Mar 5, 2012

350வது இடுகை: வாக்கிங், யோகா, ஜிம் பற்றி...


இந்த கட்டுரையை படிக்கும் நண்பர்களின் ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் எதிர்பார்க்கிறேன்.

சிறுவயதிலிருந்தே உடல் நலனில் மிகுந்த அக்கரையுடன் இருப்பவன் நான். வாக்கிங் செல்லும் பழக்கம் அப்பாவிடமிருந்து ஏற்பட்டது. வீட்டில் உள்ள சிலரின் உடல் நல கோளாறுகளாலும், சில நண்பர்களின் உடல் சார்ந்த பிரச்சனைகளாலும், என் உடலை மிகுந்த ஆரோக்கியத்துடன் வைத்திருக்க முடிவுசெய்தேன். 1994ல் வேதாத்திரி மகரிஷியின் எளிய முறை உடற்பயிற்சி கற்றுக்கொண்டேன். அதற்கு முன்பே சித்தர்கள் யோகாசனங்கள் செய்து வந்தாலும், தினமும் வேதாத்திரி மகரிஷியின் யோகாவும், சர்வாங்காசனமும், சக்கராசனமும் செய்து வந்தேன். 1996ல் இருந்து தினமும் அதிகாலையில் 45 நிமிடம் நடக்க ஆரம்பித்தேன். எப்படி என்றால், முதலில் நடை பெயற்சி சென்றுவிட்டு வந்து பின் குளித்து முடித்தவுடன் யோகாசனமும், காயகல்பமும் செய்து வந்தேன்.

அதோடு நிற்கவில்லை. சில உறவினர்களின் மரணமும், நண்பர்களின் மரணமும் என்னை மிகுந்த யோசனைக்குள்ளாக்கியது. வாழ்க்கையை பற்றிய பயத்தை ஏற்படுத்தியது. அதனால் 2001ல் இருந்து மாலை ஒரு மணி நேரம் ஜிம் செல்ல ஆரம்பித்தேன். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்கள் உடல் நலத்திற்கே செலவானது. இப்படியே கிட்டத்தட்ட 17 வருடங்களாக தொடர்ந்து செய்து வருகிறேன். 1999 மே வரை நான் தனி ஆள். ப்ரச்சனை இல்லை. ஆனால், கல்யாணம் ஆன பின் சில மாதங்கள் இந்த பழக்கங்களால் என் மனைவி கொஞ்சம் எரிச்சலான சம்பவங்களும் நடந்தன. பின் என்னைப் பற்றி புரிந்து கொண்டு என் போக்கில் விட்டு விட்டார்கள். 

இது மட்டும் இல்லை. அப்பா ஓவ்வொரு திங்கள் கிழமையும் விரதம் இருப்பார். அதாவது ஞாயிறு இரவு 8 மணிக்கு சாப்பிட்டு முடித்தார் என்றால், அடுத்த நாள் இரவு 8 மணிக்குத்தான் சாப்பிடுவார். நடுவில், காபி அல்லது ஜீஸ் குடிப்பதுண்டு. அவரால் நானும் விரதம் இருக்க ஆரம்பித்தேன். தீபாவளி, பொங்கல் திங்கள் கிழமை வந்தால் கூட எதுவும் சாப்பிட மாட்டேன். டிரிங்ஸ் பழக்கமோ அல்லது சிகரெட் பிடிக்கும் பழக்கமோ கிடையாது. நண்பர்கள் செந்தில், கவுண்டமணி ஜோக்குகளை சொல்லி கிண்டலடிப்பதுண்டு. எனக்கும் தெரியும், எந்த கெட்ட பழக்கங்கள் இல்லாதவர்கள் கூட சிறுவயதில் இறந்திருக்கிறார்கள் என்று. அது அவர்களின் கர்மா என்றே நான் நினைத்துக்கொள்வேன்.

ஆனால் நண்பர்கள் என்ன சொன்னாலும், நான் கடுமையாக அனைத்தையும் முறைப்படி கடை பிடித்ததால் உடல் நிலை நன்றாக இருந்தது. இருக்கிறது. ஆனால், பதவி உயர்வு வந்தவுடன் நிறைய மீட்டிங் அட்டெண்ட் செய்ய வேண்டி வந்தது. எல்லா மீட்டிங்களும் திங்கட் கிழமையே வந்தது. ஒரே நாளில் ஆறு மீட்டிங் அட்டெண்ட் செய்ய வேண்டிய சூழ்நிலைகளில், என்னால் சாப்பிடாமல் இருக்க முடியவில்லை. அதனால், இந்த திங்கள் கிழமை விரதம் சில வருடங்களுக்கு முன்னால் என்னை விட்டுச் சென்றது.

போன வருடத்தில் ஒரு நாள். நிறைய வேலை, டென்ஷன் காரணமாக வெறுப்பின் உச்சக்கட்டத்தில் இருந்தேன். வாக்கிங், யோகா செய்துவிட்டு ஆபிஸ் வந்தால், இங்கே TPM எக்ஸர்சைஸ் வேறு. இதனால் ஒரு நாள் பயங்கர யோசனை ஏற்பட்டது. எதற்காக இவ்வளவும் செய்ய வேண்டும். ஏன் வாழ்க்கையில் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கக்கூடாது? என்று நினைத்தேன். அதன் விளைவு காலையில் யோகாவை கட் செய்துவிட்டேன். அதற்கு முன் ஜிம்மை விடலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் என்னால் விடமுடியவில்லை.

