Jun 14, 2013

ஓடாதே நில்! - 1

இது நண்பன் பஞ்சுவின் வாழ்வில் நடந்த கதை மட்டும் இல்லை. ஓடிய கதை. ஏன் இப்படி சொல்கிறேன் என்பதை அறிய நீங்கள் நான் கதை சொல்லி முடிக்கும் வரை காத்திருக்க வேண்டும். ஒருவேளை உங்களுக்கு புரியலாம். அப்படி புரியாமல் போனால் நான் ஒன்றும் சொல்வதற்கல்ல.

என் நெருங்கிய நண்பன் பஞ்சு. அவனுக்கு இந்த பெயருக்கு பதில் இதே பெயரை சற்று மாற்றி வைத்திருந்தால் பொறுத்தமாக இருந்திருக்கும். என் நண்பனுக்கு ஏன் "பஞ்சு" என்று பேர் வந்தது என்று நினைத்து பார்க்கிறேன். ஆனால் எவ்வளவு யோசித்தும்  நினைவுக்கு வரவில்லை. ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் அதன் காரணம் நினைவிற்கு வரலாம். அப்படி ஒரு வேளை நினைவு வந்தால் நான் சொல்கிறேன். அதுவரை பொறுத்து இருங்கள். அவனை பஞ்சு பஞ்சு என்று கூப்பிட்டு பழகி அவனின் ஒரிஜினல் பெயர் எனக்கு மறந்து விட்டது.

பஞ்சு எங்கள் செட்டில் மிகவும் ஜாலியானவன். கலகலப்பானவன். ஆண்களைவிட பெண்களுக்கு அவனை ரொம்ப பிடிக்கும். காரணம் அவன் அழகு எல்லாம் அல்ல. அவனின் பேச்சு திறமையால். எந்த பெண்ணையும் மிக விரைவில் கவர் செய்துவிடுவான். அதன் பிறகு என்ன நடக்கும் என்று தெரியாது. அவனிடம் பேசும் பெண்கள் எல்லோருமே அடுத்த நாளே அவனுக்கு எதிரி ஆகிவிடுவார்கள். அதன் காரணத்தை அறிய எவ்வளவோ முயன்றும் என்னால் கண்டு பிடிக்க முடியாமலேயே இருந்து வந்தது. சமீபத்தில் அதன் காரணத்தை அறிந்து மிகவும் அதிர்ந்து போனேன்.

யாருக்குமே கிடைக்காத அற்புத வாய்ப்புகள் எல்லாமே அவனுக்கு கிடைத்திருந்தும் அவன் ஒரு நாளும் அந்த வாய்ப்பை பயன்படுத்த முடியாமலேயே போய்விட்டது. அப்படி என்ன காரணம் என கேட்கின்றீர்களா? சொல்கிறேன். அதற்கு முன் எனக்கே ஒரு மாதிரி இருக்கிறது. கதையின் போக்கே வேறு திசை நோக்கி செல்வது போல் இருக்கிறது. ஒரு காம கதை போல ஆகிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டாலும், நடந்ததை சொல்லித்தானே ஆக வேண்டும்.

ஒரு நாள் பஞ்சு போன் செய்தான். உடனே வீட்டிற்கு வரும்படி கூறினான். 

"என்னடா அவ்வளவு அவசரம்?" என்று கேட்டதற்கு, "மாப்பிள்ள ஒரு புது கம்ப்யூட்டர் வாங்கி இருக்ககேன். நெட் கனக்க்ஷன் கொடுத்துட்டேன். உடனே வா உனக்கு ஒரு விசயம் சொல்கிறேன்" என்றான்.

நானும் என்னவோ வில்லங்க விசயமாகத்தான் இருக்கும் என்று யூகித்துக்கொண்டே சென்றேன். அவன் அம்மாவிடம் நலம் விசாரித்துவிட்டு அவன் அறைக்கு சென்றேன்.

