Aug 2, 2012

தனிமை....


"தனிமையிலே இனிமை காண முடியுமா?" என்ற பாடலை கேட்கும் போது எல்லாம் ஆசையாக இருக்கும். நான் எப்பொழுதும் நண்பர்கள் கூடவே இருப்பவன். கூட்டுக்குடும்பத்தில் பிறந்து அதிலே வாழ்ந்தவன். அப்படிப்பட்ட எனக்குச் சில வேளைகளில் தனிமையாக இருக்க ஆசை வரும். அப்போது கற்றுக்கொண்டதுதான் தியானம் எல்லாம். பள்ளி கல்லூரி காலங்களில் எதையாவது படிக்க வேண்டும் என்றால் கூடப் பயமாக இருக்கும். அப்பா பார்த்துவிட்டால் என்ன ஆகுமோ என்று பயப்படுவேன். ஆனால் அந்தத் தனிமை கிடைக்காமலே இருந்தது. பின் வேலையில் சேர்ந்து அலுவலக விசயமாக ஹோட்டல்களில் தங்கும் போது கூட முதலில் தனியாக ஆசையாக இருக்கும். பின் வேலை முடிந்து ரூமுக்கு செல்ல நேரம் ஆகும். வீட்டில் பேசிவிட்டுப் படுத்தால் தூக்கம் வரும். எங்கும் செல்ல முடியாது. கோலாலம்பூர், சிங்கப்பூர் இரவு வாழ்க்கையைச் சொல்லவே வேண்டியது இல்லை. 

ஆனால் இன்றோ தனிமையில் இருக்கிறேன். இந்தத் தனிமை என்ற விசயம் எவ்வளவு கொடுமையானது என்று இப்போதுதான் தெரிகிறது. வீடு முழுவதும் ஆட்கள் இருந்து விட்டு இன்று அதே வீட்டில் தனியாக இருப்பது போல் உள்ள கொடுமை உலகத்தில் எதுவுமே இல்லை. வேலை முடிந்து வீட்டிற்குச் சென்றால் நம் டென்ஷனை குறைக்கக் குழந்தைகளோ அல்லது பகிர்ந்து கொள்ள மனைவியோ இல்லை. சில நேரங்களில் அழுகை அழுகையாக வருகிறது. அப்படியும் மூன்று வேளையும் சமைத்துக் கொண்டு, அலுவலக வேலையும் பார்த்துக்கொண்டு, ஜிம்முக்கு சென்று கொண்டு இருப்பதால் கிடைக்கும் ஓய்வு நேரம் மிக மிகக் குறைவு. அந்த ஓய்வு நேரத்திலும் இப்படிப்பட்ட உணர்வுகள் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. 

மிகப் பெரிய வீட்டில் கார் பார்க்கில் ஆரம்பித்து ஐந்து கதவுகளைப் பூட்டியும் கூட ஏன் மாடியில் ஏதோ மூலையில் இருக்கும் பெட் ரூம் கதவையும் பூட்டுகிறேன் என்று தெரியவில்லை. முன்பெல்லாம் படுத்தால் தூங்கி விடுவேன். இப்போதோ இரவு தூக்கம் என்பது மிகக் கொடுமையான விசயம் என்று ஆகிப்போனது. தனிமையாக வாழ்பவர்கள் கம்ப்யூட்டர் நெட் கனக்ஷன் வத்திருப்பது மிகப் பெரிய தவறு என்று இப்போது அனுபவப்பூர்வமாகத் தெரிகிறது. தினமும் அதிக நேரம் கண்விழித்துக் கம்ப்யூட்டரில் மூழ்க கூடாது என்று காலையில் போடும் தீர்மானம் இரவில் மறந்து விடுகிறது. சரி அப்படி எதையாவது எழுதுகிறோமா? என்றால் அதுவும். இல்லை. கண்டதையும் படித்துக்கொண்டு, பார்த்துக்கொண்டு!! எனக்கே இது அசிங்கமாகவும், வெட்கமாகவும் வேதனையாகவும் இருக்கிறது. புத்தகக் கண்காட்சியில் வாங்கிய ஏராளமான புத்தகங்கள் அட்டையுடன் என்னைப் பார்த்து அலமாரியில் சிரிக்கின்றன. ஏன் என்னால் முழுக் கவனத்துடன் படிக்கவோ எழுதவோ முடியவில்லை? யோசித்துப் பார்த்தால் ஒன்று தெளிவாகப் புரிகிறது. தனியாக இருக்கிறோம் என்ற உணர்வை மறைக்க, ஏதாவது ஒன்றில் ஈடுபடவேண்டும் என்ற நினைப்பில் மனம் குப்பையை நோக்கி செல்கிறது. இது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் விசயம் என்பதும் மிகத் தெளிவாகத் தெரிகிறது. 

