அம்மா மிகவும் நன்றாக பாடுவார். பாட பாட கேட்டுக்கொண்டே இருக்கலாம். சிறு வயதில் அம்மாவின் தாலாட்டு பாடல்களை கேட்டுத்தான் வளர்ந்தேன். பள்ளியில் படிக்கும் போது நிறைய பாடல்கள் பாடியிருக்கிறேன். ஒருதலை ராகம் படத்தில் வரும் 'இது குழந்தை பாடும் தாலாட்டு' பாடலை பாடி ஆறுதல் பரிசு வாங்கியுள்ளேன். பல வருடங்கள் லால்குடியில் இருந்து திருச்சியில் உள்ள பள்ளிக்கும் சரி, கல்லூரிக்கும் சரி டிரெயினில்தான் சென்றேன். அப்போது எல்லாம் நண்பர்களின் விருப்பத்திற்கு இணங்க தினமும் பல பாடல்கள் டிரெயினில் பாடுவேன்.
கல்லூரியில் படிக்கும் போதும் சில போட்டிகளில் பாடி உள்ளேன். ஆனால் முறைப்படி சங்கீதம் கற்றுக்கொள்ளவில்லையாதலால் எந்த ஒரு பரிசும் வாங்கியதாக நினைவில்லை. எப்படி கிரிக்கெட் என் பெரும்பாலான இளமை வாழ்க்கையை அபகரித்துக்கொண்டதோ அதே போல சங்கீதமும் என்னை அரவணைத்துக்கொண்டது. ஆனால் படிப்பு என்ற ஒரு விசயத்தால் நான் ஆசைப்பட்ட எதிலும் கவனம் செலுத்தி பெரிய அளவில் வளர முடியவில்லை.
இருந்தாலும் என்னளவில் தினமும் பாடிக்கொண்டுதான் இருக்கிறேன். இரு வருடங்களுக்கு முன் எங்கள் அலுவலகத்தில் நடந்த ஒரு ஆண்டுவிழாவில் திடீரென பாடச் சொன்னார்கள். ஒரு பாடல் எந்தவித பயிற்சியும் இல்லாமல் பாடினேன். நண்பர்கள் நன்றாக இருந்ததாக சொன்னார்கள். இப்படி போய்க் கொண்டிருந்த என் வாழ்வில் திடீரென ஒரு ஆசை நேற்று இரவு தோன்றியது. ஒரு பாடலை கரோக்கி இசையுடன் பாடிப் பார்த்தால் என்ன? உடனே முயற்சி செய்து எந்தவித பயிற்சியும் இல்லாமல் இந்த பாடலை பாடினேன். நான் முதலில் பதிவு செய்த பாடலை கேட்ட என் பெண்ணும், பையனும்,
"டாடி, ரொம்ப ஹை லெவல்ல பாடறீங்க. இன்னும் கொஞ்சம் லோவா பாடணும். கொஞ்சம் எட்ட நின்னு பாடுங்கன்னு" பாடகர் ஹரிஹரன் (ஹரியுடன் நான்) போலவும், சூப்பர் சிங்கர் ஜட்ஜ்கள் போலவும் எனக்கு அட்வைஸ் செய்தார்கள். பிறகு மீண்டும் பாடி பதிவு செய்தேன். நன்றாக இருப்பதாக சொன்னார்கள், உடனே குறிப்பிட்ட சில நண்பர்களுக்கு அனுப்பி அவர்களின் அபிப்ராயத்தை கேட்டேன். அவர்களோ, "ஓரளவு நன்றாக இருப்பதாக" கூறினார்கள்.
அதனால் அந்த பாடலை உங்களிடமும் இப்போது பகிர்ந்து கொள்கிறேன். மீண்டும் சொல்கிறேன், 'நான் முறைப்படி சங்கீதம் கற்றுக்கொள்ளவில்லை. முறையான பயிற்சி கிடையாது'.
அதனால் யாரும் இதை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஜாலியாக எடுத்துக்கொள்ளுங்கள். இது நன்றாக இருக்கும் பட்டத்தில் இன்னும் சில பாடல்கள் பாடி பார்க்க ஆசை.
இதோ அந்த பாடல் உங்களுக்காக! ஆரம்பம் மெதுவாக ஆரம்பிக்கும். அதனால உடனே பாடலை நிறுத்திவிட வேண்டாம். முழுவதையும் கேட்டுவிட்டு என்னை திட்டலாம்.
18 comments:
சார். சூப்பரா பாடி இருக்கீங்க..
Dear Ulaks,
Not bad. But still required more practice. You can contact Ananth Sir the India's Leading Voice Specialist.
Regards,
G.Nagarajan
Dear Ulaks,
Fairly good. Some pronunciations "zha" "La" needs to be corrected. Hope you don't mind for these comments.
Bala
Good one Ulaks. I remember those train days between Lalgudi and Trichy.
