Jun 17, 2013

ஓடாதே நில்! - 2

அதே போல் பஞ்சு ஒரு முக்கியமான சமயத்தில் ...... சம்பவமும் நடைப்பெற்றது.

இப்படி முடித்திருந்தேன். இதை படித்த நண்பர்கள் ரொம்பவும் ஆசையாக என்ன எதிர்ப்பார்க்கின்றீர்கள் என்று எனக்கு தெரியும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறியதா என்று தெரிந்து கொள்ளும் முன் பஞ்சுவை பற்றிய இன்னொரு சம்பவம் எனக்கு நினைவு வந்து தொலைப்பதால், அதையும் உங்களிடம் சொல்லாவிட்டால் என் தலை வெடித்துவிடும் அபாயம் இருப்பதால் முதலில் சொல்லிவிடுகிறேன்.

ஒரு முறை பஞ்சுவுடன் நண்பர்கள் அனைவரும் திருச்சி சென்றிருந்தோம். மேரிஸ் தியேட்டரில் நாங்கள் படம் பார்த்தோம். பஞ்சு வேறு எதையோ பார்த்துக்கொண்டு படம் பார்த்தான். அப்படி என்னதான் பார்க்கிறான் என்று திரும்பி பார்த்தால், அருகே புதிதாக கல்யாணம் ஆன ஒரு தம்பதி சிற்சில சேஷ்டைகளுடன் படம் பார்த்துக்கொண்டிருந்தனர். படம் முடிந்து வசந்தபவன் சென்று கொத்து புரோட்டா சாப்பிட்டு விட்டு ஊருக்கு செல்வதற்காக சத்திரம் பஸ் ஸ்டாண்டு வந்து சேர்ந்தோம். நல்ல கும்பல். எல்லோருடனும் நாங்களும் நின்று கொண்டிருந்தோம். அப்பொழுது ஒரு குடும்பம், வயதான அம்மா, ஒரு 22 வயது மதிக்கதக்க ஒரு பெண் மற்றும் ஒரு சிறு குழந்தை வந்து சேர்ந்தார்கள். அவர்களை பார்க்க ஏதோ கிராமத்தில் இருந்து வந்தவர்கள் போல் இருந்தார்கள். ஆனால் அந்த பெண் மிக அழகாக இருந்தாள். நல்ல செழுமையாக, தாராளமாக இருந்தாள்.

நாங்கள் அவ்வளவாக அவளை பார்க்கவில்லை. ஆனால் பஞ்சுவோ அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். சரி ஏதோ வில்லங்கம் நடக்க போகிறது என்று என் உள்மனது சொல்லியது. அந்த பெண் பார்க்க அழகாக இருந்தாலும், ஆடை விசயத்தில் அவ்வளவு சரியில்லை. புடவை அணிய தெரியவில்லை. புடவை நன்றாக கீழே படும் அளவிற்கு இறக்கி கட்டியிருந்தாள். அதில் இரண்டு அசவுரியங்கள் அவளுக்கு. ஒன்று அவளின் தொப்புள் மிக தாரளமாக அனைவருக்கும் தெரிந்தது. இன்னொன்று புடவையை தழைய தழைய கட்டியிருந்ததால் அவளால் குழந்தையை வைத்துக்கொண்டு சரியாக நடக்க முடியவில்லை. குழந்தை வேறு நழுவி கீழே விழும் நிலையில் இருந்தது.

அந்த நேரத்தில் அவர்கள் செல்லும் பஸ் வர, இவர்கள் வேகமாக செல்ல, அவளின் புடவை தடுக்க, குழந்தை கீழே விழும்போல் நழுவ, அவளின் அம்மா, "தூக்கு புடவைய தூக்கு புடவைய" என்று அலற, இதை சரியாக காதில் வாங்காத பஞ்சு நேராக அவளிடம் சென்று,

"நான் வேணா தூக்கட்டுமா?" என்றான்.

அவ்வளவுதான். அதன்பிறகு நடந்தவை, பாவம், அதை எப்படி சொல்வது? பஞ்சுவோ, "நான் குழந்தைய தூக்கட்டுமா என்றுதான் கேட்டேன்" என்று கதறியது யார் காதிலும் விழவில்லை. ஒருவாறு அனைவரும் சென்ற பிறகு, நான் அவனிடம், "ஏண்டா இதெல்லாம் தேவையா?" என்றேன்.

"போடா... நான் நல்லது செய்யத்தானேடா போனேன்" 

"இவ்வளவு பேருக்கு இல்லாத அக்கரை உனக்கு மட்டும் என்னடா?"

