Nov 23, 2012

மிக்ஸர் - 23.11.2012


இந்த வருட தீபாவளி பல வருடங்களுக்குப் பிறகு நண்பர்களுடன் உறவினர்களுடன் கொண்டாடினேன். சந்தோசமாகக் கழிந்தது. இந்த வருடம் தீபாவளி நிகழ்ச்சி எதையுமே டிவியில் பார்க்கவில்லை. நண்பர்களுடன் சீட்டு விளையாண்டது மறக்க முடியாத அனுபவம். இதை எல்லாம் விட அதிகச் சந்தோசப்படும் ஒரு விசயமும் நடந்தது. தீபாவளி கல்கி சிறப்பிதழில் என்னுடைய கதை "விமானத்தில் ஒரு இரவு" பிரசுரமாகி இருந்தது. கதையைப் பிரசுரித்த கல்கி நிறுவனத்திற்கும், தேர்வு செய்த நண்பர் அமிர்தம் சூர்யாவிற்கும் நன்றி! //அந்த தொலைபேசி அழைப்பு வந்தபோது நான் ஒரு முக்கியமான மீட்டிங்கில் இருந்தேன். காலையில்தான் எங்கள் ஊரிலிருந்து 5 மணிக்குக் காரில் கிளம்பி அறு மணிக்கு அடுத்த டவுணில் உள்ள ஏர்போர்ட்டை அடைந்து அவசர அவசரமாக முதல் விமானத்தைப் பிடித்துக் கோலாலம்பூர் வந்து, டாக்ஸியில் சென்றால் நேரம் ஆகும் என்று அங்கிருந்து KLIA Express Train பிடித்துக் காலை 9 மணிக்கு அந்த மீட்டிங் ஹாலை அடைந்து, காலை உணவு சாப்பிடாமல், பசியுடன் அமர்ந்து இருந்தபோதுதான் அந்த அழைப்பு வந்தது........// 


மேலும் படிக்க: http://www.kalkionline.com/kalki/2012/nov/18112012/kalki_home.php******************************************************************************** 

சூப்பர் சிங்கர் ஜூனியரில் முன்பு ஜெயித்த அல்கா அஜித்தின் தீவிரமான ரசிகன் நான். அவர் பாடிய அனைத்து பாடல்களையும் தேடிப்பிடித்துக் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். என்ன ஒரு குரல் வளம். அதுவும் சத்ய பிரகாசுடன் அவர் பாடிய "உதயா உதயா" பாடலை தினமும் யுடியூபில் பார்க்கிறேன். கேட்கிறேன். எனக்கு என்னமோ ஒரிஜினல் பாடலை விட இவர்கள் பாடியிருப்பது மிகவும் நன்றாக இருப்பது போல் தெரிகிறது. முடிந்தால் நீங்களும் கேட்டுப்பாருங்களேன்:

அல்கா அஜித்


******************************************************************************** 

"செருப்பால அடிப்பேன்" அப்படினு சொல்லி நீங்க கேள்வி பட்டுருப்பீங்க. ஆனா நேர்ல பார்த்துருக்க மாட்டீங்க இல்லையா? ஏன்னா எல்லோரும் கோபத்தில் சொல்லும் வார்த்தைகள் இவை. அவ்வளவு சாதாரணமாகச் செருப்பால் அடிக்க வேண்டும் என்று யாருக்கும் தோன்றாது. ஆனால், நேற்று நடந்த இந்த சம்பவம் என் எண்ணத்தை மாற்றிவிட்டது.

எங்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டில ஒரு வயதான கிழவி இருக்கிறது. பார்த்தால் வயதான தோற்றம் தெரியாது. ஏன் என்றால் எப்போதும் வயதுக்கு ஏற்ற உடை அணியாமல் நைட்டியில்தான் இருக்கும். தீடிரென நேற்று இரவு பக்கத்து வீட்டில் ஒரே சத்தம். "என்ன நாம் தமிழ் நாட்டிலா இருக்கிறோம்?" என்று ஒரு கணம் யோசித்துவிட்டு எங்கள் வீட்டு கதவை திறந்து பார்த்தால் அந்தக் கிழவி அவருடைய பேரனை செருப்பால் ஓங்கி ஓங்கி அடித்துக்கொண்டு இருந்தது. அதுவும் வீட்டின் வெளியே கார் பார்க்கிங் ஏரியாவில்.  எனக்கு ஒரே கோபம். என்ன செய்வதென்று தெரியவில்லை. நல்ல வளர்ந்த பையன் அவன். அவனோ அடியை வாங்கிக்கொண்டு அப்படியே அவனின் பைக்கில் அமர்ந்திருக்கிறான். ஒரு பத்து நிமிடம் தொடர்ந்து அவனை அடித்தது. என் கண்கள் எல்லாம் கலங்கிவிட்டது. ஏன் அவ்வளவு அரக்கத்தனம் அந்த கிழவிக்கு என்று எனக்கு புரியவில்லை.

செருப்பால் அடிக்கும் அளவிற்கு அவன் அப்படி என்ன தப்புச் செய்தான் என இன்னும் யோசித்துக்கொண்டிருக்கிறேன். 