Regards
Raj
//கல்லூரியில் படிக்கும் போதும் சில போட்டிகளில் பாடி உள்ளேன்//
//லால்குடியில் இருந்து திருச்சியில் உள்ள பள்ளிக்கும் சரி, கல்லூரிக்கும் சரி ட்ரெயினில்தான் சென்றேன். நண்பர்களின் விருப்பத்திற்கு இணங்க தினமும் ட்ர்யினில் பாடுவேன். //
இதை பற்றி நீங்கள் மூன்றாண்டுகள் முன் எழுதிய பதிவில் படித்த நினைவு, ஆனால் அப்போது நான் அதை பெரியதாக எடுத்துக்கொள்ள வில்லை.
நிலாவே வா என்றஎன் அபிமான SPB குரலில் அமைந்த, இசைஞானியின் பாடலை, உங்கள் குரலில் கேட்ட போது எனக்கு தோன்றியது இது தான்:
ஆகா..!! இவரு நல்லாத்தான் பாடி இருக்காரு!!
பாடலை எடுக்கும் ("ஆ" காரத்துடன்) விதமே நன்றாக தான் இருந்தது!
மிகச்சிறிய அளவில் இசை பிழைகள் இருந்தாலும் , நீங்கள் முறைப்படி கற்றுகொள்ளவில்லை என்பதாலும், முறையான பயிற்சிகள் இல்லை என்பதாலும், பிழைகளை ஒரு பொருட்டாக தோன்றவில்லை. கேட்கும் செவிகளுக்கு இனிமையாகவே இருந்தது.
காலம் ஒன்றும் தாழ்ந்துவிடவில்லை , இப்போது கூட நீங்கள் யாரிடமாவது அணுகி முறைகளை கற்றுக்கொண்டு செம்மை ஆகலாம். ராஜா சார் சிம்பனி இசை அமைக்கும் போது அவருக்கு வயது ஐம்பதுக்கும் மேல்.ராஜா சாரே இப்போதும் கூட இசை கற்றுக்கொண்டு தான் இருக்கிறார்!!
உங்கள் குரலில் ஒரு வசீகரம் உள்ளது, மேலும் பல பாடல்களை கேட்க ஆசையாகவும் உள்ளது.
நாம் மேற்கொள்ளும் பொருளீட்டும் வகை வாழ்கை முறைகள் ஒரு நல்ல பாடகனை புறம்தள்ளி, ஒரு நல்ல CFOவை தந்துள்ளது :-)
Dear Mr.Ulaganathan
Mr.ravi has articulated my thoughts well.
i am of the same opinion.
this proves GOD practice favoritism.
you have all in your favor , fret not ..lead a happy life.
i wish you all the best in life
with regards
amirtham mohan
Excellent singing. How did you do this?
Regards
V. Madan
Dear Ulaganathan,
for a beginner, it is really good. learn under a guru and you can become a better singer. it was good to listen.all the best and iam proud of your passion for fine arts.
thirumalai
Good try! But avoid Falsetto!!
Regards
Hari
//அமுதா கிருஷ்ணா said...
சார். சூப்பரா பாடி இருக்கீங்க..
April 11, 2012 1:47 PM //
நன்றி மேடம்.
மெயிலில் கருத்துகளையும் பாராட்டுக்களையும் தெருவித்த நண்பர்கள் G Nagarajan, R Bala, MK Rajkumar, Amirtham Mohan, V Madan,TRS, K Thirumalai & Hari ஆகிய நண்பர்களுக்கு நன்றி.
//உங்கள் குரலில் ஒரு வசீகரம் உள்ளது, மேலும் பல பாடல்களை கேட்க ஆசையாகவும் உள்ளது.
நாம் மேற்கொள்ளும் பொருளீட்டும் வகை வாழ்கை முறைகள் ஒரு நல்ல பாடகனை புறம்தள்ளி, ஒரு நல்ல CFOவை தந்துள்ளது :-)//
உங்களின் பாராட்டிற்கும், வாழ்த்திற்கும் நன்றி.
கரோக்கி இசையின் வடிவம் வலையில் கிடைக்கிறதா?
நீங்கள் பாடியது ஓரளவிற்கு நன்றாக இருப்பினும், உச்சரிப்பில் பல பிழைகள் இருக்கிறது..
லகர,ளகரங்களில்..
Hi Ulaks,
I still remember our school days in Bishop where you always hum some song or the other. Nice to hear your voice again. Can you give me your contact details please. I live in Dubai.
Good luck to you.
Sundar (your class mate)
Hi Ulaganathan,
Still I remember our school days in Bishop. You always hum some song or other when we travel by train. Nice to hear your voice after long years.
Can you give me your contact details. I live in Dubai now.
Good luck to you and stay in touch
Sundar (your class mate from srirangam)
Hi Ulaks,
I still remember our school days in Bishop where you always hum some song or the other. Nice to hear your voice again. Can you give me your contact details please. I live in Dubai.
Good luck to you.
Sundar (your class mate)
//Oops, we can’t reach SoundCloud.//
:-((((
//Hi Ulaganathan,
Still I remember our school days in Bishop. You always hum some song or other when we travel by train. Nice to hear your voice after long years.
Can you give me your contact details. I live in Dubai now.
Good luck to you and stay in touch
Sundar (your class mate from srirangam)//
Hi sundar, please mail me. the email id is iniyavan2009@gmail.com
Post a Comment