"இல்லடா, குழந்தைய தூக்குற சாக்குல அவ மேலேயும் கை படும்ல"

"உன்னையெல்லாம் திருத்த முடியாதுடா!"

பிறகு எங்கள் ஊர் பஸ் வர நாங்கள் ஏற முயல பஞ்சுவோ,

"டேய் இருங்கடா நான் பார்த்து வறேன்" என்றவன் கீழே இறங்கி, "எல்லோரும் அடுத்த பஸ்ல போலாண்டா?" என்றான்.

ஒன்றும் புரியாமல், "ஏண்டா?" என்று காரணம் கேட்டால் சொல்லாமால், ஒவ்வொரு பஸ்ஸாக ஏறி இறங்கி வந்து கொண்டிருந்தான். மிகவும் கடுப்பான நான், 

"ஏண்டா, இப்படி படுத்தற?" என்றதற்கு,

"வெறும் ஆம்பளை பசங்களா இருக்காங்கடா! இதுல எப்படி போறது" என்றான். அதான் பஞ்சு!

அந்த முக்கியமான சம்பவத்தை பற்றி சொல்ல வேண்டிய நேரம் இப்போது வந்துவிட்டது. வாசகர்கள் ஓரளவு பஞ்சுவை பற்றி இன்னேரம் தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.

பஞ்சுவுக்கு ஒரு நாள் 'அந்த' ஆசை வந்துவிட்டது. யார் யாரிடமோ பேசி எவ்வளவோ செலவு செய்து ஒருத்தர் மூலம் ஒரு பெண்ணை ரெடி செய்துவிட்டான். எல்லோருக்கும் ஆசை இருந்தாலும், யாருக்கும் செயல்படுத்த கூடிய தைரியம் வரவில்லை. ஆனால் பஞ்சு எல்லாவற்றிற்கும் துணிந்தவனாயிற்றே!

இன்னொரு நண்பனின் வீட்டில் ஆள் இல்லை. அவனிடம் சாவியை வாங்கி கொண்டு எப்படியோ அந்த பெண்ணை அந்த வீட்டில் சேர்த்து விட்டான். முக்கியாமாக மூன்று பேர்களை மட்டும் கூப்பிட்டான். நானும் என் இன்னொரு நண்பனும் தெருவில் யாராவது வருகிறார்களா? என்று பார்த்துக்கொண்டிருந்தோம்.

பஞ்சுவோ, "மாப்பிள்ள நான் முதலில் போயிட்டு வரேண்டா?" என்று ஏதோ போருக்கு செல்லும் வீரன் போல் நெஞ்சை நிமித்திக்கொண்டு சென்றான். நாங்கள் நெஞ்சம் படபடக்க, வெளியில் காத்திருந்தோம். ஒரு பத்து நிமிடம் கூட ஆகி இருக்காது. அந்த பெண் கதவை திறந்து கொண்டு ஓடி வந்தாள். நாங்கள் பயந்துவிட்டோம்.

"என்ன என்ன?" பயத்துடன் ஏறக்குறைய கதறினோம்.

அவளோ மிக நிதானமாக, "வந்தவுடன என்னை கீழ தள்ளி மேல படுத்தாருங்க"

"அப்புறம்"

"பார்த்தா அப்படியே தூங்கிட்டாருங்க. எவ்வளவு எழுப்பியும் எழுந்திருக்க மாட்டேங்கறாருங்க" என்றவள் எங்கள் பதிலுக்கு கூட காத்திராமல் பணம் கூட வாங்காமல் ஓடிவிட்டாள்.

இந்த விசயத்தை சொல்லி சொல்லியே அவனை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டோம்.

கல்யாணமாகி இத்தனை வருடங்கள் ஆகியும் அவன் இன்னும் திருந்தவில்லை என்பது அவன் சமீபத்தில் என்னை பார்க்க இங்கே வந்த போதுதான் தெரிந்தது.

"மாப்பிளை கிளப் கூட்டி போடா" என்றான்.

அவன் தொந்தரவு அதிகமாகவே, வேறு வழியில்லாமல் அவனை ஒரு நாள் கூட்டி சென்றேன்.

அங்கே....

-தொடரும்2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா.... ஹா.... நல்ல தூக்கம்...!

iniyavan said...

//திண்டுக்கல் தனபாலன் said...
ஹா.... ஹா.... நல்ல தூக்கம்...!//

நன்றி நண்பா!