கடந்த 31 நாட்கள் இந்தியாவில் இருந்துவிட்டு நேற்று தான் மலேசியா வந்தேன். போனது என்னவோ ஒரு முக்கியமான நிகழ்விற்கும், பிள்ளைகளை நல்ல பள்ளியில் சேர்ப்பதற்கும்தான். ஆனால், என்னுடைய அனைத்து விடுமுறை நாட்களும் அலுவலக வேலையிலேயே போய்விட்டது. இரண்டு தடவை சென்னைக்கும், இரண்டு தடவை மும்பைக்கும், ஒரு முறை ராணிப்பேட்டைக்கும் செல்ல வேண்டியதாகிவிட்டது. அதனால் என்னால் இணையப்பக்கமே வர இயலாமல் போய் விட்டது. இணையத்தில் படிக்காமலும் எழுதாமலும் இருந்தது மனதில் ஒருவித சோர்வை கொடுத்தது. ஒருவித ஏக்கம் மனம் முழுவதும் பரவியிருந்தது.
ஆனால் ஒரு மாதத்தில் பல நண்பர்களை சந்திக்க முடிந்தது. பலவிதமான மனிதர்களை சந்திக்க முடிந்தது. புத்தக கண்காட்சிக்கு ஒரே ஒரு நாள் நண்பர் கேபிளுடன் போய் வந்தேன். கிட்டத்தட்ட 40 புத்தகங்கள் வாங்கினேன். அங்கே நண்பர் யுவ கிருஷ்ணா, அதிஷா, பாலபாரதி, ரோமியோ, குகன், வேடியப்பன், சுகுணா திவாகர், கே ஆர் பி, நேசமித்திரன் மற்றும் சில நண்பர்களை சந்தித்தேன். கேபிளின் 'தெர்மோக்கோல் தேவதைகளும்' யுவாவின் 'அழிக்கப் பிறந்தவனும்' நன்றாக விற்றுக்கொண்டிருந்ததை நேரில் பார்த்து ஒரு பதிப்பாளர் என்ற முறையில் நிறைய சந்தோசப்பட்டேன்.
அப்போதுதான் ஒரு ஆர்வக்கோளாறில், டிஸ்கவரி பேலஸ் நண்பர் வேடியப்பனிடம் ஒரு கேட்க கூடாத கேள்வியைக் கேட்டேன்:
"சார், 'நான் கெட்டவன்' எத்தனை புத்தகம் விற்றிருக்கிறது''
"இந்த கேள்விக்கு நான் உண்மையையைத்தான் சொல்ல வேண்டியிருக்கும்"
"சொல்லுங்கள்"
சொன்னார். இனி எந்த புத்தகமும் எழுத வேண்டாம் என்று முடிவெடுத்த தருணம் அது.
கல்கி அலுவலகம் சென்றேன். நண்பர் அமிர்தம் சூர்யாவுடன் பேசிக்கொண்டிருந்தது ஒரு நல்ல சுவையான அனுபவம்.
பின் நண்பர்கள் அப்துல்லா, கேபிள், யுவ கிருஷ்ணா, அதிஷா ஆகியோருடன் ரெசிடன்ஸி டவரில் லஞ்ச் சாப்பிட்டேன். பல விசயங்களை பேசினோம். பல வித டென்ஷன்களுக்கு நடுவில் மனம் கொஞ்ச நேரம் லேசாக சந்தோசமாக இருந்தது.
இந்த ஒரு மாதத்தில் நான் சந்தித்த பல சுவையான அனுபவங்களை எழுத நினைத்திருந்தேன். ஆனால் இப்போது அந்த ஆர்வம் மிகவும் குறைந்துவிட்டது.
ஒரு நாள் எங்கள் ஊர் விநாயகர் கோவிலுக்கு சென்றிருந்தேன். பூஜையை பாதியில் நிறுத்திவிட்டு, குருக்கள் என்னிடம் ஓடி வந்தார்.