அந்த நேரத்தில் நிறைய நல்ல விசயங்களைப் படிக்கலாம். நிறையக் கதைகள் எழுதலாம். பாட்டுப் பாடலாம், கேட்கலாம். நன்கு யோசித்து ஆராய்ந்து பார்த்தால்தான் மனம் ஒரு இடத்தில் நிற்காமல் கண்டபடி அலைபாய்வது தெரிகிறது. "நாம் யார்? சமுதாயத்தில் நம் நிலை என்ன? நமக்குப் பிள்ளைகள், மனைவி, குடும்பம் இருக்கிறது. இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது" என்று சுய பரிசோதனை செய்ய வேண்டியது அவசியமாகிறது. 

நேற்று வெட்டித்தனமாக நேரத்தை செலவு செய்து இரவு அதிக நேரம் முழித்து இருந்ததால் என்னைப் பற்றித் தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரை எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. அதுவும் இல்லாமல் என்னைப் போல் இப்போது தனிமையில் இருப்பவர்கள் தன்னைச் சுயபரிசோதனை செய்து கொள்ளவும் இது உதவும் என்று நம்புகிறேன். 

சென்ற சனிக்கிழமை நடந்த இன்னொரு விசயத்தையும் இங்கே பகிர்வது அவசியமாகிறது. எனக்கு அதிக நண்பர்கள் இருப்பதால் ஆரம்பக் காலங்களில் இருந்தே நிறையப் பேசுவேன். எத்தனை நண்பர்கள் இருந்தாலும் என் பேச்சுத்தான் அதிகமாக இருக்கும். என் பேச்சைத்தான் மற்றவர்கள் கேட்பார்கள். அப்படித்தான் இருந்திருக்கிறேன். இருக்கிறேன். இதில் நன்மையும் உண்டு தீமையும் உண்டு. அலுவகத்தில் மிகப்பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் அதிகம் பேசக்கூடாது. என்ன தேவையோ அதைத்தான் பேச வேண்டும். நான் அதிகம் பேசுவதால் பல பிரச்சனைகளைச் சந்தித்திருக்கிறேன். என்னால் பேசாமால் இருக்க முடியாது. என்ன செய்வது? 

மிகவும் ஆராய்ந்து பார்த்து ஒரு முடிவு எடுத்தேன். "கொஞ்ம் கொஞ்சமாக அதிகம் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். தேவையில்லாமல் யாரிடமும் பேசக்கூடாது" செயல்படுத்துவது மிகவும் கடினம் என்றாலும், முயற்சித்துப் பார்க்க முடிவு செய்து செயலில் இறங்கினேன். இந்த நிலையில்தான் என்னையே அறியாமல் ஒரு விசயம் சென்ற சனியன்று நடந்தது. வெள்ளி இரவு மனைவியுடன் பேசிவிட்டு படுக்கும் போது இரவு மணி 10. காலை எழுந்த போது மணி 8.30. அன்று எனக்கு விடுமுறை. முதல் வாரம்தான் நண்பர்கள் வந்து சென்றார்கள். அதனால் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்தேன். மூன்று வேளையும் புதிதாகச்(?) சமைத்துச் சாப்பிட்டேன். இரவு வந்தது. 10 மணிக்கு மனைவிடமிருந்து போன். அப்பொழுதுதான் அந்த விசயமே எனக்குத் தெரிந்தது. என்னவென்றால் ஏறக்குறைய 24 மணி நேரம் யாரிடமும் நான் பேசாமல் இருந்திருக்கிறேன். என்னையறியாமலேயே நடந்திருக்கிறது. நானும் யாரிடமும் பேசவில்லை. நினைத்து பார்த்தால் சந்தோசமே மிஞ்சியது. பேசினால்தான் பிரச்சனையே வருகிறது. பேசாவிட்டால் எந்தப் பிரச்சனையும் வருவதில்லை. எனர்ஜியும் அநாவசியமாகச் செலவாவதில்லை. 

என்னிடமும்."பிடிக்காததனாலோ இல்லை விசயம் எதுவும் இல்லை என்ற காரணத்தினாலோ அன்று யாரும் என்னிடம் பேசவில்லை" என்ற விசயத்தையும் இங்கே சொல்ல விரும்புகிறேன். 

இந்தக் கட்டுரையை எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ முடித்திருக்கிறேன். இதிலிருந்தே மனம் ஒரு நிலையில் இல்லை என்று தெரிகிறது. அதற்கு ஒரே மருந்து தினமும் எழுதுவதுதான். என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே? 


12 comments:

கோவை நேரம் said...

அடடா...தனிமையில் ரொம்ப கஷ்ட படறீங்க போல....எழுதுங்க...பாட்டு கேளுங்க...

