Jan 1, 2012

கற்றதும், பெற்றதும்!இனிய நண்பர்களுக்கு என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

2011:

'சென்ற வருடத்தில் நான்' என்று நேற்றே எழுத நினைத்தேன். ஆனால் பல வேலைகள் காரணமாக என்னால் எழுத முடியவில்லை. சென்ற வருடத்தில் நிறைய நல்ல விசயங்கள் என் வாழ்வில் நடந்திருப்பதாகவே நினைக்கிறேன்.

அலுவலகம்: நான் மிகவும் சந்தோசம் அடைந்த நாள் ஜீன் மாதம் 1 ஆம் தேதி. ஏனென்றால், அன்றைய தேதியில் இருந்துதான் கம்பனியின் இயக்குநராக பொறுப்பேற்றேன். அந்த உயர்வு என் வாழ்நாள் சாதனையாகவே நான் கருதுகிறேன். நான் எப்போதுமே மிகுந்த தன்னம்பிக்கையுடன் வாழ்வதால்தான் இது சாத்தியமாயிற்று என்று நினைக்கிறேன். மூன்று வருடங்களுக்கு முன்பே நான் என் மனைவியிடம் "நான் ஒரு நாள் இந்தக் கம்பனியின் இயக்குநர் ஆவேன்" என்று கூறியிருந்தேன். அப்போது அனைவரும் சிரிக்கவே செய்தார்கள். என்னைப் பொருத்தவரை நான் எப்போதுமே அதிகம் கனவு காண்பேன். அந்தக் கனவை நினைவாக்க மிகுந்த பாடுபடுவேன். கடைசியில் அதை அடையவும் செய்வேன்.

ஆனால் ஒரே ஒரு விசயத்தையும் இங்கே குறிப்பிட வேண்டும்.  இயக்குநர் ஆன பிறகு வாழ்க்கையின் நிம்மதியை தொலைத்துவிட்டேன். 24 மணி நேரமும் அலுவலகம் சார்ந்த பிரச்சனையிலேயே வாழ வேண்டி இருக்கிறது. இருந்தாலும் இதை ஒரு சுகமான சுமையாகவே எடுத்துக்கொண்டேன். பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல என்பதை உணர்ந்த ஆண்டு 2010.

தனிப்பட்ட வகையில் எல்லா வருடங்கள் போலவே சென்ற வருடமும் உடல் நிலையில் அதிக கவனம் செலுத்தினேன். தொடர்ந்து வாக்கிங், ஜிம் சென்றேன். எந்த நோயும் அண்டாமல் பார்த்துக்கொண்டேன். குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவு செய்தேன். இரண்டு முறை ஊருக்குச் சென்று வந்தேன். குடும்பத்துடன் தாய்லாந்துக்கு விடுமுறையை கழிக்கச் சென்றேன். சந்தோசமான நாட்கள் அவை.

ஜனவரியில் புதிய வீடுகள் கட்ட வாஸ்து பூஜை செய்தோம். யாரிடமும் கேட்காமல் மிகப்பெரிய தொகை பேங்கில் கடனாக வாங்கினேன். என்னுடைய வைப்புத் தொகைக்கு கொடுக்கும் வட்டியைவிட, கடனுக்கு அதிக வட்டி வாங்குகிறார்கள். ஜனவரியில் பாதிக்கடனையாவது அடைக்கலாமா? என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். அப்பா வாடகை கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்ட போது நாமும் நிறைய வீடு கட்ட வேண்டும் என்று நினைத்தேன். இதோ, அந்த ஆசை பூர்த்தியாகிவிட்டது. குறைந்த வாடகையில் நான்கு குடும்பங்களுக்கு வாடகைக்கு வீடுகளை தரப் போகிறேன்.

இந்த வருடத்தில் SBI Unit Linked Planல் போட்டிருந்த பணத்தை மீட்டு எடுத்தேன். போட்ட பணம் டபுள் ஆகும் என்றார்கள். ஆனால், வட்டியும் இல்லாமல், போட்ட பணமே கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட ரூபாய் 150,000 நஷ்டம் ஏற்பட்டது. இனி, இது போன்ற Mutual Fundல் பணத்தை முதலீடு செய்யக்கூடாது என்ற பாடத்தை கற்றுக்கொண்டேன். நிறைய நண்பர்களுக்கு பண உதவி செய்தேன்.