"சார் உங்கள் புத்தகம் 'வீணையடி நீ எனக்கு' படித்தேன். நீங்க நம்ம தெருவில பல வருடங்கள் குடி இருந்தது தெரியும். உங்களை நான் என்னவோ என்று நினைத்திருந்தேன். மிக உயர்ந்த இடத்தில் வைத்திருந்தேன். கதைகளை படித்ததும் உங்கள் மீது நான் வைத்திருந்த பிம்பம் சுக்கு நூறாக உடைந்துவிட்டது. அத்தனை காதல்களா உங்கள் வாழ்க்கையில்? ஒரு பெண்ணை விட்டு வைக்கவில்லையா நீங்கள்"
என்ன பதிலை நான் சொல்வது? 'என்னுரையை' அவர் சரியாக படிக்கவில்லை. கதைகளை கதைகளாக பார்க்காமல் அது அத்தனையும் என் வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்கள் என்று அவர் நினைத்தாரே ஆனால் அதற்கு நான் என்ன செய்வது?
சாமி கும்பிடாமல் பாதியில் திரும்பிவிட்டேன்.
இன்னொரு நண்பர் சந்தித்தார். கதைகளைப் பற்றி மிக ஆர்வமாக பேசினார். "இது போல எழுத மிகுந்த துணிவு வேண்டும்" என்றார். கிளம்புகையில்,
"என்னைப் பற்றியோ என் வாழ்வில் நடந்தவைகளைப் பற்றியோ தயவு செய்து கதையாக எழுதிவிடாதீர்கள்" என்று சொல்லிவிட்டு ஒரு மாதிரி என்னைப் பார்த்துவிட்டு போனார்.
இவர்களை எல்லாம் நான் என்ன சொல்லி புரிய வைப்பது. என் மூன்றாவது புத்தகமான "நான் கெட்டவன்" புத்தகத்தின் சில பிரதிகளை எங்கள் ஊருக்கு கொண்டு சென்றிருந்தேன். கடைசியில் யாரிடமும் கொடுக்காமல் திரும்ப கொண்டு வந்துவிட்டேன்.
இன்னொரு முறை ஒவ்வொருவருக்கும் விளக்கம் சொல்லிக்கொண்டிருக்க விருப்பம் இல்லை எனக்கு!
17 comments:
தலைவரே.. நீங்க எழுதுறது எல்லாம் உங்ககதை தான்னா நான் எழுதற நான் ஷர்மி வைரத்தை நான் தான்னு நினைச்சா என்ன பதில் சொல்வேன். விடுங்க பாஸு.. இதையெல்லாம் புரிஞ்சுக்க முடியாதவங்களுக்கு பதில் சொல்றதை விட அதை ஒரு கதையா எழுதி அவனுங்களூக்கு கொடுங்க.. :)
அருமையான பதிவு.
நன்றி.
தங்களின் தளத்தை எனக்குப் பிடித்த தளமாக தேர்வு செய்து 'லீப்ஸ்டர்' விருதை தங்களுக்கு அறிவித்து மகிழ்கிறேன். விபரம் என் இடுகையில்...
http://kavipriyanletters.blogspot.in/2012/02/blog-post.html
Sir, I came to your site for 20 times atleast to see if any new posts by you.
Today I thot of writing to ask. but, your new post is already there.
there are many silent readers like me.
keep writing.
thanks.
karthik
sir, if they thot your stories, it a is sucess of your writing skill.
its their problem.
I have not read the book yet. i will buy the book and read.
pls dont worry.
keep writing.
thanks.
karthik.
அன்பின் உலக்ஸ்
புத்தகங்கள் எழுதி இலக்கியபணி ஆத்தியது போதும், ப்ளாக்கிலும் பத்திரிக்கைகளிலும் தொடர்ந்து எழுதுங்க - எங்களை மாதிரி நண்பர்களுக்காக
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
நம்முடைய அனுபவங்களை, வாழ்க்கைப் பயணத்தைத்தான் எழுத்தாக்குகிறோம். அடுத்தவர்கள் அதில் குறை காண்கிறார்கள் என்பதற்காக எழுதுவதை நிறுத்தி விடாதீர்கள். ப்ளீஸ்.......
