Apr 22, 2013

மிக்ஸர் - 22.04.13சென்ற வாரம் கூகிள் + பகிர்ந்தவை:

**************************************************************

Samsung Galaxy Note II phoneல் தமிழில் டைப் செய்வதற்கு கூகிள் ப்ளே மூலமாக தமிழ் விசை என்கிற மென்பொருளை நிறுவிக் கொண்டேன். லேங்குவேஜ் & கீபோர்டுன்னு ஆப்ஷனுக்கு சென்று தமிழ்விசை பாக்ஸை
Default Keyboard ஆக மாற்றினேன். பின் கூகிள்+, ப்ளாக், ஹாட்மெயில், டிவிட்டர், ஜிமெயில் என்று எல்லா இடத்திலும் தமிழ் கீபோர்டை செலக்ட் செய்து தமிழில் டைப் செய்தேன். நன்றாக வேலை செய்கிறது.

ஆனால், போனில் தரப்பட்டுள்ள Default மெயிலில் அலுவலக மெயில் அக்கவுண்டை இணைத்துள்ளேன். அந்த மெயில்களுக்கு பதில் அனுப்பும் போது, தமிழ் கீ போர்ட் Default உள்ளதால் ஆங்கிலத்தில் பதில் அனுப்ப முடியவில்லை. தமிழிலும் டைப் அடிக்க முடியாமல் ஹேங் ஆகிறது. உடனே செட்டிங் சென்று தமிழை Default Keyboardலிருந்து நீக்கிவிட்டு, Samsung Keyboardஐ Default Keyboard ஆக மாற்றினால் ஆங்கிலத்தில் பதில் எழுத முடிகிறது. ஆனால் மற்ற மெயில்களிலோ அல்லது கூகிள்+ etc தமிழில் எழுத முடியவில்லை.

தமிழில் எழுத ஒவ்வொரு முறையும் தமிழை Default ஆகவும், அலுவலக மெயில்களுக்கு ஆங்கிலத்தில் எழுத Samsung Keyboardஐ Default Keyboard ஆகவும் மாற்ற வேண்டி உள்ளது. இது போனில் உள்ள குறை இல்லை. இது தமிழ் விசை என்கிற மென்பொருளில் உள்ள குறை என்று நினைக்கிறேன்.

யாராவது தமிழில் எழுதவும் அதே சமயத்தில் ஆங்கிலத்திலும் எழுத முடியும் வகையில் உள்ள மென்பொருளை பரிந்துரைக்க முடியுமா?

**************************************************************

ஒரு சந்தேகம், ஒரு உதவி!

இப்ப மலேசியால எல்லா சேனலும் பார்க்க முடிகிறது. விஜய் டிவியில்
ஏர்டெல் சூப்பர் சிங்கர் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

தொகுத்து வழங்கும் அவரின் பெயர் என்ன? மாக்கானா? எனக்கு சரியாக காதில் விழவில்லை அதான் கேட்கிறேன்.

இப்ப ஒரு உதவி! யாராவது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அந்த பெண்ணிடம் ஒரு ப்ளவுஸ் வாங்கி கொடுத்தால் நல்லது. ஸ்லீவ்லெஸ் சகிக்கலை!

**************************************************************


இப்படி ஒரு நூதன திருட்டை கேள்விப்பட்டதுண்டா? கடந்த மார்ச் 10ம் தேதி அன்று கோலாலம்பூர் LCCT Airport Terminalல் உள்ள கழிப்பரைக்கு ஒருவர் சென்றுள்ளார். அவருக்கு நிறைய நேரம் இருந்தததோ என்னவோ தெரியவில்லை. பேண்டை கழட்டி கதவில் மாட்டிவிட்டு தலைவர் ஹாய்யாக கழிப்பரையில் இருந்ந்ந்துள்ள்ள்ளார். வேலை முடிந்தவுடன் பார்த்தால் பேண்டை காணோம். யாரோ ஒரு திருடன் பேண்டை திருடிவிட்டு ஓடிவிட்டான். நண்பரின் கார் சாவி பேண்டில் இருந்துள்ளது. திருடன் பேண்டில் இருந்த பர்ஸ் எல்லாவற்றையும் எடுத்துவிட்டு, கார் சாவியையும் எடுத்து காரை லவட்டிக்கொண்டு ஓடிவிட்டான்.

