நான் பள்ளியில் படிக்கும் போது ஒரு முறை அப்பா சென்னை சென்றிருந்தார். வர சில நாட்கள் ஆகிவிட்டது. அப்பாவைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை. அம்மாவிடம் தினமும் நச்சரித்துக்கொண்டே இருந்தேன். அப்போது தொலைபேசி கிடையாது. அவர் அலுவல் முடிந்து வீட்டுக்கு வரும் வரை சரியாக சாப்பிடாமல், தூங்காமல் அடம் பிடித்தேன்.
நேற்று மனைவிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது அவர்கள் சொன்ன விசயம் என்னை ரொம்பவே சிந்திக்க வைத்துவிட்டது. இதோ அவருக்கும் என் பிள்ளைகளுக்கும் நடந்த உரையாடல்:
"டேய், அப்பா வரப்போறாங்க. அதனால அடுத்த வாரம் அவங்க வர அன்னைக்கு ஸ்கூல் போக வேண்டாம்"
பையனும், பெண்ணும், "ஏன்?"
"அப்பா, வந்தவுடனே உங்களைப் பார்க்கணும்னு ஆசைப்படுவாங்க இல்லை"
"லீவெல்லாம் போட முடியாது"
"அப்பா பாக்கணும்னு சொல்லுவாங்கடா"
"அதான் சாயந்தரம் வருவோம்ல. அப்ப பாத்துக்குறோம்"
என் அப்பாவை நினைத்துக்கொண்டேன். ஜெனரேஷன் கேப். வேறு என்ன சொல்ல?
*****************************************************
என்னுடைய புத்தகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இப்பொழுதுதான் விற்றுக்கொண்டிருக்கின்றன என நினைக்கிறேன். நான் பொதுவாக எனக்கு வரும் கடிதங்களை நான் பிரசுரிப்பதில்லை. இந்த ஒரு முறை மட்டும். இந்த நண்பர் எழுதிய மெயில் சந்தோசம் அளித்தாலும், கடைசி வரிக்கு முதல் வரி கொஞ்சம் என்ன மிகவே அதிகம்தான். இருந்தாலும் சந்தோசம்!
இனிய உலகநாதன்,
வணக்கம். நலம். நலம் நாடுகிறேன்.
உங்களது "வீணையடி நீ எனக்கு" சிறுகதைத் தொகுப்பு தலைப்பு பிடித்து வாங்கினேன்.
காட்சிகளை விவரமாக சொல்லியுள்ளீர்கள். நன்றாக உள்ளது..
சுஜாதா-வின் சீரங்கத்து தேவதை நடை போல இருந்தது.
தொடர்ந்து எழுதி வாருங்கள்.
சிநேகமாய்
முருகன் சுப்பராயன்
சென்னை
*****************************************************
நேற்றைய என் பதிவை படித்துவிட்டு அவ்வளவு கேவலமாக ஆகிவிட்டாயா? என்று கேட்ட நண்பர்களுக்காக இந்த படம். எப்படி என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். ப்ளேக்பெரி போனில் எடுத்தது. அதனால் கொஞ்சம் சின்னதாகத்தான் இருக்கும்.