பதிவுலகம்: அதிகம் எழுதவில்லை என்றாலும், நானும் இந்த இடுகையையும் சேர்த்து 342 இடுகைகள் எழுதிவிட்டேன். ஒரு மீள்பதிவும் போட்டது கிடையாது. மார்ச்சில் "ழ" பதிப்பகம் மூலமாக என்னுடைய இரண்டு புத்தகங்கள் வெளியாகின. அதன் மூலம் நிறைய பாடங்கள் கற்றுக்கொண்டேன். 2010ல் நிறைய கதைகள் எழுதினேன். கல்கியில் என் கதை "அமுதா" பிரசுரமானது. இன்னும் நிறைய எழுதிக்கொண்டிருக்கிறேன். ஒரு ஆசையில் நண்பர்களுடன் "உ" பதிப்பகம் ஆரம்பித்தேன். அதன் மூலம் என்னுடைய "நான் கெட்டவன்" உட்பட மூன்று புத்தகங்கள் வெளியாகின்றன.

வலைப்பூவின் மூலம் நிறைய நண்பர்களைப் பெற்றேன். ஃபேஸ் புக்கிலும், டிவிட்டரிலும் அவ்வப்போது மட்டுமே வந்து சென்றேன். இன்னும் இவைகளை எப்படி உபயோகிப்பது என்ற சூட்சுமம் தெரியவில்லை.

2012:

நான் எப்போதும் போலவே வாழ விரும்புகிறேன். புது வருடத்திற்காக என்று எந்த ஒரு சபதமும் எடுத்துக்கொள்ளவில்லை. எப்போதும் போல தினமும் உடற்பயிற்சி செய்து நல்ல உடல் நலத்துடன் எந்தவிதமான கெட்டப் பழக்கங்களுக்கும் அடிமையாகாமல், எந்த வம்பு தும்பிலும் ஈடுபடாமல் வாழ்வேன் என்று நம்புகிறேன்.

நண்பர்களுக்கு மீண்டும் என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்!

பின் குறிப்பு: என்ன இது? ஒரே சந்தோசமான விசயங்களையும், தற்பெருமை குறித்தான இடுகையா இருக்கே? அப்போ நீங்க 2010ல எந்தப் பிரச்சனைகளையும் சந்திக்களையா? என கேட்கும் நண்பர்களுக்கு... பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கை உண்டா? சோகங்கள் இல்லாத வாழ்க்கை உண்டா? ஒரு மனிதன் எப்போதுமே சந்தோசமாக இருக்கும் சாத்தியம் உண்டா? இல்லைதானே? அதே போல்தான் என் வாழ்வும். நானும் நிறைய பிரச்சனைகளை சந்தித்தேன். நிறைய மனக் கஷ்டங்களை சுமந்தேன். அதையெல்லாம் ஏன் இப்போ சொல்ல வேண்டும்?

அதற்கு பதில் சந்தோசத்தை மட்டும் பகிர்ந்து, அந்த சந்தோசத்தின் அதிர்வை நண்பர்களுக்கும் அளிக்கலாம் அல்லவா? அதனால்தான் நல்ல விசயங்களை மட்டுமே பகிர்ந்து கொண்டேன்.

சென்ற வருடம் நான் எழுதிய இடுகை: 


19 comments:

dondu(#11168674346665545885) said...

// குறைந்த வாடகையில் நான்கு குடும்பங்களுக்கு வாடகைக்கு வீடுகளை தரப் போகிறேன்.//
யோசித்து செயல்படவும். குறைந்த வாடகைக்கு விட்டால் நீங்கள் அந்த வீட்டை மறந்து விட வேண்டியதுதான். நல்லதுக்கு இது காலமில்லை.

வாடகை சட்டங்கள் கடுமையானவை. குடித்த்னக்காரர்கள் ஆரம்பத்தில் நல்லபடியாக இருந்தாலும் பிற்காலத்தில் வீட்டை காலி செய்ய மறுத்து ஆகாத்தியம் செய்யலாம்.

நல்ல வக்கீலை கலந்து ஆலோசித்து விட்டை வடகைக்கு விடும் லீஸ் ஒப்பந்தத்தைத் தயார் செய்யவும்.

மார்க்கெட் விலைக்கு குறையாமல் வாடகை இருத்தல் நலம். முடிந்த வரை வாடகையை ஏர்றும் வகையில் ஒப்பந்தம் இருக்க வேண்டும்.