******************************************************************************** 

சென்ற திங்கள் இரவு கோலாலம்பூர் புக்கிட் பிண்டாங் பகுதியில் வாக்கிங் சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு வயதான தம்பதியர் என்னை நிறுத்தி, அவர்கள் பர்ஸை யாரோ தொலைத்துவிட்டதாகவும், சாப்பிட பணம் இல்லை என்றும் கொடுத்து உதவுமாறும் கெஞ்சி கேட்டனர். உடனே மனமிறங்கிய நான் அவர்கள் சாப்பிடுவதற்கும், வீடு செல்வதற்கும் பணம் கொடுத்து விட்டு என் வாக்கிங்கை தொடர்ந்தேன். ஒரு 40 நிமிட நடைப் பயிற்சிக்குப் பின் ஹோட்டலை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தேன். அப்போது யாரோ, "கால் இருக்கா இல்லையா உங்களுக்கு?" என்று சத்தமாகக் கேட்பது காதில் விழுந்தது. யாரென்று திரும்பி பார்த்தால் அதே தம்பதியினர் இன்னொருவரிடம் பணம் கேட்டு, அவர்கள் திட்டிக்கொண்டிருந்தனர். கடுப்புடன் அவர்களைப் பார்க்க, அவர்களோ என்னைத் தெரியாதது போல் நடந்து சென்றனர். இந்த மாதிரி ஆட்களை என்ன செய்வது? 

******************************************************************************** 
செஃப் ஜேக்கப்பை எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் பிடிக்கும். அவருடைய மறைவு என்னால் நம்பவே முடியவில்லை. அவ்வளவு ஹேண்ட்சம்மான பர்சனாலிட்டி கொண்டவர் அவர். எனக்கு என்ன வருத்தம் என்றால், அவரின் சமையல் நிகழ்ச்சியை "ஆஹா என்ன ருசியில்" பார்க்கும் போது நான் இப்படிக் கமெண்ட் அடிப்பதுண்டு: 

"என்னப்பா இது இவ்வளவு எண்ணையை ஊத்துறார். இவர் சொல்றா மாதிரி சமைச்சா ஹார்ட் அட்டாக் வந்து போக வேண்டியதுதான்"

ஆனால் அவரே ஹார்ட் அட்டாக்கில் போவார் என நான் நினைக்கவில்லை.

அவர் திருமணம் ஆகாதவர் என்பதுதான் ஓரளவு ஆறுதலான விசயம்!!! 

******************************************************************************** 

இவ்வளவு நாட்கள் எழுதாமல் இருந்துவிட்டு இப்போது ஏன் எழுதுகிறேன் என்கின்றீர்களா? ப்ளாக் வைத்துக்கொண்டு எழுதாமலும் இருக்கக் கூடாதாமே? 

******************************************************************************** 

9 comments:

D. Chandramouli said...

On the latest Super Singer Junior contest, a participant (boy) sang "Ullathil Nalla Ullam". Every one's heart melted by his rendering. It brought tears to Rajesh Vaidhya, Aruna Sairam, Sudha and many others in the audience. I too couldn't control my tears. I didn't know whether to have been blessed with the likes of Kannadasan, Sivaji Ganesan, MSV-Ramamurthy duo, Sirkazhi or NTR or simply this boy's singing with such emotions! I felt those stalwarts were in the auditorium - I am sure even the creators of the song would have wept. Sorry I couldn't remember the boy's name. For this song only, he could have been the overall winner.

மணிஜி said...

அந்தப்பையன் பெயர் கௌதம்!!

Raghavan said...

Sir,
Chankaya Niti says this: The moment you give something to a person, you no longer own it and so do not care about what they do with it.. even if they destroy it.. The action ends there.. If you still think about what they do then you are attached to it and you have not really donated the thing.. You still wish you had it in someway or the other..

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//இவ்வளவு நாட்கள் எழுதாமல் இருந்துவிட்டு இப்போது ஏன் எழுதுகிறேன் என்கின்றீர்களா? ப்ளாக் வைத்துக்கொண்டு எழுதாமலும் இருக்கக் கூடாதாமே?//

உங்கள் பெயரைப் பார்த்ததும், நான் என்னைக் கேட்ட கேள்வியும் அதே!!, கல்கியில் கதை பிரசுரமானதற்கு வாழ்த்துக்கள்.
அல்கா குரல், திறமை எனக்கும் பிடிக்கும், உண்மை மூலப்பாடல்களை விட சிறப்பாகப் பாடுகிறார்.
இந்த காசு கேட்டும் கூட்டம் இங்குமுண்டு; அவர்கள் கைவசம் ஒராயிரம் உத்தி வைத்துள்ளார்கள்... உழைக்கவில்லை-ஏமாற்ற..

திண்டுக்கல் தனபாலன் said...

கல்கியில் கதை பிரசுரமானதற்கு வாழ்த்துக்கள்...

இணைப்பில் பார்க்கிறேன்...

பகிர்வுகள் தொடர வாழ்த்துக்கள்...

ஆத்மா said...

உங்கள் கதை தெரிவு செய்யப்பட்டமைக்கு வாழ்த்துக்கள்..

நானும் நம்ம ஆஜித் ரசிகந்தான் சார்..

என்னமா பாடுகிறான்

sriram said...

Welcome back உலக்ஸ்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Gemini said...

adhe paadalai super singer junior 3 la, pragathi udan serndhu sathya paadiyirukkaradhaiyum ketteengala?

Adhuvum nalla dhaan irukku, aana alka voice romba clear. pragathi ku konjam shrill voice nu thonudhu.

இராஜராஜேஸ்வரி said...

கல்கியில் கதை பிரசுரமானதற்கு வாழ்த்துக்கள்.