Thozhirkalam Channel said...

தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி

Thozhirkalam Channel said...

தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி

Yaathoramani.blogspot.com said...

மிகச் சரியாக ஆரம்பித்து
மிக்ச் சரியாகத்தான் முடித்திருக்கிறீர்கள்
அப்படியே மனதிற்குள் பேசுவதைக் குறைத்துக் கொண்டாலும்
பிரச்சனைகள் அதிகம் குறையுமோ ?
தெளிவூட்டிப்போன அருமையான பதிவு
பகிர்வுக்கு மிக்க நன்றி
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 2

iniyavan said...

//கோவை நேரம் said...
அடடா...தனிமையில் ரொம்ப கஷ்ட படறீங்க போல....எழுதுங்க...பாட்டு கேளுங்க...//

வருகைக்கு நன்றி நண்பா! அதைத்தான் செய்யலாம் என்று இருக்கிறேன்.

iniyavan said...

//Cpede News said...
தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி//

நன்றி.

iniyavan said...

//Ramani said...
மிகச் சரியாக ஆரம்பித்து
மிக்ச் சரியாகத்தான் முடித்திருக்கிறீர்கள்
அப்படியே மனதிற்குள் பேசுவதைக் குறைத்துக் கொண்டாலும்
பிரச்சனைகள் அதிகம் குறையுமோ ?
தெளிவூட்டிப்போன அருமையான பதிவு
பகிர்வுக்கு மிக்க நன்றி
தொடர வாழ்த்துக்கள்//

வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி சார்.

திண்டுக்கல் தனபாலன் said...

பாட்டை மட்டும் துணைக்கு அழைத்துக் கொள்ளுங்கள்...

இல்லையெனில் மனம் கவர்ந்த புத்தகம்...

சந்தோசம் பொங்கும்...

நன்றி…
(த.ம. 3)

iniyavan said...

Babu Raghunathan
Aug 3 (4 days ago)

to me
Dear ulaganathan,


I read your post 'thanimai', 6 hrs after my mom, my wife and my baby left here from US
to India for vacation, now I'm alone @ my home and felt like god is talking to me all these words because I found so much
coincidence with me.

வீடு முழுவதும் ஆட்கள் இருந்து விட்டு இன்று அதே வீட்டில் தனியாக இருப்பது போல் உள்ள கொடுமை உலகத்தில் எதுவுமே இல்லை

இப்போது எங்கு பார்த்தாலும் என் அம்மா, மனைவி மற்றும் குழந்தையின் குரல் தான் கேட்கிறது.
எவ்வளவு சினிமாவை ஒட்டி இருப்பேன் , ஆனால் இந்த நினைவுகள் எல்லாம் நிஜம் என்று புலனாகிறது

சில நேரங்களில் அழுகை அழுகையாக வருகிறது.

அதற்கு ஒரே காரணம் பாசம் காரணமாய் வரும் dependency

அப்படியும் மூன்று வேளையும் சமைத்துக் கொண்டு, அலுவலக வேலையும் பார்த்துக்கொண்டு, ஜிம்முக்கு சென்று கொண்டு இருப்பதால் கிடைக்கும் ஓய்வு நேரம் மிக மிகக் குறைவு. அந்த ஓய்வு நேரத்திலும் இப்படிப்பட்ட உணர்வுகள் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

exactly, I tried it today and it did not work out well today. may be tomorrow.

"நாம் யார்? சமுதாயத்தில் நம் நிலை என்ன? நமக்குப் பிள்ளைகள், மனைவி, குடும்பம் இருக்கிறது. இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது" என்று சுய பரிசோதனை செய்ய வேண்டியது அவசியமாகிறது.என்னைப் போல் இப்போது தனிமையில் இருப்பவர்கள் தன்னைச் சுயபரிசோதனை செய்து கொள்ளவும் இது உதவும் என்று நம்புகிறேன்.

Sure, I will take it as a good advice from you.

Regards,
Babu

iniyavan said...

//திண்டுக்கல் தனபாலன் said...
பாட்டை மட்டும் துணைக்கு அழைத்துக் கொள்ளுங்கள்...

இல்லையெனில் மனம் கவர்ந்த புத்தகம்...

சந்தோசம் பொங்கும்...

நன்றி…
(த.ம. 3)//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தனபாலன்.

iniyavan said...

Babu Raghunathan
Aug 3 (4 days ago)

to me
//Dear ulaganathan,


I read your post 'thanimai', 6 hrs after my mom, my wife and my baby left here from US
to India for vacation, now I'm alone @ my home and felt like god is talking to me all these words because I found so much
coincidence with me.//

உங்களின் வருகைக்கும், நீண்ட மடலுக்கும் நன்றி.