சென்ற வாரம் கூகிள் + பகிர்ந்தவை:
என்னுடைய பிறந்த நாள் மார்ச் 2. ஆனால் SSLC ertificate மற்றும் பாஸ்போர்ட்டில் உள்ள பிறந்த தேதி ஜுன் 15. அப்பா இருக்கும் வரை இந்த விசயத்தைப் பற்றி கேட்க தோன்றவில்லை. ஆனால் சமீபகாலமாக "அப்பா ஏன் இப்படி பிறந்த நாளை மாற்றி பள்ளியில் சேர்த்தார்" என்று அடிக்கடி மனதில் தோன்றிக்கொண்டே இருந்தது. சமீபத்தில் வீட்டில் அனைவரும் பேசிக்கொண்டு இருந்த போது ஒரு ஆச்சர்யமான விசயம் தெரிய வந்தது. என்னவென்றால், சர்டிபிக்கட்டின் படி ஏறக்குறைய அக்காக்கள், தம்பிகள் அனைவரின் பிறந்த தேதியும் ஜூனில்தான் பதியப்பட்டுள்ளது. ஆனால் அனைவரின் பிறந்த தினமும் வெவ்வேறு மாதங்களில் வருகிறது. மெதுவாக அம்மாவிடம் இதைப் பற்றி கேட்டோம். அவர்கள் சொன்ன பதில் இன்னும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
"அப்பாவிற்கு குழந்தைகள் எல்லோருமே டீச்சராக வேண்டும் என்று விருப்பமாம். பிறந்த தேதி ஜூனிற்கு பின் இருந்தால் (ஒரு நாள் இருந்தாலும்), மேலும் ஒரு வருடம் அதிகம் வேலை செய்யலாமாம். அதாவது ஒரு வருடம் அதிகம் வேலை செய்த பிறகுதான் ரிடையர்மெண்ட் வருமாம்"
இது எந்த அள்வு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் எப்படி எல்லாம் முன்பு சிந்தித்து இருக்கிறார்கள் பாருங்கள்!
**********************************************************
ஐந்து நாட்கள் குடும்பத்துடன் சிங்கப்பூரில் இருந்தேன். அடிக்கடி சென்றாலும் ஒவ்வொரு முறையும் சிங்கப்பூர் பார்க்க புதிதாக இருக்கிறது. விலைவாசி மிகவும் அதிகம். பணத்திற்கு ஏற்ப சந்தோசம். ப்ளாக், கூகிள் ப்ளஸ், பேஸ்புக் எதுவும் பார்க்கவில்லை. விடுமுறை முடிந்து வந்தவுடன் எல்லாவற்றையும் ஒன்று விடாமல் படித்துக்கொண்டிருக்கிறேன். எத்தனை விசயங்கள்...அப்பா... படிக்க படிக்க ஆனந்தமாக இருக்கிறது. இனிமேல் தினமும் படிப்பதைவிட வாரம் ஒரு நாள் மட்டும் படிக்கலாம் போல!
**********************************************************
இந்த முறை என் ஊருக்கு சென்றிருந்த போது என் நண்பர் நந்தகுமாரை பார்க்க அவர் வீட்டுக்கு சென்றிருந்தேன். அப்பொழுது அவருடன் ஒரு நண்பர் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். என்னை பார்த்தவுடன் என் நண்பர் அவரிடம், "இவரும் ஒரு எழுத்தாளர்தான் தெரியுமா? மூன்று புத்தகங்கள் எழுதி உள்ளார். நிறைய கதைகள் பத்திரிகைகளில்....." நண்பர் முடிக்கவில்லை.
"என்னங்க இவரை தெரியாதுங்களா? எனக்கு? இவர் புத்தகத்தை படித்திருக்கிறேன்"
"அப்படியா?"
எனக்கு ஒரே சந்தோசம். ஆர்வமானேன்.
நண்பர் என்னைப்பார்த்து, "அது எப்படி சார் எல்லாத்தையும் ஞாபகம் வைத்திருக்கீங்க? அதுவும் உங்கள் ஊரை பற்றியும், அந்த வாலிபால் ஆட்டத்தை பற்றியும், அந்த ஆசிரையரைப் பற்றியும் எழுதி இருந்தீர்கள் பாருங்கள். சூப்பர்"
எனக்கு ஒரே குழப்பம். உடனே "நான் எதுவும் இது போல் எழுதவில்லையே?" என்றேன்.
"அப்போ நீங்க இல்லையா அது?"
"எது?"
"அந்த புத்தகம் எழுதியது? என்று ஏதோ ஒரு புத்தகத்தின் பெயரை கூறினார்.
"இல்லை" என்றேன். பின் அடுத்த ஒரு மணி நேரம் அவர் எதுவுமே பேசவில்லை. என் நண்பருக்கு ஒரே சங்கடம். அவரை சுட்டு எரிப்பது போல் பார்த்தார்.