வொர்க் அவுட் செய்வதனால் ஏற்படும் அந்த உடல் வலி இல்லாமல் என்னால் தூங்க முடியவில்லை. பல வருட பழக்கம். அதனால்தான் யோகாவை விடும்படி ஆகிவிட்டது.

இவ்வளவு கஷ்டப்பட்டு அனைத்தையும் செய்ய வேண்டுமா? என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் இத்தனை வருடங்களாக நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பதற்கு இவைகள்தானே காரணம். அதுவும் இல்லாமல் தினமும் உடற்பயிற்சி செய்பவர்களால்தான் அந்த சந்தோசத்தை உணர முடியும். இத்தனை வருடங்களாக கமபனியில் MC எடுக்காத ஒரே ஆள் நான் தான். "எல்லோரும் ஒரு நாள் போகிறவர்கள்தானே?" என்ற கேள்வி எழலாம். ஆனால் போவது பிரச்சனை இல்லை. இருக்கும் வரை ஆரோக்கியமாக இருக்க வேண்டாமா?

இப்போது என் பிரச்சனை என்னவென்றால், சில நண்பர்கள், "நீ யோகாவை விட்டது தவறு. இந்த வயதிற்கு அப்புறம், நீ யோகாவும், தியானமும்தான் அதிகம் செய்ய வேண்டும். ஜிம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை" என்கிறார்கள்.

ஆனால் எனக்கோ ஜிம்மை விட மனசில்லை. காலையில் வாக்கிங் மட்டும்தான் என்ற முடிவில் இருக்கிறேன். ஏனென்றால் இரவில் நிறைய படிப்பதால் என்னால் அதிகாலை 5.30 மணிக்கு முன் எழ முடியவில்லை.

அதனால், மாலையில் ஜிம் செய்வதா இல்லை யோகாவும், தியானமும் செய்வதா? என்று ஒரே குழப்பமாக இருக்கிறது. 

யாரேனும் எனக்கு நல்ல ஆலோசனைகள் தர முடியுமா?

ப்ளீஸ்!


9 comments:

இராஜராஜேஸ்வரி said...

350வது இடுகைக்கு
வாழ்த்துகள...

இராஜராஜேஸ்வரி said...

யார்கிட்டேயும் யோச்னை கேட்ககூடாது,... மருத்துவரிடம் மட்டும் கேட்டு செயல்படுத்த வேண்டும்..

வாழ்க வளமுடன்...

யுவகிருஷ்ணா said...

1994க்குப் பிறகு நான் காய்ச்சல், கீய்ச்சல் என்று மருத்துவமனைக்கு போனதே கிடையாது.

நான் எக்சர்சைஸோ, யோகாவோ செய்வதில்லை :-)

Amri said...

Moving from a regular gym workout to yoga/tai chi/Qigong workout will shift the focus of your workout from the sympathetic (fight or flight) to parasympatheic (relax or renew) nervous system. (Example reference: http://sites.google.com/site/psychospiritualtools/Home/psychological-practices/activating-the-parasympathetic-wing-of-your-nervous-system)

iniyavan said...

//இராஜராஜேஸ்வரி said...
350வது இடுகைக்கு
வாழ்த்துகள...//

நன்றி மேடம்.

iniyavan said...

//இராஜராஜேஸ்வரி said...
யார்கிட்டேயும் யோச்னை கேட்ககூடாது,... மருத்துவரிடம் மட்டும் கேட்டு செயல்படுத்த வேண்டும்..

வாழ்க வளமுடன்...//

மருத்துவரை கேட்டால் அனைத்தையும் செய்வது நல்லது என்கிறார்.

iniyavan said...

//யுவகிருஷ்ணா said...
1994க்குப் பிறகு நான் காய்ச்சல், கீய்ச்சல் என்று மருத்துவமனைக்கு போனதே கிடையாது.

நான் எக்சர்சைஸோ, யோகாவோ செய்வதில்லை :-)//

கேட்கவே சந்தோசமாக இருக்கிறது யுவா.

iniyavan said...

Amri said...
Moving from a regular gym workout to yoga/tai chi/Qigong workout will shift the focus of your workout from the sympathetic (fight or flight) to parasympatheic (relax or renew) nervous system. (Example reference: http://sites.google.com/site/psychospiritualtools/Home/psychological-practices/activating-the-parasympathetic-wing-of-your-nervous-system

உண்மைதான் நண்பா!. வருகைக்கு நன்றி.

நிகழ்காலத்தில்... said...

இப்ப உங்க மனசு என்ன சொல்லுதோ அதுபடி செய்யுங்க :)

மனம் மாறும். அல்லது சூழ்நிலைகள் மாறும் அப்போது தொடரலாம். ஆயினும் வாரம் ஒருமுறையேனும் டச் அப் இருப்பது நல்லது :))