேரிகணேஷ்.

iniyavan said...

//மணிஜி...... said...
அனுபவ வாசகனைக்கூட திணற வைக்கும் எழுத்தாற்றல் யுவாவுக்கு...வாழ்த்துக்கள்.. “உ” பதிப்பகத்துக்கும்....// வாழ்த்திற்கு நனி தலைவரே!

iniyavan said...

//Selmadmoi girl said...
வாழ்த்துக்கள்//

வருகைக்கு நன்றி தோழி.

iniyavan said...

// பீர் | Peer said...
வாழ்த்துகள்// வாழ்த்திற்கு நன்றி பீர்.

இளம் பரிதி said...

book fair la vangidalam..stall no sollunga...

சுரேகா.. said...

வாழ்த்துக்கள் என்.உலகநாதன் !!


உங்கள் உ பதிப்பகத்துக்கும், தன்னடக்கத்துக்கும்!! :)

யுவாவுக்கும் என் வாழ்த்துக்களைப் பதிவு செய்கிறேன்.