*****************************************************
என் நண்பன் ஒருவன் சவுதி அரேபியாவில் வேலை செய்து கொண்டிருந்தான். பல வருடங்களுக்கு முன் அவன் விடுமுறையில் வந்த போது ஐய்வா டேப் ரெக்கார்டர் வாங்கி வந்தான். அப்போதிலிருந்து நானும் வாங்க ஆசைப்பட்டேன். ஆனால் பல காரணங்களால் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. சென்றவாரம் ஒரு வழியாக ஒரு ஹோம் தியேட்டர் வாங்கினேன். என் மனதை எப்போதும் சந்தோசமாக வைத்திருக்கும் என் ஹோம் தியேட்டர் இதோ!. இந்த படங்கள் ஏற்கனவே கூகிள் +லும், பேஸ்புக்கிலும் பகிர்ந்ததுதான் என்றாலும், இங்கேயும் பதிக்கிறேன்:
*****************************************************
பல மாதங்களாக ஒரு பாடலும் பாடாமல் இருந்தேன். நேற்று திடீரென மூட் வரவே ஒரு பாடலை பாடிப்பார்க்க முயற்சித்தேன். இந்த பாடலின் கரோக்கி என்னிடம் இருந்தாலும், ஒரு முறை மியூஸிக் இல்லாமல் என் குரல் வளத்தை செக் செய்து கொள்ள ஆசைப்பட்டேன். பாடி முடித்து உடனே அப்லோட் செய்ய மனமில்லை. என் நண்பர் ரவி சங்கர் ஆனந்த். மிகுந்த இசை ஞானம் உள்ளவர். எப்பொழுதும் பாடலைக்கேட்டுவிட்டு சில கருத்துகள், திருத்தங்கள் சொல்வார். அவரிடம் பாடலை அனுப்பி அவரின் கருத்தைக்கேட்டேன். நன்றாகவே இருக்கிறது என்றார். அதனால் இங்கே அந்த பாடலை பதிக்கிறேன். உங்களின் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.
*****************************************************
எனக்கு மிகவும் பிடித்த ஒரு பழைய பாடல் "இது மாலை நேரத்து மயக்கம். பூமாலை போல் உடல் எனக்கும்". இந்த பாடலைப் பற்றி ஏற்கனவே சில வருடங்களுக்கு முன் MP3 யோடு எழுதியிருக்கிறேன். அதற்கான வீடியோ கிடைக்காமல் அலைந்து கொண்டிருந்தேன். இப்போதுதான யாரோ ஒரு புண்ணியவான் யூடுபில் அப்லோட் செய்திருக்கிறார். என்னால் அதை தரவிறக்கம் செய்ய முடியவில்லை. அதனால் அதன் லிங்கை கீழே தருகிறேன். எல் ஆர் ஈஸ்வரியின் குரலின் உள்ள வசீகரத்தைப் பாருங்கள். இந்த பாடலை அமைதியான மூடில் இரவில் கேட்டுப் பாருங்கள். சொர்க்கம்.
https://www.youtube.com/watch?v=8d_xbq3xFtE
https://www.youtube.com/watch?v=8d_xbq3xFtE
*****************************************************
2 comments:
சார் எனக்கு மிகுந்த இசை ஞானமெல்லாம் ஒன்னும் கிடையாது.. மிகுந்த இசை ஆர்வம் மட்டுமே உண்டு :-) ஒரு பாடல் கேட்டு நன்றாக இருக்கிறது இல்லை என்று சொல்ல இசை ஆர்வமே போதும்..
பாடிய விதம் நன்றாகத்தான் உள்ளது.நீங்க ஏன் இசைஞானி இசையில் அமைந்த ஏதாவது ஓர் பாடலை பாடி, அவருடைய
http://www.ilayathalam.com/ என்ற அதிகாரபூர்வமான வலைதளத்தில் பதிவேற்ற கூடாது? அவருக்கும் உங்க குரல் பிடித்துவிட்டால், உங்க சிறு வயது கனவில் ஒன்றான பாடகன் ஆசை நிறைவேற கூடுமே?
குறிப்பு : பின்னணி இசை இல்லாமல் வெறும் குரல் பதிவு மட்டுமே உள்ள இந்த பாடல் பதிவு செய்யப்பட்ட இடத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும், அதாவது ஒரு ரிக்கார்டிங் தியேட்டரில் அல்லாது வீட்டு PC முன் அமர்ந்து பாடும் போது clarity எதிர் பார்க்க இயலாது.
Sir,
You have really lost weight. Tummy is totally gone. Mixer post was good.
Thx.
Karthik
Post a Comment