Aug 5, 2012

மரங்கள்....


வீட்டைச் சுற்றி மரங்களுடன் நல்ல ஒரு தோட்டத்தில் குடி இருக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. ஆனால் அஃது ஒரு நிராசையாகவே உள்ளது. எங்கள் ஊரில் அதாவது நான் பிறந்த ஊரில் அப்படி ரம்யமான இடம் உண்டு. எங்கள் வீட்டின் பின் நிறைய மரங்கள் உள்ளது. சிறு வயதில் மாங்காய் மரங்களுக்கு நடுவில் கயிற்றுக் கட்டில் படுத்துத் தூங்கிய சுகம் இன்னும் நெஞ்சினில் பசுமையான நினைவாய் இருக்கிறது. ஆனால் அங்கே நான் போய் ஐந்து வருடங்கள் ஆகிறது. இப்போது உள்ள சூழ்நிலையில் அது போல் ஒரு வீடு அமையுமா? என்பது கேள்விக்குறிதான்.

முதன் முதல் நான் ப்ளாட் வாங்கிய போது அந்த இடத்தைப் பார்த்து அவ்வளவு சந்தோசம் அடைந்தேன். காரணம் இடம் முழுவதும் மரங்கள். தேக்கு மரங்கள் வேறு இருந்தன. அந்த இடம் மட்டுமே காலி மனையாக இருந்தது. அந்த நகரம் வயலாக இருந்து பின் வீடுகளாய் இருபது வருடங்களுக்கு முன்னே மாறிப்போய் இருந்தாலும், அந்த இடம் மட்டும் காலியாகவே இருந்தது. மிகவும் பிடித்து இருந்ததால் கேட்ட பணத்தைக் கொடுத்து அந்த இடத்தை வாங்கினேன். ஆனால் வீடு கட்டலாம் என்று முடிவு செய்தபோது, ஒரு பக்கம் சந்தோசம் இருந்தாலும் இன்னொரு பக்கம் கொஞ்சம் தயக்கமாக இருந்தது.

காரணம் இன்ஜினியர் அனைத்து மரங்களையும் வெட்ட சொல்லிவிட்டார். மரங்களை வெட்டாமல் விட்டால் வீடு கட்ட முடியாது. என்ன செய்வது? ஓரத்தில் உள்ள மரங்களையெல்லாம் விட்டுவிட்டு மற்ற மரங்களை வெட்டச் சொன்னேன். அப்படியே வீடும் கட்டி முடித்தாகிவிட்டது. ஆனால், காம்பவுண்ட் கட்டும் போது மீண்டும் அதே பிரச்சனை. மரங்களை வெட்டியே ஆக வேண்டும். வேறு வழியே இல்லை. நான் சங்கடப்படுவதைப் பார்த்து என் இன்ஜினியர் நண்பர் சொன்னார், "உலக்ஸ், ஏன் கவலை படறீங்க! எத்தனை மரங்கள் வெட்டுகிறோமோ அத்தனை மரங்கள் நட்டுவிடுங்கள்" என்றார். நானும் சரி என்று ஒத்துக்கொண்டேன்.

வீடு கட்டி 9 வருடங்கள் முடிந்துவிட்டது. ஆனாலும் என்னால் என்ன காரணத்தினாலோ மரங்களை நடமுடியாமல் போய்விட்டது. ஆனால் மனதில் ஒர் ஓரத்தில் அந்தக் கவலை இருந்து கொண்டே இருந்தது. அந்தக் கவலை இப்போது ஓரளவு குறைந்து விட்டது. சென்ற மாதம் எங்கள் கம்பனியின் வளாகத்தில் மரங்கள் நடக்கூடிய ஒரு பொன்னான வாய்ப்புக் கிடைத்தது. மனம் நிறைவாக இருக்கிறது. ஆனால், என்ன ஒன்று தமிழ் நாட்டில் எங்கள் பகுதியில் நடாமல் மலேசியாவில் மரங்களை நட்டிருக்கிறேன்.


எங்கு நட்டால் என்ன? மலேசியாவும் பூமியில்தானே இருக்கிறது?


8 comments:

iK Way said...

நல்ல விஷயம், பாராட்டுக்கள்.

