Jun 21, 2013

ஓடாதே நில்! - 3

"மாப்பிளை கிளப் கூட்டி போடா" என்றான்.

அவன் தொந்தரவு அதிகமாகவே, வேறு வழியில்லாமல் அவனை ஒரு நாள் கூட்டி சென்றேன்.

அங்கே....

அது கோலாலம்பூரில் உள்ள மிகப்பெரிய கிளப். பணக்காரர்கள் மட்டுமே வந்து போகும் இடம். பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் வருவார்கள். மிகவும் காஸ்ட்லி வேறு. அங்கே எல்லாவிதமான விசயங்களும் நடக்கும். நாம் எதிலும் கலந்து கொள்ளாமல் வெறுமன ஆரஞ்ச் ஜூஸ் மட்டும் குடித்துவிட்டு கூட வரலாம். யாரும் எதுவும் கேட்கமாட்டார்கள். என்ன ஒன்று, இரவு 9 மணிக்கு மேல் உள்ளே நுழைய வேண்டும் என்றால் பணம் கட்டிவிட்டுத்தான் செல்ல வேண்டும். ஆனால் பெண்களுக்கோ இலவசம். அது ஏறக்குறைய ஒரு விபச்சாரத்திற்கு அடிகோலும் இடம் என்று சொல்லலாம். ஏனென்றால் எல்லோரும் வருவார்கள். டிரிங்ஸ் சாப்பிடுவார்கள். அவர்களாகவும் எந்த பெண்ணையும் செலக்ட் செய்து கொள்ள முடியும். சும்மா அமர்ந்து இருந்தால் கூட சில பெண்கள் வந்து உங்கள் அருகில் அமர்வார்கள். அதன் பிறகு உங்கள் திறமை.

சில பேர் துணையை தேர்வு செய்தவுடன் டான்ஸ் ஆடுவார்கள். சில ஈரோப்பியர்களை பார்த்தால் சிரிப்பாக இருக்கும். 60 வயதுக்கு மேல் இருப்பார்கள். அருகில் இரண்டு சிறு பெண்களை வைத்துக்கொள்வார்கள். அந்த பெண்கள் அவர்களுக்கு மசாஜ் செய்துவிடுவார்கள். மிகவும் ஓப்பனாகவே முத்தம் கொடுப்பார்கள். இன்னும் நிறைய விசயங்களை பார்க்கலாம். அங்கே சில தமிழ் பெண்களையும் காண முடியும். எனக்கு அந்த கிளப்பில் பிடிக்காத ஒரே விசயம் சத்தம். காதை பிளக்கும் சத்தத்தில் பாட்டு பாடுவார்கள். டிரிங்க்ஸ் சாப்பிடுபவர்களுக்கு அந்த சத்தம் பிரச்சனை இல்லை என்று நினைக்கிறேன். ஆனால் ஜீஸ் சாப்பிடுபவர்களால் அந்த சத்தத்தில் உட்கார முடியாது. காது கிழியும்.

அப்படிப்பட்ட அந்த கிளப்பிற்குதான் ஆசை படுகிறானே என்று பஞ்சுவை கூட்டி சென்றேன். உள்ளே நுழையும் போதே எல்லா விசயங்களையும் சொல்லித்தான் கூட்டி சென்றேன். 'நன்றாக பார்க்க வேண்டியதை எல்லாம் பார்த்து கொள். டான்ஸ் வேண்டுமானாலும் ஆடிக்கொள். ஆனால் அதற்கு மீறிய எந்த விசயத்தையும் அனுமதிக்க மாட்டேன்' என்றேன். ஒத்துக்கொண்டுதான் வந்தான். உள்ளே சென்றதும் எனக்கு ஆரஞ்ச் ஜூஸும் அவனுக்கு பியரும் வாங்கினான். ஒரு டேபிளை தேர்ந்தெடுத்து அமர்ந்தோம். ஐந்து நிமிடம் கூட ஆகி இருக்காது. ஒரு பெண் அருகில் வந்தாள். பார்க்க மிக அழகாக இருந்தாள். மினி ஸ்கர்ட் அணிந்திருந்தாள். மேலே டி சர்ட் போல ஏதோ ஒன்று அணிந்திருந்தாள். அவளால் டி சர்ட்டை முழுவதுமாக மூட முடியலை போல. கஷ்டம்தான். அவ்வளவு தாரளமாக இருந்தாள். அவள் உட்கார்ந்தவுடன் ஸ்கர்ட் தொடைக்கு மேலே ஏறிவிட்டது. 

எனக்கு அவளை பார்க்க பிடித்தாலும் அவளுடன் டான்ஸ் ஆடவோ அல்லது பேசிக்கொண்டிருக்கவோ விருப்பம் இல்லை. ஆனால் பஞ்சுவோ மிகவும் ஆசைப்பட்டான்.