(இதற்கும் ஜெமோ கட்டுரைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை)
**********************************************************
எனக்கு ஒரு ஆசை. சொந்த ஊரில் வேலை பார்க்க வேண்டும். சம்பளத்தை பற்றி கவலை இல்லை. ஆனால், காலையில் 9 மணிக்கு அலுவலகம் செல்ல வேண்டும். மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வர வேண்டும். வேலை முடிந்து 5.45க்கு வீட்டுக்கு வரவேண்டும். சிறிது நேரம் பிள்ளைகளுடன் விளையாட வேண்டும். பின் டிவி பார்க்க வேண்டும். ஒரு மணி நேரம் புத்தகம் படிக்க வேண்டும். அலுவலகத்தில் இருந்து 5.45க்கு தொடர்பு கொள்ள கூடாது. பின் காலையில் 5.30க்கு எழுந்து வாக்கிங் போய்விட்டு, 9 மணிக்கு அலுவலகம்.......
இது எல்லாம் நடக்க வேண்டும் என்றால் நான் என்ன செய்ய வேண்டும்?
**********************************************************
சிங்கப்பூரில் சென்ற வாரம் இருந்த போது, 'திண்டுக்கல் தலைப்பாக்கட்டு பிரியாணி' கடைக்கு சாப்பிட சென்றோம். சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்தோம். சாப்பிட்டு பார்த்தால் அப்படி ஒன்றும் நன்றாக இல்லை. ஏண்டா? சாப்பிட்டோம் என்று ஆகிவிட்டது. பில் வந்தது. பார்த்தால் சிக்கன் பிரியாணிக்கு பதில் மட்டன் பிரியாணி என்று இருந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. சர்வரை கூப்பிட்டு கேட்டேன். "நான் சிக்கன் பிரியாணி அல்லவா கேட்டேன்?"
"சாரி சார். தப்பு நடந்து போச்சு"
கோபம் வந்தாலும் அடக்கிக்கொண்டு பணத்தை கொடுத்தேன். வெளியே வரும்போது அங்கே இன்னொருவர் கேட்டார்,
"ஏங்க நல்லா இருந்துச்சா? நம்ம ஊர் திண்டுக்கல் தலப்பாக்கட்டு பிரியாணி போலவே இருந்துச்சா?"
பதில் சொல்லாமல் சிரிச்சிட்டே வெளியே வந்தேன்.
வீட்டில சொன்னாங்க, "ஆமாம். சிக்கன் பிரியாணியா இல்ல மட்டன் பிரியாணியானு கூட தெரியலை உங்களுக்கு? உங்க கிட்ட வந்து கேக்குறார் பாருங்க" (அவங்க பிரியாணி சாப்பிடல)
நான் பதில் சொல்லாததற்கு இது மட்டும் காரணம் இல்லை. இன்னொரு காரணமும் இருக்கு. என்னன்னா? ....நான் இதுவரை தலைப்பாக்கட்டு பிரியாணி' சாப்பிட்டதே இல்லை.
**********************************************************
சூப்பர் சிங்கர்ஸில் சுஜாதா பார்வதியிடம்,
"சூப்பர் சிங்கர் நீ. ஏன் இந்த மாதிரி போட்டியில் கலந்துக்குற?"
"இல்லை இந்த மாதிரி போட்டியில கலந்துகிட்டா நிறைய பிரிவுகள்ல பாடி பழகலாம் அதான்"
சுஜாதா அந்த மாதிரி கேட்டதும் தப்பு. பார்வதி பதிலும்....
சும்மா பாடி பழகவா கலந்துக்குறாங்க. 65 லட்சம் பாஸ் 65 லட்சம்!!!
*****************************************************
8 comments:
சிங்கப்பூரில் அடிக்கடி சென்றாலும் ஒவ்வொரு முறையும் சிங்கப்பூர் பார்க்க புதிதாக இருக்கிறது.
அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..
Dindigul thalappakkatti illa athu ! romba worst service! ungalukku theriuma! ellamae palaya itemthaan! Muthalnaal vikkathatha ellam narunaal ovenla heat panni vithuduvanga! naanum patrukkaen sir! fraud fellows! better saravanaBhavan or Anjapparthan Singaporela!
In Original Dindigul Thalappakkati, you wont get chicken Biriyani.. Its only & always Mutton Biriyani. ;-)
By the way, this is the story few years back.. Now im out of Dinidigul & i dont know current availablities.
அதாவது ஒரு வருடம் அதிகம் வேலை செய்த பிறகுதான் ரிடையர்மெண்ட் வருமாம்"//
Yes its true
//இராஜராஜேஸ்வரி said...
சிங்கப்பூரில் அடிக்கடி சென்றாலும் ஒவ்வொரு முறையும் சிங்கப்பூர் பார்க்க புதிதாக இருக்கிறது.
அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..//
நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.
//Nathan said...
Dindigul thalappakkatti illa athu ! romba worst service! ungalukku theriuma! ellamae palaya itemthaan! Muthalnaal vikkathatha ellam narunaal ovenla heat panni vithuduvanga! naanum patrukkaen sir! fraud fellows! better saravanaBhavan or Anjapparthan Singaporela!//
வருகைக்கு நன்றி நண்பா.
//பிரசன்னா கண்ணன் said...
In Original Dindigul Thalappakkati, you wont get chicken Biriyani.. Its only & always Mutton Biriyani. ;-)
By the way, this is the story few years back.. Now im out of Dinidigul & i dont know current availablities.//
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பிரசன்னா.
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அதாவது ஒரு வருடம் அதிகம் வேலை செய்த பிறகுதான் ரிடையர்மெண்ட் வருமாம்"//
Yes its true//
வருகைக்கு நன்றி ரமேஷ்.
Post a Comment