"வாடா வா" என்றான்.

"என்னடா அப்படி?"

"மாப்பிள்ளை ஒரு வெப் சைட் இருக்குடா. அங்க பொண்ணுங்க எல்லாம் ஜாலியா பேசுறாங்க. உனக்கு தெரியுமா?" என்றான்.

எனக்கு தெரிந்து இருந்தாலும் காமித்துக்கொள்ளாமல்,

"அப்படியா?" என்றேன்.

"ஆனா இந்த பொண்ணுக்கு ஏன் என் மேல் கோபம் தெரியலைடா?" என்றான்.

"ஏன்?" என்றதற்கு, "நீயே படி அப்படி என்ன கேட்டுவிட்டேன்" என்று அவனின் சேட் மெசேஜ்களை காண்பித்தான். இதோ உங்களுக்கு அப்படியே தருகிறேன். (பெண் வாசகர்கள் மன்னிக்கவும்)

பஞ்சு: "ஹேய்" 

லவ்லி கேர்ல்: "ஹேய்"

ப: "asl"

ல: "அப்படின்னா?"

ப: Age/Sex?location

ல: xxxxx

ப: என்ன தனியா இருக்கீங்களா?"

ல: ஆமாம் ஏன்?

ப: சும்மாதான். என்ன டிரஸ்ல இருக்கீங்க?

ல: ஸ்கர்ட் டாப்ஸ்

ப: உள்ள?

ல: மீன்ஸ்....

ப: என்ன கலர்? சைஸ் என்ன? இதுக்கு முன்ன நீங்க யாராடயாவது......

(அடுத்த கேள்விகள் அவளின் பதிகல்கள் எல்லாம் நாகரிகம் கருதி மறைக்கப்படுகிறது)

அந்த பெண் ஊரில் உள்ள எல்லா கெட்ட வார்த்தைகளையும் சொல்லி திட்டி பத்தாதற்கு எல்லாத்தையும் உங்க வீட்டு பொண்ணுங்க கிட்ட கேளுடான்னு முடித்திருந்தது.

பஞ்சு ஒண்ணுமே நடக்காதது போல, "அப்படி நான் என்ன தப்பா கேட்டுட்டேன்னு அவ திட்டறா" என்றான்.

கடுப்பான நான், "அந்த பொண்ண உனக்கு எத்தனை மாசமா தெரியும்?" என்றேன்.

ரொம்ப பெருமையா "கால் மணி நேரமா மாப்பிள்ள" என்றான்.

"ஏண்டா நாயே, ஒரு பொண்ணோட அறிமுகம் ஆகி பத்து நிமிஷத்துலயே இப்படி அந்தரங்கமான கேள்விகள் கேட்கலமாடா. இது தப்பு இல்லையா?"

"இப்படித்தான் இத்தனை வருசமா பொண்ணுங்க கூட பேசிட்டிருக்கியா"

"ஆமாம்னு" கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம பதில் சொன்னான். அப்புறம்தான் ஏன் பெண்கள் அடுத்த நாளே அவனுக்கு எதிரிகள் ஆகிறார்கள் என்ற உண்மை எனக்கு புரிய ஆரம்பித்தது.

அதே போல் பஞ்சு ஒரு முக்கியமான சமயத்தில் ...... சம்பவமும் நடைப்பெற்றது.

அவனின் லீலைகளை அறிய நீங்கள் நாளை வரை பொறுத்துதான் ஆக வேண்டும்.

-தொடரும்


2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உடனே பத்திக்கும் பஞ்சு...!

சம்பவம் வேறு நடந்து போச்சா...? ஆவலுடன்...

iniyavan said...

//திண்டுக்கல் தனபாலன் said...
உடனே பத்திக்கும் பஞ்சு...!

சம்பவம் வேறு நடந்து போச்சா...? ஆவலுடன்...//

வருகைக்கு நன்றி தனபாலன்.