உங்கள் நல்ல உள்ளத்தை வைத்து பார்த்து ஏமாளி என்னும் முடிவுக்கு வந்து விட வாய்ப்பு உண்டு.

வீட்டம்மாவை கலந்து ஆலோசிக்கவும். அவர்கள் நம்மை விட அதிக யதார்த்தவாதிகள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Ganesan said...

All the best Thiru.ulaganathan. I am one of the readers of your blog / articles.Allocate some time to write in blog as you do for exercise etc. We expect more useful articles from you in 2012.

dhivya said...

I wish a Happy New Year to you and your family.

Ravisankaranand said...

டோண்டு கூறியதை வழி மொழிகிறேன், நீங்கள் பார்த்த லால்குடி வேறு இப்போதிருக்கும் லால்குடி வேறு.. பக்கா அக்ரிமென்ட் இல்லாது ஒத்திக்கோ அல்லது வாடகைக்கோ விட வேண்டாம் என்பது என்னோட ஒபினியன் :)

இராஜராஜேஸ்வரி said...

வாழ்நாள் சாதனைக்கு இனிய வாழ்த்துகள்..

இராஜராஜேஸ்வரி said...

"இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2012":

வாழ்க வளமுடன்!

சசிகலா said...

நான் எப்போதும் போலவே வாழ விரும்புகிறேன். புது வருடத்திற்காக என்று எந்த ஒரு சபதமும் எடுத்துக்கொள்ளவில்லை. எப்போதும் போல தினமும் உடற்பயிற்சி செய்து நல்ல உடல் நலத்துடன் எந்தவிதமான கெட்டப் பழக்கங்களுக்கும் அடிமையாகாமல், எந்த வம்பு தும்பிலும் ஈடுபடாமல் வாழ்வேன் என்று நம்புகிறேன்.

அருமை புத்தாண்டு வாழ்த்துக்கள் .

chinnathambi said...

anna ,
sbi unilt liked plan is not a mutual fund.


i think u have invested in bi life insurance ulip schemes which is having morethan 15-25 % charges,admin fees.

but sbi mutual fund wquity schems have only 2% fund management charge,

ப.கந்தசாமி said...

டோண்டு சொல்வதைக் கேட்கவும்.

உணவு உலகம் said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

iniyavan said...

//வீட்டம்மாவை கலந்து ஆலோசிக்கவும். அவர்கள் நம்மை விட அதிக யதார்த்தவாதிகள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

அன்பின் டோண்டு சார், நன்றி. நிச்சயம் வக்கீலை கலந்து ஆலோசிக்கிறேன்.

iniyavan said...

//Ganesan said...

All the best Thiru.ulaganathan. I am one of the readers of your blog / articles.Allocate some time to write in blog as you do for exercise etc. We expect more useful articles from you in 2012.//

வருகைக்கு நன்றி கணேசன். நிச்சயம் நிறைய எழுத முயற்சிக்கிறேன்.

iniyavan said...

//dhivya said...

I wish a Happy New Year to you and your family.//

திவ்யா, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள். நன்றி.

iniyavan said...

//இராஜராஜேஸ்வரி said...

வாழ்நாள் சாதனைக்கு இனிய வாழ்த்துகள்..//

நன்றி மேடம்.

iniyavan said...

"இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2012":

வாழ்க வளமுடன்!

உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகள் மேடம்.

iniyavan said...

//sasikala said...

அருமை புத்தாண்டு வாழ்த்துக்கள் .//

நன்றி சசி. உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்.

iniyavan said...

chinnathambi said...

anna ,
sbi unilt liked plan is not a mutual fund.


i think u have invested in bi life insurance ulip schemes which is having morethan 15-25 % charges,admin fees.

but sbi mutual fund wquity schems have only 2% fund management charge,

வருகைக்கு நன்றி சின்னத்தம்பி. நான் முதலீடு செய்தது SBI Unit Linked Insurance Plan. ஆனால் அவர்கள் நம் பணத்தை முதலீடு செய்வது Mutual Fund and Equity Fundலும்

iniyavan said...

//Blogger Palaniappan Kandaswamy said...

டோண்டு சொல்வதைக் கேட்கவும்//

நிச்சயம் சார்.

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
உங்கள் பதிவை படித்ததும் மனதுக்கு நிறைவாக இருந்தது.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.