நடந்த
சோகத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்ப எத்தனையோ முயற்சிகள் செய்கிறேன். ஆனால்
முடியவில்லை. போன புத்தக கண்காட்சிக்கு வாங்கிய புத்தகங்களையே இன்னும் படிக்க வில்லை.
எழுதலாம் என்று உட்கார்ந்தால், மனம் ஒரு நிலையில் இல்லாததால், எழுத முடியவில்லை. தினமும்
எழுதிக்கொண்டு, படித்துக்கொண்டு இருந்த நாட்களை நினைத்தே காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறேன்.
ஆனால் ஒரு விசயத்தை மட்டும் என்னால் கடைபிடிக்க முடிகிறது.
14
வருடங்களாக தினமும் ஜிம் சென்று உடற்பயிற்சி செய்து வந்தேன். கடந்த ஒரு வருட காலமாக
செல்ல வில்லை. மீண்டும் அக்டோபர் மாதம் முதல் திருச்சியில் உள்ள நல்ல ஒரு ஜிம்மில்
தினமும் உடற்பயிற்சி செய்கிறேன். தனியாக ஒரு டிரையினர் வைத்துள்ளேன். அற்புதமான ஜிம்.
காரணம், நிறைய கல்லூரி பெண்களும், ஆண்டிகளும் உடற்பயிற்சி செய்ய வருகிறார்கள். ஒரு
நாள் செல்லவில்லை என்றால் மனம் படாத பாடு படுகிறது. முதல் மூன்று நாட்களுக்கு பிறகு
physical assessment எடுத்தார்கள். பின் டையட்டீசன் என்னிடம் கலந்து ஆலோசித்த பிறகு
ஒரு டயட் லிஸ்ட் கொடுத்தார்கள். அந்த பெண்ணிற்கு ஒரு 25 வயதிற்குள் இருக்கலாம். நான்
ஏற்கனவே குறைந்த வெயிட். இருந்தாலும், என்னுடைய குறிக்கோள் General Fitness &
Belly reduce என்று கொடுத்திருந்தேன்.
தினமும்
மிக கஷ்டமான அந்த டயட்டை பின் பற்றினேன். திடீரென எல்லோரும் என்னை பார்த்து,
“என்ன
ஆச்சு உலக்ஸ்? ஏதும் உடம்பு சரியில்லையா” என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள். வெயிட்
பார்த்தால் பட பட வென்று 4 கிலோ குறந்துவிட்டது. மீண்டும் அந்த டயட்டீசன் பெண்ணிடம்
கேட்டேன். உடனே அவள், “நீங்கள் பாலோ செய்ய வேண்டாம்” என்று கூறிவிட்டாள்.
சென்ற
மாத கடைசியில் மீண்டும் ஒரு physical assessment எடுத்து பார்த்தபோது முதல் மாதத்தில்
செய்ததைவிட என்னால் மூன்று மடங்கு அதிகமாக எல்லா டெஸ்ட்டையும் செய்ய முடிந்தது. ஆனால்
whole body fat குறைந்து விட்டது.
“என்னங்க
இப்படி ஆயிடுச்சு?’’ என்று டிரையினரை கேட்டால்,
‘சார்,
இங்கு வரும் அனைவரும் weight loss வருகிறார்கள். நிறைய செலவு செய்கிறார்கள். குறைக்க
முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். உங்களால் இவ்வளவு குறைக்க முடிந்ததை நினைத்து சந்தோசப்படுங்கள்
சார்” என்றார்.
நான்
சொன்னேன், “அது சரி. ஆனால் இழந்த வெயிட்டை எப்படி திரும்ப பெறுவது?”
நீண்ட
ஆலோசனைக்கு பிறகு, Muscle gain & belly fat reduce க்கு புது விதமான Workout
Schedule மற்றும் புது diet plan கொடுத்துள்ளார்கள். இப்போது எந்நேரமும் புரோட்டின்
உணவு சாப்பிட்டுக்கொண்டும், Workout செய்து கொண்டும் இருக்கிறேன்.
சில
சமயம் தோணும், “இது தேவையா?”
ஆனால்
தேவை என்று மனம் சொல்கிறது.
01. எப்பொழுதும் என்னால் உற்சாகமாக இருக்க முடிகிறது.
02. உடம்பு வலியிடனும், அசதியுடனும் இருப்பதால்
இரவு நல்ல தூக்கம் வருகிறது.
03. செக்ஸ் இல்லாமல் இருக்க முடியுமா? என்று ஒரு
காலத்தில் நினைத்தேன். இப்பொழுது அந்த நினைவே வருவதில்லை.
என்ன
செய்வது? சூழ்நிலைக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்வதுதானே வாழ்க்கை!
2 comments:
what happened. After long time i found your blog.
Please share.
Raj
what happened. After long time i found your blog.
Please share.
Raj
Post a Comment