பின் போலிஸில் புகார் செய்து ஒரு வாரம் கழித்து அந்த திருட்டுக்கும்பலை பிடித்துவிட்டார்கள்.

எனக்கு ஒரே ஒரு சந்தேகம்தான்! நண்பர் பேண்ட் இல்லாமல் எப்படி பாத்ரூமை விட்டு வெளியே வந்திருப்பார்???????????

**********************************************************

10வது தேர்விலும் மற்றும் 12ம் வகுப்பு தேர்விலும் தமிழில் அதிக மதிப்பெண்கள் எடுத்தேன். மாணவர்கள் அனைவரும் தமிழ் பாடத்திற்கு கோனார் தமிழ் உரை படிப்பார்கள், நான் அப்போது கூட நானாகவே படித்தேன். ஆனால் இன்று, ஆதவனின் "என் பெயர் ராமசேஷன்" புத்தகத்துடன் இரண்டு மாதங்களாக போராடிக்கொண்டிருக்கிறேன். சில சமயம் நான் படிப்பது தமிழ் நாவல்தானா? என்ற சந்தேகம் வருகிறது. சுற்றி சுற்றி என்ன சொல்ல வருகிறார் என்று சரியாக தெரியவில்லை. சில சமயம் பாலாவின், செல்வராகவனின் படங்கள் பார்ப்பது போல் உள்ளது. மனோதத்துவ புத்தகம் போலும் உள்ளது. இப்படிப்பட்ட தமிழை நான் இதுவரை படித்ததில்லை. நல்ல வேளை ஆதவனின் மற்ற புத்தகங்களை நான் வாங்கவில்லை. வாங்கப் போவதும் இல்லை. அவர் இப்போது எங்கே இருக்கிறார். தெரிந்தால் சொல்லுங்கள். அவரிடம் பேச வேண்டும்.

இந்த புத்தகத்தை வாங்கி கொடுத்த கேபிள் சங்கரை என்ன செய்யலாம்?


**********************************************************

நேற்று "மனதோடு மனோ" ஜெயா டிவியில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நேற்றைய நிகழ்ச்சி இசை அமைப்பாளர் தேவாவுடன். சில அற்புதமான பாடல்களை மனோ பாடி கேட்க நேர்ந்தது.

எனக்கு ஒரு சந்தேகம். இசையமைப்பாளர் பற்றி நாம் பேசும் போதெல்லாம் இளையராஜாவை பற்றியும், ரகுமானை பற்றியும் தானே பேசுகிறோம். ஏன் தேவாவை பற்றி பேசுவதில்லை. அவரும் பல அற்புதமான பாடல்களை கொடுத்து இருக்கிறாரே?

நான் இளையராஜாவின் பக்தனாக இருந்தாலும், தேவாவின் சில பாடல்கள் என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றன.

**********************************************************

நான் ஓரளவு புத்திசாலி என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இல்லை போலிருக்கிறது. நேற்று விஜய் டிவியில் "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சி பார்த்தேன். பாதி கேள்விகளுக்கு எனக்கு விடைகள் தெரியவில்லை அல்லது குழப்பம். பொது அறிவு கேள்விகளுக்கு விடை சொல்வதில் முதல் மாணவனாக இருந்த நான் எப்போது மாறிப்போனேன் என்று தெரியவில்லை. பணம் பணம் என்று வேலையில் மட்டும் கவனம் செலுத்துவதினால் சில திறமைகள் நம்மை விட்டு செல்வது போல் தெரிகிறது.