அடுத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதன் வடிவமல்ல நாம். நாம் எப்படி என்பது நமக்கு மட்டுமே முழுமையாகத் தெரியும். மற்றவர்களுக்குத் தெரிந்தது நம்மில் ஒரு சிறு பகுதி மட்டுமே. விமர்சனங்கள், அவமானங்களெல்லாம் எழாமல் இருக்காது. ஆனால் அதை தூரத்தில் நின்று பார்த்துவிடும் ஒரு பயணியைப் போல நாம் கடந்து சென்று விட வேண்டும். அது தான் வெற்றிக்கான வழி.
வீழ்த்தும் கணைகளாய் பாயும் அவமானம்
வீழ்த்தி வெல்வதே வாழ்வின் வெகுமானம்
//சங்கர் நாராயண் @ Cable Sankar said...
தலைவரே.. நீங்க எழுதுறது எல்லாம் உங்ககதை தான்னா நான் எழுதற நான் ஷர்மி வைரத்தை நான் தான்னு நினைச்சா என்ன பதில் சொல்வேன். விடுங்க பாஸு.. இதையெல்லாம் புரிஞ்சுக்க முடியாதவங்களுக்கு பதில் சொல்றதை விட அதை ஒரு கதையா எழுதி அவனுங்களூக்கு கொடுங்க.. :)//
நன்றி தலைவரே!
//Rathnavel Natarajan said...
அருமையான பதிவு.
நன்றி//
வருகைக்கு ந்நன்றி சார்.
//கவிப்ரியன் said...
தங்களின் தளத்தை எனக்குப் பிடித்த தளமாக தேர்வு செய்து 'லீப்ஸ்டர்' விருதை தங்களுக்கு அறிவித்து மகிழ்கிறேன். விபரம் என் இடுகையில்...//
விருதிற்கு நன்றி கவிப்ரியன்.
karthik said...
Sir, I came to your site for 20 times atleast to see if any new posts by you.
Today I thot of writing to ask. but, your new post is already there.
there are many silent readers like me.
keep writing.
thanks.
karthik
தங்களின் அன்பிற்கு நன்றி கார்த்திக்.இனி தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.
karthik said...
sir, if they thot your stories, it a is sucess of your writing skill.
its their problem.
I have not read the book yet. i will buy the book and read.
pls dont worry.
keep writing.
thanks.
karthik.
நன்றி கார்த்திக்
//sriram said...
அன்பின் உலக்ஸ்
புத்தகங்கள் எழுதி இலக்கியபணி ஆத்தியது போதும், ப்ளாக்கிலும் பத்திரிக்கைகளிலும் தொடர்ந்து எழுதுங்க - எங்களை மாதிரி நண்பர்களுக்காக
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//
புரிந்து கொண்டேன் ஸ்ரீ! நன்றி.
//எம்.ஞானசேகரன் / Gnanasekaran.M said...
நம்முடைய அனுபவங்களை, வாழ்க்கைப் பயணத்தைத்தான் எழுத்தாக்குகிறோம். அடுத்தவர்கள் அதில் குறை காண்கிறார்கள் என்பதற்காக எழுதுவதை நிறுத்தி விடாதீர்கள். ப்ளீஸ்.......//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சார்.
//மாதவன் said...
அடுத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதன் வடிவமல்ல நாம். நாம் எப்படி என்பது நமக்கு மட்டுமே முழுமையாகத் தெரியும். மற்றவர்களுக்குத் தெரிந்தது நம்மில் ஒரு சிறு பகுதி மட்டுமே. விமர்சனங்கள், அவமானங்களெல்லாம் எழாமல் இருக்காது. ஆனால் அதை தூரத்தில் நின்று பார்த்துவிடும் ஒரு பயணியைப் போல நாம் கடந்து சென்று விட வேண்டும். அது தான் வெற்றிக்கான வழி.
வீழ்த்தும் கணைகளாய் பாயும் அவமானம்
வீழ்த்தி வெல்வதே வாழ்வின் வெகுமானம்//
தங்களின் தெளிவான பின்னூட்டத்திற்கு நன்றி மாதவன்.
Ppl always think lik this only. But life shud go on. So continue ur gud work.
Post a Comment