"நீங்க ரொம்ப அழகு" என்று அவளிடம் வழிந்தான். உடனே அவள் ஒரு பியர் வாங்கித்தரும்படி கேட்டாள். பின் குடித்துகொண்டே அருகில் அமர்ந்தாள். எனக்கும் பஞ்சுவுக்கும் அருகில் அமர்ந்தாள். மெல்ல பேசிக்கொண்டே இருவர் தொடைகளிலும் கையை வைத்தாள். நான் தட்டிவிட்டேன்.

"ஏன் பிடிக்கலையா?" என்றாள்.

"ஆம்" என்றேன்.

"என்னையா?" என்று வருத்தத்துடன் கேட்டாள்.

"உன்னையல்ல. உன் செய்கைகளை எனக்கு பிடிக்கவில்லை" என்றேன்.

அதன் பிறகு அவள் என்னை தொந்தரவு செய்யவில்லை. அவர்கள் மட்டும் ஏதோ பேசிக்கொண்டே இருந்தார்கள். நான் கண்டும் காணாததும் போல இருந்தேன். பஞ்சு பியராக வாங்கி அடித்துக்கொண்டே இருந்தான். பின் இருவரும் டான்ஸ் ஆடினார்கள். பார்க்க மிகவும் அருவெருப்பாகவும், கேவலமாகவும் இருந்தது அவர்களின் டான்ஸ் மூவ்மெண்ட். மணி ஒன்றைத்தாண்டியது. எனக்கு தூக்கமாக வந்தது.

நான் பஞ்சுவிடம், "நான் ரூம் செல்கிறேன்" என்றேன்.

"இரு இரு போகலாம்"

"இதற்கு மேல் என்னால் இங்கே இருக்க முடியாது"

அப்போதுதான் அந்த கேள்வியை என்னிடம் கேட்டான், "நான் இவளையும் அங்கே கூட்டி வரவா?"

கடுப்பில் கன்னா பின்னா என்று சத்தம் போட ஆரம்பித்தேன். அவள் ஒரு மாதிரி என்னைப் பார்த்தாள். 

அவன் மிகவும் வற்புறுத்தவே, "எக்கேடு கெட்டு போ" என்றேன்.

ஏன் என்றால் அவன் ரூமுக்குத்தானே கூட்டி செல்கிறான், எனக்கு என்ன? நான் எப்பொழுதும் தனி அறையில்தான் தங்குவேன். அதனால் எனக்கு பிரச்சனையில்லை. சொல்லிப்பார்த்தும் திருந்தாததால் அவன் போக்கிற்கே விட்டுவிட்டேன்.

பின் ஹோட்டலுக்கு திரும்பினோம். பக்கத்து பக்கத்து அறைதான். நான் என் அறைக்கு சென்று கதவை பூட்டினேன். அவன் அவளை அழைத்துக்கொண்டு அவன் அறைக்கு சென்றான்.

ஒரு பத்து நிமிடம் கடந்திருக்கும். அப்பொழுதுதான் தூங்க ஆரம்பித்தேன். கதவு படபட என்று தட்டும் சத்தமும், காலிங் பெல் சத்தமும் ஒரு சேர கேட்டது. என்னவோ ஏதோ என்று கதவை திறந்தேன். பார்த்தால் தலை கலைந்த நிலையில் பஞ்சு.

"என்னடா?'' என்றேன் அதிர்ச்சியுடன்.

"மோசம் போயிட்டேண்டா?" என்றவன் ஓட ஆரம்பித்தான். 

"ஓடாத நில்டா" என்று நான் கத்த கத்த அவன் லிப்டை உபயோக்கிக்காமல் மாடிப்படியின் வழியே ஓட ஆரம்பித்தான்.

"ஏன் அப்படி ஓடினான்?" எனக்கு தெரியலை. 

உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க. சரியா சொல்றவங்களுக்கு அந்த கிளப் செல்ல ஒரு டிக்கெட் அனுப்புகிறேன்.

-முற்றும்


5 comments:

மென்பொருள் பிரபு said...

That lady is a man

திண்டுக்கல் தனபாலன் said...

அப்படியே இமயமலைக்கு சென்றால் சரி... ஹா... ஹா...

வரதராஜலு .பூ said...

//"ஏன் அப்படி ஓடினான்?" //

அது பொண்ணே இல்லியா?

மென்பொருள் பிரபு said...

//சரியா சொல்றவங்களுக்கு அந்த கிளப் செல்ல ஒரு டிக்கெட் அனுப்புகிறேன்.//

யாராவது அந்த நுழைவுச்சீட்டை ஜெயித்தார்களா?

Ahil said...

Shemale???