இதை சரி பண்ண ஒரே வழி இது போன்ற நிகழ்ச்சிகளை இனி பார்க்காமல் இருப்பதுதான்.

**********************************************************

சிறுகதைகள் எழுதி பல நாட்கள் ஆகிவிட்டதே என்று காலையில் வாக்கிங் செல்லும் போது தனியாக யோசித்துக்கொண்டிருந்தேன். மிக குதர்க்கமான ஒரு கதை கரு தோன்றி இம்சை செய்கிறது. எழுத வேண்டாம் என்று நானும் கடந்த 5 மணி நேரமாக தள்ளிப்போடுகிறேன். ஆனால் முடியவில்லை. எழுதி பார்க்காவிட்டால் மன பாரம் குறையாது போல. என்ன செய்வது? 

**********************************************************

"நீ வெ கோ" நிகழ்ச்சியில கமல்ஹாசன் உண்மையாகவே அனைத்து கேள்விகளுக்கும் பதில் தெரிந்திருந்து சொன்னாரா? இல்லை ஏற்கனவே கேள்வி பதிகள் அவருக்கு கொடுக்கப்பட்டுருக்குமா? ஏனென்றால் கஷ்டமான கேள்விக்கு ஈஸியா பதில் சொன்னார். ஈஸியான கேள்விக்கு லைப் லைன் கேட்டார்.

என்னதான் ஒரு நடிகர் மேல் ஆசையோ அல்லது பாசமோ இருந்தாலும், பார்த்தவுடன் அல்லது அருகில் செல்லும் வாய்ப்பு கிடைத்தவுடன் "என்னை கட்டி பிடியுங்கள். எனக்கு முத்தம் கொடுங்கள் என்றா சொல்வார்கள்?"

கொடுமைடா சாமி!

**********************************************************5 comments:

கவியாழி said...

மிக்சர் அருமை.இனிப்பு காரம் கொண்டிருந்தது

Sakthi Dasan said...

தங்களின் இந்த பதிப்பு மிகவும் அருமை. இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர எங்களின் http://www.tamilkalanchiyam.com வலைபதிவில் பகிரும் மாறு வேண்டுகிறோம்.
இப்படிக்கு
தமிழ் களஞ்சியம்

Unknown said...

சூப்பர் சிங்கர் தொகுப்பாளர் மா. கா. பா. ஆனந்த். மிர்ச்சி ஆர்.ஜே வாக இருந்தவர். அந்த தொகுப்பாளினியின் கணவர் மலேசியாவில் தான் இருப்பதாக கேள்விப்பட்டேன். நீங்களே பார்த்தால் சொல்லிவிடுங்கள் :)

எழுத்தாளர் ஆதவன் 1987ம் ஆண்டே இறந்துவிட்டார் (சிருங்கேரி துங்கா நதியின் சுழலில் சிக்கி மரணமடைந்தார்). அவரின் சிறுகதைகள் மற்றும் நாவல்கள் பெரும்பாலும் நடுத்தர வர்கத்தின் நம்பிக்கை வறட்சி பற்றி பேசக்கூடியவை. நாம் வாழ்வில் அடுத்தவர்களுக்காக வேஷங்களை, நமது அடையாள தேடல்களை எந்தவித விமர்சனமும் இன்றி முன்வைப்பவை. படித்துவிட்டு லேசான புன்முறுவல் நமக்கு தோன்றும், அடுத்த கணமே, 'ச்சே, நானும் இப்படித்தானே' என்று தோன்றும். என் பெயர் ராமசேஷன் 1980ல் வெளிவந்தது. நான் பார்த்ததில் இப்புத்தகத்தை பிடிக்கவில்லை என்று சொல்லும் முதல் நபர் நீங்கள் தான்.

achampadu said...

Sir, where u r in malayisa, kindly inform me, i want to meet u ..

iniyavan said...

You can send me a mail. I will inform you.