Apr 18, 2012

அதோ மேக ஊர்வலம்...


நான் கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்த போது வந்த படம் 'ஈரமான ரோஜாவே'. இளம் வயதிலேயே நாசர் அப்பா வேடத்தில் நடித்திருப்பார். சிவா மற்றும் மோகினி நடித்த படம். எனக்கு மிகவும் பிடித்த படம். காதல் மயக்கத்தில் வாழ்ந்து கொண்டிருந்த போது பார்த்த படம். அந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் "அதோ மேக ஊர்வலம்". பாடல் எந்த அளவிற்கு கேட்க இனிமையாக இருக்கிறதோ அதே அளவிற்கு பாடலை படம்பிடித்த விதம் இருக்கும் என நினைத்து ஏமாந்து போன பாடல் உள்ள படம் அது. எஸ் பி பாலசுப்ரமணியம் கேட்கவே வேணாம், அந்த அளவிற்கு இனிமையாக பாடி இருப்பார். மோகினிக்கு நடிக்கவும் வரவில்லை, நடனமும் வரவில்லை. இப்பொழுது சொல்லி என்ன பயன்?

இதோ அந்த பாடலின் வீடியோ உங்களுக்காக:


திடிரென இந்த பாடலை நேற்று கேட்டவுடன் பாடிப் பார்க்கும் ஆசை வந்து தொலைத்துவிட்டது. கொஞ்சம் வேறு மாதிரி பாட முயற்சித்து பார்த்தேன். ஓரளவிற்கு நன்றாக வந்துள்ளது. சில ஹையர் நோட்ஸ் சரியாக ரீச் ஆகவில்லை. ஒரு இடத்தில் லோயர் நோட்ஸில் சரியாக லேண்டாகவில்லை போலிருக்கிறது. நீங்கள் இந்த பாடலை எஸ் பி பாலசுப்ரமணியம் குரலில் என்னிடம் எதிர்பார்க்க கூடாது. இந்த பாடலை என் குரலில் கேட்டு பாருங்கள்.

மீண்டும் சொல்கிறேன். எதையும் சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் ஜாலியாக என் இந்த பாடலை கேளுங்கள்:




4 comments:

சசிகலா said...

பாத்ரூம் பாடகராக மட்டும் இல்லாமல் பதிவாக்கிய விதம் அருமை .

கிரி said...

உலகநாதன் நன்றாக பாடி இருக்கிறீர்கள். முதலில் கொஞ்சம் திணறினாலும் போகப்போக உதயநிதி மாதிரி பிக்கப் பண்ணிட்டீங்க :-)

வாழ்த்துக்கள்.

Unknown said...

அன்பின் நண்பருக்கு,

நன்றாகப் பாடுகிறீர்கள். வாழ்த்துக்கள்.

//எஸ் பி பாலசுப்ரமணியம் கேட்கவே வேணாம், அந்த அளவிற்கு இனிமையாக பாடி இருப்பார்.//

இந்தப் பாடலைப் பாடியது எஸ்.பி.பி அல்ல. பாடகர் மனோ.

Ravisankaranand said...

இன்று இப்போது தான் கேட்க நேர்ந்தது,

நன்றாகவே உள்ளது, இனி வாரம் ஓர் பாடலாவது பதிவிடுமாறு கேட்டுகொள்கிறேன். சூப்பர் சூப்பர் சூப்பர்

... இன்னும் என்ன சொல்ல :)