எனக்கும் நீண்ட நாட்களாக ஒரு சிந்தனை (அ) சந்தேகம். மாற்றி மாற்றி வரும் தமிழக அரசுகள் கர்நாடகாவுடன், ஆந்திராவுடன், கேரளாவுடன் என்று தண்ணீருக்காக வழக்காடி செலவு செய்வதை ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, வேலூர் என்று மரமாக நட்டு வளர்த்திருந்தால் தண்ணீரில் தன்னிறைவு பெற்று ஓர் எடுத்துக்காட்டாக இருந்திருப்போம் என்று தோன்றுகிறது. நீங்கள் என்ன நினைக்கீறீர்கள்.

http://concurrentmusingsofahumanbeing.blogspot.in

மாதேவி said...

வீட்டில் நடமுடியவில்லையே என்ற எண்ணம் இருக்கத்தான் செய்யும்.

ஆம் எங்கு நட்டால் என்ன நல்லசெயல்தானே பசுமை வளரட்டும்.

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான பகிர்வு.... பாராட்டுக்கள்....

தொடர வாழ்த்துக்கள்... நன்றி... (T.M.2)


என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

iniyavan said...

// iK Way said...
நல்ல விஷயம், பாராட்டுக்கள்.

எனக்கும் நீண்ட நாட்களாக ஒரு சிந்தனை (அ) சந்தேகம். மாற்றி மாற்றி வரும் தமிழக அரசுகள் கர்நாடகாவுடன், ஆந்திராவுடன், ////கேரளாவுடன் என்று தண்ணீருக்காக வழக்காடி செலவு செய்வதை ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, வேலூர் என்று மரமாக நட்டு வளர்த்திருந்தால் தண்ணீரில் தன்னிறைவு பெற்று ஓர் எடுத்துக்காட்டாக இருந்திருப்போம் என்று தோன்றுகிறது. நீங்கள் என்ன நினைக்கீறீர்கள்.

http://concurrentmusingsofahumanbeing.blogspot.in//

நீங்கள் சொல்வது உண்மைதான் நண்பா

iniyavan said...

//மாதேவி said...
வீட்டில் நடமுடியவில்லையே என்ற எண்ணம் இருக்கத்தான் செய்யும்.

ஆம் எங்கு நட்டால் என்ன நல்லசெயல்தானே பசுமை வளரட்டும்.

August 5, 2012 9:01 PM //

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மாதேவி.

iniyavan said...

//திண்டுக்கல் தனபாலன் said...
சிறப்பான பகிர்வு.... பாராட்டுக்கள்....

தொடர வாழ்த்துக்கள்... நன்றி... (T.M.2)//

தொடர் வருகைக்கு நன்றி தனபாலன். T.M.2 அப்படின்னா என்ன?

ceecoms said...

தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி

வாருங்கள் ஒன்று திரள்வோம்!!!!!!!!!!!!!!!

தமிழின் பெருமையை உலகிற்கு உரைத்து சொல்ல ஒன்று கூடுவோம்.....

ஆகஸ்ட் - 26-ல் சென்னை மாநகரில்.....

அனைத்துலகத் தமிழ் பதிவர்களின் சந்திப்பு வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி (ஞாயிறு) சென்னையில் நடைபெற இருப்பதால் தமிழ் வலைப் பதிவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வருகை தாருங்கள்.....


மதுமதி மற்றும் குழுவினருடன் மக்கள் சந்தை.com
95666 61214/95666 61215
9894124021

ceecoms said...

தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி

வாருங்கள் ஒன்று திரள்வோம்!!!!!!!!!!!!!!!

தமிழின் பெருமையை உலகிற்கு உரைத்து சொல்ல ஒன்று கூடுவோம்.....

ஆகஸ்ட் - 26-ல் சென்னை மாநகரில்.....

அனைத்துலகத் தமிழ் பதிவர்களின் சந்திப்பு வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி (ஞாயிறு) சென்னையில் நடைபெற இருப்பதால் தமிழ் வலைப் பதிவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வருகை தாருங்கள்.....


மதுமதி மற்றும் குழுவினருடன் மக்கள் சந்தை.com
95666 61214/95666 61215
9894124021